புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மே, 2023

ஜேர்மனிக்கு துரோகம் செய்ததா உக்ரைன்

www.pungudutivuswiss.com

ஜேர்மனியின் நோர்ட் ஸ்ட்ரீம் மற்றும் நோர்ட் ஸ்ட்ரீம்-2 குண்டுவெடிப்பிற்கு உக்ரேனியர்கள் காரணமாக இருக்கலாம் என அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த Nord Stream மற்றும் Nord Stream 2 எரிவாயு குழாய் வெடிப்புக்கு இரண்டு உக்ரேனியர்கள் பொறுப்பாக இருக்கலாம் என ஜேர்மனியின் Suddeutsche Zeitung நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜேர்மனியின் நோர்ட் ஸ்ட்ரீம் மற்றும் நோர்ட் ஸ்ட்ரீம்-2 குண்டுவெடிப்பிற்கு உக்ரேனியர்கள் காரணமாக இருக்கலாம் என அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த Nord Stream மற்றும் Nord Stream 2 எரிவாயு குழாய் வெடிப்புக்கு இரண்டு உக்ரேனியர்கள் பொறுப்பாக இருக்கலாம் என ஜேர்மனியின் Suddeutsche Zeitung நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது

நோர்ட் ஸ்ட்ரீம் குண்டுவெடிப்பிற்கு காரணமான சந்தேக நபர்கள் அந்த இடத்தை அடைய பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஆண்ட்ரோமெடா படகை (Andromeda yacht) வாடகைக்குக் கொடுத்த நிறுவனத்தை ஜேர்மனியின் பெடரல் கிரிமினல் பொலிஸ் அலுவலகம் கண்டுபிடித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Feeria Lwowa என்கிற போலந்து நாட்டைச் சேர்ந்ததாக கூறப்படும் அந்த வடக்கைப் படகு நிறுவனம் ஒரு போலி நிறுவனம் என்றும், அது 2016-ல் நிறுவப்பட்டது மற்றும் இரண்டு உக்ரைனியர்களால் பதிவு செய்யப்பட்டது என்றும் அந்த செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் குறித்து மேலும் தெரிந்துகொள்ள, ருஜென் தீவை தலைமையிடமாகக் கொண்ட ஜேர்மனியின் Mola Yachting படகு நிறுவனத்திற்கு, டிராவல் ஏஜென்சி மூலம் அஞ்சல் அனுப்பபட்டது.

ஆனால், அந்த நிறுவனம் குறித்து அசாதாரணமான தகவல் எதையும் கிடைக்கவில்லை, ஆனால் 2020-ல், கோவிட்-19 தொற்றுநோயின் உச்சத்தின் போது, ​​அந்த நிறுவனம் திடீரென்று 2.8 மில்லியன் யூரோக்களை சம்பாதித்துள்ளது.

தற்போது, அந்த ​​நிறுவனம் Kerch-ஐ சேர்ந்த நடுத்தர வயதுப் பெண்ணுக்குச் சொந்தமானது, அவரது உக்ரேனிய பாஸ்போர்ட் போலந்து நிறுவனத்தின் ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 55 வயதான உக்ரைனிய பெண் ஒருவர் செப்டம்பர் 2021 முதல் நிறுவனத்தின் இயக்குநராகவும் பங்குதாரராகவும் உள்ளார்.

இந்த அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர், ஜேர்மன் ஃபெடரல் உளவுத்துறையின் (BND) தலைவர் புருனோ கால், குண்டுவெடிப்புகளுக்கு காரணமானவர்களை எந்த உளவுத்துறையும் தற்போது குறிப்பிட முடியவில்லை.

தற்போது இதுகுறித்து தீவிர விசாரணை நடந்துக்காரும் நிலையில், "உலகின் எந்த நாடும், எந்த புலனாய்வு அமைப்பும் தற்போது இதை (நோர்ட் ஸ்ட்ரீம்ஸ் நாசவேலை) யாரிடமும் குறிப்பாக யாராலும் கூற முடியாது," என்று ஜேர்மன் ஃபெடரல் உளவுத்துறையின் தலைவர் கூறினார்,

நார்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் நார்ட் ஸ்ட்ரீம் 2 பைப்லைன்கள் ரஷ்ய வடமேற்கு கடற்கரையிலிருந்து வடகிழக்கு ஜேர்மனியில் உள்ள லுப்மின் வரை 760 மைல்கள் நீண்டுள்ளன. முதலாவது 2011-ல் முடிக்கப்பட்டது மற்றும் 12 பில்லியன் டாலருக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்டது, அதே சமயம் Nord Stream 2 ஆனது US, UK மற்றும் உக்ரைனின் பின்னடைவை மீறி 2021-ல் கட்டி முடிக்கப்பட்டது.

ad

ad