புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 அக்., 2016

புலத்து தமிழரும்தாயகத்துக்கு வாக்களிக்க கூடிய சட்டமூலம் வரும்

வெளிநாட்டில் தங்கியுள்ள இலங்கை பிரஜைகள், வாக்களிப்பதற்கு தகுதியுடையவர்கள் என்பதனை தேர்தல்கள்
ஆணைக்குழு ஏற்றுக்கொண்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் குறித்த முறைமையை இலங்கை தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் நடைமுறைப்படுத்த உள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த முறையினை அமுல்படுத்த வெளிநாட்டில் உள்ள இலங்கை பிரஜைகள் வாக்குப் பதிவு செய்வதற்கான சட்டங்களை வகுக்க வேண்டிய நிலைமை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
எனினும் இதற்குத் தேவையான சட்டங்களை வகுப்பதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad