புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஆக., 2013

ஈஸ்ட்ஹாம் தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினருடன் பிரித்தானியத் தமிழர் பேரவையின் சந்திப்பு
பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தில் பிரித்தானிய பிரதம மந்திரி டேவிட் கமரூனை கலந்து கொள்ள வேண்டாமென பல்வேறு வழிகளில் பிரித்தானியத் தமிழர் பேரவை முயற்சி செய்த வண்ணம் உள்ளது.
புலிகளின் ஓடுபாதையை பயன்படுத்திய முதல் வெளிநாட்டு பிரமுகர் நவநீதம்பிள்ளை
விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட இரணைமடு ஓடுபாதையில் இருந்து, சிறிலங்கா விமானப்படை விமானம் மூலம், ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை கிழக்கிற்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
கட்டாரில் கண்டெடுத்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த இலங்கை இளைஞருக்கு பாராட்டு
கட்டார் நாட்டிலுள்ள வர்த்தக நிலைய கட்டடத் தொகுதி ஒன்றிலுள்ள வாகன தரிப்பிடத்தில் கண்டெடுத்த 90 ஆயிரம் கட்டார் ரியால் (33 லட்சம் ரூபா) பணத்தை பொலிஸில்
இலங்கை கடவுச்சீட்டுகளுக்கு கைவிரல் அடையாளம் அறிமுகம்!- 155 வருட தந்திச் சேவை நிறுத்தப்பட உள்ளது
இலங்கை கடவுச்சீட்டுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் கைவிரல் அடையாளமிடும் முறையை அறிமுகப்படுத்த உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
விடுதலைப்புலிகளுக்கு வாகன தேவைகளை பூர்த்தி செய்த கொழும்பு வர்த்தக நிலையம் முற்றுகை
விடுதலைப்புலிகள் போர் காலத்தில் தமது வாகன தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும் வாகனங்களுக்காக உதிரிபாகங்களை கொள்வனவு செய்யவும் கொழும்பில் நடத்தி வந்த வர்த்தக நிலையம் ஒன்றை முற்றுகையிட்டப்பட்டுள்ளது.
இதெல்லாம் ஒரு காரணமா?  : விஜயகாந்துக்கு கோர்ட் எச்சரிக்கை
2012 அக்டோபர் 26ம் தேதியன்று கேப்டன் டிவியில் ஒளிபரப்பான செய்தியில் ‘மக்கள் பணத்தை பாழாக்கிய ஜெயலலிதாவின் விளம்பர வெறி’ என்ற தலைப்பில் செய்தி வெளியானது. இந்த செய்தி முதல்வரின்
எழிலன் குறித்து எந்த தகவலும் இல்லை; இராணுவப் பேச்சாளர் தெரிவிப்பு 
விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த எழிலன் குறித்து எந்த தகவலும் இல்லை என சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர்
"வடக்கின் அபிவிருத்தியை மதிப்பிட நான் வரவில்லை"
சந்திரசிறியினதும் விஜயலக்ஸ்மியினதும் பிரசங்கத்திற்கு பதிலளித்தார்    நவ­நீ­தம்­பிள்ளை

வட­ மா­காண பகு­தி­களில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ளகட்­டு­மா­னப்­­ணிகள் மகிழ்ச்சி அளித்­தாலும் அதனைமதிப்­பீடு செய்­­தற்­காக நான் இலங்கை வர­வில்லை.

மனைவிக்கும் மகனுக்கும் எமனான தந்தை

கணவன் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்தியபோது மோட்டார் சைக்கிள் பாதையை விட்டு ஆற்றில் பாய்ந்ததால் இரண்டரை வயது ஆண் குழந்தையும் மனைவியும் உயிரிழந்த சம்பவம்

36 வருடங்களுக்கு பின்னர் இலங்கைக்கு வந்த முதல் தென்கொரிய பிரதமர்

36 வருடங்களுக்கு பின்னர் தென்கொரிய பிரதமர் உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

கொமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க இரத்தக் கையெழுத்து

இலங்கை அரசை கொமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்கிட இந்தியா உறுப்பு நாடு என்ற முறையில் அழுத்தம் கொடுக்க வேண்டுமென்றும், கொமன்வெல்த் மாநாட்டை இந்திய அரசு ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வேண்டுமென்றும் இந்திய பிரதமருக்கு அனுப்பி வைக்க இந்தியப் பூரான்கள் இயக்கம் சார்பில் இரத்தக் கையெழுத்து இயக்கம் இன்று காலை புதுச்சேரி தலைமை தபால் நிலையத்தில் நடைபெற்றது.

நவநீதம்பிள்ளையின் பயணம், நீதியை வழங்குமா?
நவநீதம்பிள்ளையின் பயணம் நீதியை வழங்குமா என உலகத் தமிழர்கள் எதிர்ப்பார்த்திருப்பதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மன்னார் மற்றும் வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பொதுக்கூட்டம
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்டம் மன்னார் பொது விளையாட்டரங்கில் நேற்று மாலை இடம்பெற்றது.
இந்த கூட்டத்திற்கு முன்பதாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசெப் ஆண்டகையை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் சந்தித்து கலந்துரையாடினார்கள்.
நவநீதம்பிள்ளை திருமலை விஜயம் - மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை திருகோணமலைக்கு விஜயம் செய்துள்ளார்.
அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு எதிரில் மக்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் முதலாவது பிரமாண்டமான தேர்தல் பிரசாரக் கூட்டம் எழுச்சிபூர்வமாக நடைபெற்று நடைபெற்றது.
கடுமையான இராணுவ அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் அதிகளவான மக்கள் கலந்து கொண்டனர்.
அங்கஜனின் தந்தை யாழ். பொலிஸாரால் கைது- த.தே.கூட்டமைப்பின் வேட்பாளர் தம்பிராசா சாகும்வரை உண்ணாவிரதம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜனின் தந்தையார் இராமநாதன், சுதந்திரக் கட்சியின் சக வேட்பாளர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுவிஸில் பரத், பாவனா மற்றும் பல கலைஞர்கள்! அரங்கை நிறைத்த மக்கள் கூட்டம்!
சுவிஸில் பரத், பாவனா மற்றும் பல கலைஞர்கள் கலந்து சிறப்பித்த இதயம் துடிதுடிக்க என்னும் கலைநிகழ்ச்சியில் நடனப் போட்டி, அழகுராணிப் போட்டி என்பன நடைபெற்றதுடன் இன்னும் பல கலை நிகழ்வுகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கோச்சடையானில் எஸ்.பி.பி பாடிய பாடல்(வீடியோ)!

கோச்சடையான் திரைப்படத்தின் ரிலீஸுக்கான கடைசி கட்ட பணிகள் வேகமாக நடந்துவருகின்றன. கோச்சடையான் திரைப்படத்தின் எந்த ஒரு தகவலும் எந்த விதத்திலும் வெளியாகிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது கோச்சடையான் டீம். 


ஆனாலும் ரசிகர்களை வருத்தப்பட வைக்கக்கூடாது என்பதால் அவ்வப்போது கோச்சடையான் திரைப்படத்தின் ஒரு வீடியோ க்ளிப்பை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விப்பதோடு, திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துவருகின்றனர். கடைசியாக கோச்சடையான் டீம் மூலமாக ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸிங் செய்யும் வீடியோ க்ளிப் வெளியிடப்பட்டது.


           ""ஹலோ தலைவரே... போன வாரம்தான் தமிழ்நாட்டு மந்திரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டாங்க. இப்ப மறுபடியும் மூச்சுத் திணறிக்கிட்டிருக்காங்க.''

விஜய் போலிசாக நடிக்கும் ஜில்லா படஷூட்டிங்கில் நடிகையிடம் சில்மிஷம்!

'லைவா’ வெளியீட்டு சிக்கலால் ’ஜில்லா’ படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் இருந்தார் விஜய். ரிலீஸுக்கான தடை நீங்கிய தகவல் கிடைத்ததுமே சென்னை பின்னி மில் வளாகத்தில் ‘ஜில்லா’ படப்பிடிப்பு சுறுசுறுப்பாகத் தொடங்கியது. 




                 கஸ்ட் 25. தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாள். ஒவ்வொரு வருடமும் இந்த நாளை "இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே' என்கிற முழக்கத்துடன் வறுமை ஒழிப்புத் தினமாக கொண்டாடுகிறார்கள் தே.மு.தி.க.தொண்டர்கள். அன்றைய நாளில், ஏழை எளியவர்களுக்கு பல்வேறு உதவிகளை விஜயகாந்த் தொடங்கி அவரது கட்சி நிர்வாகிகள் வரை செய்து மகிழ்கிறார்கள்

28 ஆக., 2013

பாதிக்கப்பட்ட மக்களுக்காக எனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்துவேன்! முள்ளிவாய்க்கால், கேப்பாப்பிலவு, புதுமாத்தளன் மக்களிடம் நவநீதம்பிள்ளை உறுதி
காணா­மல்­போனோர் விவ­காரம் உட்­பட யுத்­தத்தின் போது பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிரச்­சி­னை­கள் தொடர்பில் ஆழ­மாகக் கவனம் செலுத்தி அவற்­றுக்கு தீர்வைப் பெற்­றுக்­கொ­டுக்க எனது முழு அதி­கா­ரத்­தையும் பயன்­ப­டுத்­துவேன். பாதிக்­கப்­பட்ட உங்­க­ளது ஆதங்­கங்கள் எனக்கு புரி­கின்­றது என்று ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை தெரி­வித்­துள்ளார்.
முள்­ளி­வாய்க்கால்,
அங்கஜனின் தந்தை யாழ். பொலிஸாரால் கைது
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜனின் தந்தையார் இராமநாதன், சுதந்திரக் கட்சியின் சக வேட்பாளர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜிம்பாப்வே சாதனை : பாகிஸ்தானை வென்றது
ஜிம்பாப்வே அணி கடந்த 15 ஆண்டுகளில் முதல்முறையாக பாகிஸ்தானை வென்று சாதனை படைத்து ள்ளது, செவ்வாய்க்கிழமை இன்று ஹராரே ஸ்போர்ட்ஸ் க்ளப் மைதானத்தில் நடந்த முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஜிம்பாப்வே இந்த சாதனையை நிகழ்த்தி யுள்ளது.

நவிபிள்ளை கொடுக்கப்போகும் அறிக்கை சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு வழிகோலும் : சீமான்

இன அழித்தலுக்கான நியாயத்தை வழங்கக்கூடிய சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு வழிகோலும் வகையில், ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அறிக்கை வழங்குவார்

தாயாரின் ஆசைநாயகனால் ஒரு வயது பாலகி பாலியல் ரீதியில் துன்புறுத்தி கொலை

தியத்தலாவையில் எட்டு வயதுச் சிறுமி பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு ஒரு சில தினங்களிலேயே ஒரு வயதும் இரு மாதங்களைக் கொண்ட


பிரபலமான தமிழீழப் பாடகன் எஸ்.ஜி.சாந்தன் ஆயுத அடக்குமுறையில் இருந்து விடுபடுகிறாரா.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரசார கீதத்தினை  பாடி புரட்சி செய்துள்ளார் 
தன்மானத் தமிழா.. நீ தலை நிமிர்ந்து வாடா!…
தன்மானத் தமிழா நீ!
தலை நிமிர்ந்து வாடா!!
இந்த மண்மீது அரசாள!
உனக்கென்ன தடையா!!
பாராளுமன்றத்திலும்!
ஒளிக்கின்றவன்!!
இவன் பரம்பரையே வீட்டுக்கு
வாக்களிப்பவர்!!
(தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பொதுக்கூட்டம் 26.08.2013 அன்று வவுனியா குருமண்காடு, கலைமகள் விளையாட்டரங்கில் இடம்பெற்றதைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எழுச்சிப்பாடல் இறுவெட்டு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த எழுச்சிப் பாடலானது உள்ளுர் கலைஞர்களாலேயே இயற்றப்பட்டு, இசையமைக்கப்பட்டு பாடப்பட்ட பாடலாகும்).
(இப்பாடலின் வீடியோப் பதிவை “அதிரடி” இணையத்துக்காக கூட்டமைப்பின் இளைஞர் அணியுடன் இணைந்து உருவாக்கியவர் வவுனியா “ஜெயம் கொண்டான்”)
பாடலுக்கான இசை… “இசை இளவரசன்” கந்தப்பு ஜெயந்தன்.
பாடலுக்கான வரிகள்… “புரட்சிக் கவிஞன்* மாணிக்கம் ஜெகன். 
பாடியவர்… “ஈழத்துப் புயல்” எஸ்.ஜி.சாந்தன்.
f
வேலூரிலிருந்து சென்னைக்கு 97 நிமிடங்களில் பயணித்த 'இதயம்'

விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் பாகங்களானது வேலூர் சிஎம்சி மருத்துவமனையிலிருந்து சென்னைக்கு 97 நிமிடத்தில் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாண சபையில் குழப்பம்
கிழக்கு மாகாண சபையில் இன்று குழப்பநிலை ஏற்பட்டதால் சபை நடவடிக்கைகள் 10 நிமிடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழில் அங்கஜனின் தந்தை கொலைவெறித் தாண்டவம்!: சக வேட்பாளரின் ஆதவாளர்கள் மீது துப்பாகிச் சூடு
யாழ்.குடா நாட்டில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களுக்கிடையில் முறுகல் நிலை முற்றியதில், வடக்கின் மேர்வின் சில்வா என வர்ணிக்கப்படும் அங்கஜனின் தந்தை இராமநாதன், சக வேட்பாளரின் ஆதரவாளர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதிக்கு நவநீதம்பிள்ளை விஜயம்! - மக்கள் கண்ணீர் மல்க கதறியழுதனர்
எங்கள் பிள்ளைகளை இராணுவத்திடம் ஒப்படைத்தோம். எங்கள் பிள்ளைகளை மீட்டுத்தாருங்கள் இல்லையென்றால் இந்தக் கொலைகாரர்களை சர்வதேசத்தின் முன்னால் நிறுத்துங்கள் முள்ளிவாய்க்காலில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஜ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர்

27 ஆக., 2013

வடமாகாண சபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோதராதலிங்கம் தலைமையில் இடம்பெறவுள்ளது. இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளருமான சி.வி.விக்கேஸ்வரன், இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிகாந்தா, வீ.ஆனந்தசங்கரி, ரி.சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளனர். இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுகின்ற 8 வேட்பாளர்களின் அறிமுகமும் இடம்பெறவுள்ளது.

பிரச்சாரப்பிரிவு
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு


சிவகார்த்திகேயன் குடும்பத்தில் குழப்பம் : காரணம் பிந்துமாதவி?

சப்ரகமுவையில் இணைந்து செயற்பட்டமைக்கு இதொகா தந்த பரிசுதான் என்மீது கொட்டகலையில் நடத்தப்பட்ட தாக்குதல் - மனோ

குறைந்த தொகை தமிழர்கள் வாழும் மாவட்டங்களில் தமிழ் பிரதிநிதித்துவம் பெற்றுகொடுக்க அரசியல் பேதங்களை மறந்து இணைந்து செயல்பட வேண்டும். இத்தகைய தமிழின உணர்வுடன் இரத்தினபுரி,

வைத்தியர் என்ற போர்வையில் சட்டவிரோதமான முறையில் பெருந்தொகையான கருக்கலைப்பு மற்றும் கருத்தடை மாத்திரைகளை இலங்கைக்கு கொண்டுவந்த நபரொருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கருக்கலைப்பு மாத்திரைகள் 17,740 , கருத்தடை மாத்திரைகள் 3,200, வயகரா மாத்திரைகள் 1000 ஆகியவற்றை கொண்டுவந்துள்ளார்.

இலங்கைக்கும் பெலாரசுக்குமிடையில் ஏழு உடன்படிக்கைகள் மற்றும் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் நேற்று கைசாத்திடப்பட்டுள்ளன.

தற்பொழுது பெலாரஸ் நாட்டில் மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள 

ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட நகை, உட்பட அசையும் சொத்தை ஒப்படைக்கக் கோரி திமுக புதிய மனு
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் புதிய மனு ஒன்றை பெங்களூரு சிறப்பு
நரிக்குறவர் / குருவிக்காரர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

நரிக்குறவர் அல்லது குருவிக்காரர் என்றழைக்கப்படும் இனத்தவரை பழங்குடியினருக்கான பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

ஆற்காடு வீராசாமி ஆஸ்பத்திரியில் அனுமதி
திமுக முதன்மை செயலாளர் ஆற்காடு வீராசாமி சென்னை அண்ணாநகரில் உள்ள வீட்டில் தினமும் காலையில் நடைபயிற்சி செல்வார். நடைபயிற்சி செல்லும் போது உதவியாளர் ஒருவர் துணைக்கு செல்வார். நேற்று முன்தினம்
கிளிநொச்சியில் நவி. பிள்ளையைச் சந்திக்க காத்திருந்தவர்களை ஓடஓட விரட்டி பஸ்களில் ஏற்றிய பொலிஸார்
கிளிநொச்சியில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையைச் சந்நிக்கவிடாது காணாமல்போனவர்களது உறவுகளை பொலிஸாரும், புலனாய்வாளர்களும் இணைந்து  விரட்டியடித்துள்ளனர்.
காணாமல் போனவர்களின் உறவினர்களை நவநீதம்பிள்ளை சந்திக்கவிடாது தடுத்தனர் இலங்கை அரச பிரதிநிதிகள்!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை யாழ்ப்பாணம் வருகை தரவுள்ள நிலையில் யாழ்.நூலகத்திற்கு முன்னால் காணாமல் போனவர்களின் உறவினர்கள் அவரைச் சந்திப்பதற்காக காத்து நின்ற வேளை அரச பிரதி நிதிகளினால் நவநீதம்பிள்ளை தடுக்கப்பட்டுள்ளார்.
யாழ்.நுலகத்தைப் பார்வையிடுவதற்கு நவநீதம்பிள்ளை வந்த போது காணாமல் பேனவர்களின்
போரின் போது காணாமல் போனவர்கள் தொடர்பில் ஐ.நா விசேட கவனம் செலுத்தும்!- யாழில் நவநீதம்பிள்ளை
இறுதிக் கட்டப் போரின் போது காணாமல் போனவர்கள் தொடர்பில் ஐ.நா விசேட கவனம் செலுத்தியுள்ளதாக நவநீதம்பிள்ளை தன்னைச் சந்தித்த போது தெரிவித்ததாக யாழில் எழிலனின் மனைவி ஆனந்தி தெரிவித்துள்ளார்.
யாழில் நவநீதம்பிள்ளைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை வேட்பாளர் எழிலனின் மனைவி ஆந்தியைச் சந்தித்து பேச்சுவார்தை நடத்தியதாகவும், இதில் காணாமல் போனவர்கள் தொடர்பில் ஜ.நா விசேட கவனம் மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அனந்தி நவநீதம்பிள்ளையை சந்தித்தார்! காணாமல்போனோர் தொடர்பில் ஐ.நா விசேட கவனம் செலுத்தும் என உறுதி
யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி எழிலனின்
அலை அலையாகத்திரண்ட மக்கள் வெள்ளம் வவுனியா கலைமகள் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மாபெரும் வேட்பாளர் அறிமுக நிகழ்வில்.....
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்டத்திற்கான மாபெரும் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் இன்று வவுனியா குருமண்காடு கலைமகள் விளையாட்டரங்கில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது
அம்பாறை தங்கவேலாயுதபுரத்தில் பௌத்த விகாரை அமைக்கும் திட்டத்தை நிறுத்துக: யோகேஸ்வரன் எம்.பி. அரசாங்க அதிபருக்கு மகஜர்
அம்பாறை மாவட்டத்தில் பௌத்த அடையாளங்களோ பௌத்த குடும்பங்களோ இல்லாத தங்கவேலாயுதபுர பிரதேசத்தில் பௌத்த பிக்குகள் மற்றும் இனவாதிகள் இணைந்து பௌத்த விகாரையொன்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதை ஒதுபோதும் அனுமதிக்க முடியாது என பாராளுமன்ற

யாழில் கடந்த இரண்டு வாரங்களுள் 17 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு

யாழ். மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரத்துக்குள் மட்டும் 17 தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அம் முறைப்பாடுகள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கைகளை

சுவிட்சர்லாந்தில் தந்தை ஒருவர் தனது இரண்டு குழந்தைகளை கடத்தி கொண்டு சென்று எரித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் சிம்மன்போடிலி(Simmenbödli-SG) என்ற இடத்தில் உள்ள இரண்டு மற்றும் ஐந்து வயது குழந்தைகள் இறந்து கிடந்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் தந்தை ஒருவர் தனது இரண்டு குழந்தைகளை கடத்தி கொண்டு சென்று எரித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் சிம்மன்போடிலி(Simmenbödli-SG) என்ற இடத்தில் உள்ள இரண்டு மற்றும் ஐந்து வயது குழந்தைகள் இறந்து கிடந்துள்ளனர்.
நைஜீரியாவில் 44 கிராமத்தினர் கழுத்தறுத்து படுகொலை: தீவிரவாதிகள் அட்டகாசம்

வடகிழக்கு நைஜீரியாவின் கிராமத்துக்குள் புகுந்த போகோ ஹரம் தீவிரவாதிகள் கிராமத்தினர் 44 பேரின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதல் விவகாரம்: இத்தாலியில் இலங்கை சிறுமி தற்கொலை
இத்தாலியின் மெஸ்சினா நகரில் வசித்து வந்த இலங்கையை சேர்ந்த 15 வயதான சிறுமி கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இத்தாலி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுமி தனது ஆசிரியரான 19 வயதான இளைஞருடன் ஏற்படுத்தி கொண்ட காதல் தொடர்பை பெற்றோர் எதிர்த்தன் காரணமாகவே சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பொதுக்கூட்டம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பொதுக்கூட்டம் வவுனியா குருமண்காடு கலைமகள் திறந்தவெளி விளையாட்டரங்கில் இன்றுமாலை 5மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.
கூட்டமைப்பின் ஐந்து
பிரபாகரன் நடாத்திய வீரம்செறிந்த போராட்டமே தமிழினத்தை தலைநிமிர வைத்தது: வீரபுரத்தில் ரதன் முழக்கம்
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீரம் செறிந்த விடுதலைப் போராட்டமே தமிழினத்தை தலைநிமிர வைத்துள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணித்தலைவரும் வடமாகாணசபை வேட்பாளருமாகிய எம்.எம். ரதன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான தேர்தல் அலுவலகத்தை வீரபுரத்தில் திறந்து வைத்து உரையாற்றுகையில் தெரிவித்தார்.
இந்நிகழ்விற்கு செட்டிகுளம் பிரதேசசபையின் உப தலைவர் எஸ். சந்திரன் தலைமை தாங்கினார்.  இந்நிகழ்வில் அலுவலகத்தினை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நாடாவை வெட்டி திறந்து வைத்தார்.



தர்சனானத் பரமலிங்கம் அவர்கள் கூட்டமைப்பு பிரசாரத்துக்கு சென்ற போது அவதானித்தது. எமது மக்களின் தேசிய உறுதி நிலைப்பாட்டை.

இடம்: வடமராட்சி, பருத்தித்துறை தொகுதி, புலோலி காந்தியூர்

இறுதிப் போரில், அமெரிக்கா மரைன் படைகளை அனுப்பி புலித் தலைவர்களை காப்பாற்ற எத்தனித்தது. அந்த திட்டத்திற்கு ராஜபக்ச அரசு எதிர்ப்பு தெரிவித்தது, இந்திய அரசு ஆதரிக்கவில்லை. இந்தியாவின் அரசியல் செல்வாக்குக்கு உட்பட்ட நாடொன்றில், அமெரிக்க தலையீடு ஏற்படுவதை இந்தியா விரும்பவில்லை. அமெரிக்காவின் திட்டம் நிறைவேறி இருந்தால், இந்தியாவால் எந்தக் காலத்திலும் ஈழத் தமிழர்களுக்கு உதவ முடியாமல் போயிருக்கும்." என்கிறார் முன்னாள் இந்திய உளவுத்துறை அதிகாரி கேர்ணல்ஹரிஹரன் தந்தி டிவி நேர்காணலில் கேர்னல் ஹரிஹரன்.

ஆளும் தரப்பின் எடுபிடிகளாக பொலிஸ்! கூட்டமைப்பு வேட்பாளரை கொலை செய்ய முற்பட்ட பொலிஸ் அதிகாரி!

யாழ்.பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி சமன்சிகாரா தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை வேட்பாளர் தம்பிராசா.
குற்றஞ்சாட்டியுள்ளார்.யாழ்.நகரப்பகுதியினில் தன் மீது நடத்தப்பட்ட சுதந்திரக்கட்சி ஆதரவாளர்களது தாக்குதல் பற்றி நியாயம் கேட்கச்சென்றிருந்த வேளையினிலேயே தன்னை கொலை செய்ய அவர் முயற்சித்ததாக தம்பிராசா மேலும்

ஆனந்திக்காக அதிர்ந்த வீரசிங்கம் மண்டபம்!!

யாழ்ப்பாணத்தினில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பெறப்போகும் ஆசனங்களே அறுதிப்பெரும்பான்மையின்மையினை பெற்று ஆட்சி அமைக்க முடியுமா? இல்லையா? என்பதை தீர்மானிக்கும்.ஆனாலும் இதை செய்ய

26 ஆக., 2013

முள்ளிவாய்க்காலில் முகாம்களை அவசரமாக அகற்றிய படையினர்: நவிப்பிள்ளை வருகையின் எதிரொலி?

இறுதிக்கட்டச் சமர் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் போர் எச்சங்களை முற்றாக அகற்றும் பணிகள் கடந்த சில நாட்களாக மிகத்
ஐ.நா. அலுவலகம் முன்பாக “இராவணபலய’ ஆர்ப்பாட்டம்; பொலிஸாருடன் முறுகல் 
ஐ.நா. உரிமைகள் பேரவை உயர் ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம்  மேற்கொண்டுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து
இலங்கையில் யுத்தம் முடிந்தும் பயங்கரவாதச் சட்டம் ஏன் இருக்கிறது; ஹக்கீமிடம் நவிப்பிள்ளை கேள்வி 
தடுப்புக் காவலில் உள்ளவர்களின் பல வழக்குகள் ஏன் நிலுவையில் இருக்கின்றது அவர்களை பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்படாமை தொடர்பிலும் ஐ.நா மனித உரிமையாளர்  கேட்டறிந்தார் என ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

சோனியாகாந்தி
மருத்துவமனையில் அனுமதி
 

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.  நேற்று இரவு முதல் சோனியாவுக்கு காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது.  
யாழ் நகரில் தடம் பதித்தார் நவநீதம்பிள்ளை! நாளை கிளிநொச்சிக்கு பயணம்!
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார். 

விசேட விமானத்தின் மூலமாக யாழ் சென்ற ஆணையாளர் 7.00 மணியளவில் தரையிறங்கினார்.
விமானம் மூலம் பலாலி வந்தடைந்த அவர் இன்று மாலை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு விஜயம்

’தலைவா’ படத்தயாரிப்பாளர் மிரட்டல் :
 சத்யராஜ் பட இயக்குநர் கமிஷனரிடம் பரபரப்பு புகார்
 

‘உளவுத்துறை’, ‘ஜனனம்’ போன்ற படங்களை இயக்கியிருப்பவர் ரமேஷ் செல்வன். தற்போது சத்யராஜ் நடிப்பில் ‘கலவரம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், இவர் சென்னை கமிஷனர் அலுவலக த்தில் ‘தலைவா’ திரைப்பட தயாரிப்பாளர் மீது புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார். 


               சுஜூத் சர்க்கார் இயக்கிய ஜான் ஆப்ரஹாம் நடித்துள்ள "மெட்ராஸ் கஃபே' என்ற ஹிந்தி திரைப்படத்தை சென்னையில் வெளியிடுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழ் தேசிய அமைப்புகளும் ஈழ ஆதரவு அமைப்புகளும் மிகக் கடுமையான கண்டனங்களை முன்வைத்து வருகின்றன. கலைஞர், வைகோ, ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் எதிர்க் கட்சித் தலைவர்கள் பலரும் படத்தின் மீதான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். 




         ""ஹலோ தலைவரே... கொடநாட்டிலிருந்து  ஜெ. ரிட்டன் ஆன பிறகு எந்த மந்திரிக்குப் பதவி பறிபோகுமோன்னு 32 மந்திரிகளும் திக்..திக் மனநிலை யோடுதான் இருந்தாங்க. ஒருத்தரையொருத்தர் சந்திச்சிக் கிட்டாக்கூட இதைப் பற்றித்தான் பேசிக்கிட்டாங்க. இப்பவும்கூட மந்திரிசபை மாற்றம் பற்றிய தகவல்கள் வந்துக்கிட்டேதான் இருக்குது. ஆனாலும், மந்திரிகள் பலரும் இப்ப பதவி பறிப்பு பயமில்லாம ஓரளவு தைரியமாத்தான் இருக்காங்க. சக மந்திரிகள்கிட்டே பேசுறப்ப, மேலிடம் முன்னே மாதிரி கோபப்படுறதில்லை.. கோபப்பட்டாலும் பதவியைப் பறிக்கிறதில்லைன்னு சொல்றாங்க.''



               89405 55555 -இது ஒரு சாதாரண அலைபேசி நம்பர்தான். ஆனால் இந்த நம்பர் ஒரு மினிஸ்டரின் அரசியல் வாழ்க்கையையே சர்ச்சைக்குரியதாக்கியிருக்கிறது என்றால் நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ... ஆனால் அதுதான் நிஜம்.
தமிழ் மக்களின் தேசிய கடமை
30 வருடங்களாக இந்த நாட்டில் நிலவிய பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது. போர்ச் சூழல் முற்றாகவே நீங்கி சமாதானமும் இனங்களுக்கிடையேயான நல்லிணக்கம் உருவாக்கப்பட்டுவிட்டது.
 யாழ்ப்பாணத்தில் த.தே.கூவின் பரப்புரைக் கூட்டமும் வேட்பாளர் அறிமுகமும் 
வடமாகாண சபைத் தேர்தக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டமும் வேட்பாளர் அறிமுகமும்  யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது.

இலங்கையில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் போன்ற சம்பந்திகள் போல் ஆயிரக்கணக்கில் உருவாக வேண்டும். அப்போது தான் இன மத தீவிரவாதம் தகர்த்தெறியப்படும் நல்லுறவு நிலவும்.
இவ்வாறு கொழும்பு இலங்கை மன்றக்கல்லூரியில் சனியன்று இடம்பெற்ற சர்வமத தலைவர்கள் மாநாட்டில் உரையாற்றிய நுவரெலியா மாவட்டம் சார்பில் பேசிய வண. குசலஞான தேரர் தெரிவித்தார்.


மாற்று அரசியலுக்கான இளையதலைமுறையின்
கருத்துக்களம் : வைகோ பேச்சு

 

 மாற்று அரசியலுக்கான இளையதலைமுறையின் கருத்துக்களம் ஈரோட்டில் இன்று காலை 10மணிக்கு சக்தி திருமண மண்டபத்தில்  தொடங்கியது.   மாலை 5 மணிக்கு தலைவர் வைகோ உறை ஆற்றினார் 
சென்னை : 3 இலங்கைத்தமிழர்கள் கைது
சென்னை பூந்தமல்லி சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருந்த3 பேர் கைது செய்யப்பட்டனர்.   திறந்தவெளி முகாமுக்கு மாற்றக்கோரி சந்திரகுமார் 10 நாளகாக உண்ணாவிரத இருந்தார்.  கிருஷ்ணமூர்த்தி 9வது நாள், மகேஸ்வரன் 5 நாளாக உண்ணாவிரதம் இருந்தனர்.  தற்கொலைக்கு முயன்றதாக  3 பேரையும் கைது செய்து புழல் சிறையில்  அடைத்தது போலீஸ்.
இலங்கை அகதிகள் குழந்தைகளின் உயர்கல்விக்கு நான் உதவுகிறேன் :
 நடிகர் கருணாஸ் உத்தரவாதம்
சேலத்தில் அகில இந்திய தேவர் பேரவை சார்பாக பெரியார் பல்கலை கழக துணை வேந்தர் டாக்டர் கி.முத்து செழியனுக்கு பாராட்டு விழா ஆகஸ்ட் 25 ஆம் தேதி ஏற்பாடு  செய்தனர்.

25 ஆக., 2013

Australia 492/9d
England 247/4 (116.0 ov)

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களான வடமராட்சி பிரதேச சபை உபதலைவர் இ. சாந்தசொரூபன் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபை உபதலைவர் எம். லோகசிங்கம் ஆகியோர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டுள்ளனர். இவர்கள் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அங்கத்துவப் பத்திரத்தைப் பெற்றுக்கொண்டனர். அமைச்சர்கள் பஷில் ராஜபக்ஷ, சுசில் பிரேமஜயந்த, அதாவுத செனவிரட்ண ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்களையும் படத்தில் காணலாம்
.
மும்பையில் கடந்த 22-ம் தேதி இரவு புகைப்பட பெண் பத்திரிகையாளரை 5 பேர் கொண்ட கும்பல் கற்பழித்தது. நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் குற்றவாளி சந்த் ஷாயிக்கை போலீசார் கைது செய்தனர்.

