புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜன., 2020

கூண்டோடு இடமாற்றம்:ஜனாதிபதி பணிப்பின் பேரிலேயே?


வடக்கு மாகாணத்தில் பணியாற்றிய தமிழ் பொலிஸார் தொடர்பில் ஜனாதிபதிக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்தே அவர்களை கூண்டோடு இடமாற்ற பணிப்பு விடுக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வடக்கில் பணியாற்றும் 300 தமிழ்ப் பொலிசாரையும் ஒரே நாளில் இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


வடக்கின் யாழ்ப்பாணம் , காங்கேசன்துறை மற்றும் கிளிநொச்சி ,வவுனியா ,முல்லைத்தீவு மற்றும் மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் தற்போது 300 தமிழ்ப் பொலிசார் பணியாற்றுகின்றனர்.

இதில் யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை அத்தியட்சகரின் கீழ் 150 தமிழ்ப் பொலிசாரும் ஏனைய 4 பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுகளின் கீழ் 150 தமிழ்ப் பொலிசாரும் பணியாற்றிய நிலையில் யாழில் பணியாற்றிய பொலிசார் வெளி மாவட்டங்களிற்கும் வெளி மாவட்டத்தில் பணியாற்றியவர்கள் யாழ்ப்பாணத்திற்கும் இடமாற்றப்பட்டுள்ளனர்.

ad

ad