வெள்ளி, அக்டோபர் 30, 2015

ஐஎஸ்எல் கால்பந்து: கொல்கத்தாவை டெல்லி டைனமோஸ் அணி வெற்றி
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் டெல்லி டைனமோஸ் அணி, நான்காவது வெற்றியை பதிவு செய்தது.
 
கொல்கத்தாவில் 41 ஆயிரம் ரசிகர்களுக்கு மத்தியில் நடைபெற்ற போட்டியில், டெல்லி அணி, அத்லெடிக்கோ டி கொல்கத்தா அணியை எதிர்த்து விளையாடியது.
 
ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் பலிக்கவில்லை. ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் 90-வது நிமிடத்தில் டெல்லி வீரர் டாஸ் சாண்டோஸ் கோல் அடித்தார்.
 
இதன் மூலம் ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் டெல்லி அணி வெற்றி பெற்றது. நடப்புத் தொடரில் நான்காவது வெற்றியை பதிவு செய்த டெல்லி அணி 12 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.