அதன்பின்னர் விஜய் ஜாதவ் என்ற குற்றவாளி நேற்று காலையில் பிடிபட்டான். அவர்கள் இருவரும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், போலீசாரால் தேடப்படும் நபர்களில் 3-வது நபரான சிராஜ் ரஹ்மான் நேற்று மாலை கைது செய்யப்பட்டான். அவனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளரின் உடல்நிலை தேறி வருகிறது. 

போலீசாரிடம் அந்த பெண் பரபரப்பு வாக்குமூலம அளித்துள்ளார். அந்த வாக்குமூலத்தில் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளதாவது:-

‘மும்பை மகாலக்ஷ்மி ரெயில் நிலையம் அருகே உள்ள சக்தி மில்லிற்கு நானும் எனது சகப்பணியாளரும் சம்பவத்தன்று மாலை 5.30 மணியளவில் புகைப்படம் எடுப்பதற்காக சென்றோம்.

அப்போது மில்லின் உள்ளே இருந்து வந்த 2 பேர் இந்தப் பாதை வழியாக போக வேண்டாம். வேறு நல்ல பாதை வழியாக அழைத்துச் செல்கிறோம் என்று கூறி அழைத்துச் சென்றனர்.

நாங்கள் புகைப்படம் எடுக்கும் வேலையில் மும்முரமாக இருந்தபோது உள்ளே வந்த 3-வது நபர் தன்னை ரெயில்வே ஊழியர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.

"எங்கள் முதலாளிக்கு தெரியாமல் நீங்கள் இந்த மில்லை புகைப்படம் எடுப்பதை அவர் அறிந்து கொண்டார். உங்களை அழைத்து வரச் சொன்னார்" என்று அந்த நபர் எங்களை மிரட்டினார்.

உங்கள் முதலாளியிடம் போனில் பேசுகிறேன் என்று நான் கூறினேன். அதற்கு மறுத்த அந்நபர் தன்னுடன் வரும்படி எங்களை மீண்டும் மிரட்டினார். உடனடியாக எங்கள் பத்திரிகையின் தலைமை புகைப்பட கலைஞரை நான் செல்போனில் தொடர்பு கொண்டேன்.

அவரது லைன் ‘பிஸி’யாக இருந்தது. சற்று நேரத்தில் எனது செல்போனை மீண்டும் அவர் தொடர்பு கொண்டார். ரெயில்வே ஊழியர் என்று கூறி எங்களை ஒருவர் மிரட்டுவதாக நான் தெரிவித்தேன். உடனடியாக அந்த இடத்தை விட்டு வந்துவிடும்படி அவர் கூறினார்.

நாங்கள் இருவரும் வெளிவாசல் வழியாக வர முயன்ற போது குற்றவாளிகளில் ஒருவன் எங்களை வழிமறித்து தடுத்தான்.

சில நாட்களுக்கு முன்னர் அந்த இடத்தில் ஒரு கொலை நடந்ததாகவும் என்னுடன் வந்த சகப்பணியாளர்தான் அந்த கொலையை செய்ததாக கூறி அவன் எங்களை மிரட்டினான். அவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து எங்களை மில்லின் உள்பக்கத்திற்கு இழுத்துச் சென்றனர்.

பாழடைந்த கட்டிடத்தில் நடந்தது என்ன ? கற்பழிக்கப்பட்ட மும்பை பெண் ‘போட்டோகிராபர்’ பரபரப்பு வாக்குமூலம்
எங்களை விட்டுவிடும் படி நாங்கள் கெஞ்சினோம். எங்களிடம் இருந்த கேமராவையும் 2 செல்போன்களையும் ( ஒவ்வொன்றும் சுமார் ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ளது) தந்து விடுவதாகவும் நாங்கள் கூறினோம்.

சிரி­யாவின் டமஸ்கஸ் நகரின் புற­ந­கர் ­ப­கு­தியில் அந்­நாட்டுப் படை­யினர் இர­சா­யன ஆயு­தங்­களைப் பயன்­ப­டுத்தி புதன்­கி­ழமை நடத்­திய தாக்­கு­தலில் 1000 இற்கும் மேற்பட்டோர் பலி­யா­கி­யுள்­ள­தாக அந்­நாட்டு அர­சாங்க செயற்­பாட்­டா­ளர்கள் தெரி­விக்கின்றனர்.
கோயுடா பிராந்­தி­யத்தில் புற­நகர் பகு­தியில் இர­சா­யன வெடி­குண்­டு­களை கொண்ட ஏவு­க­ணை­களை ஏவி தாக்­குதல் நடத்­தப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கி­றது.
இந்­நி­லையில், தாம் இர­சா­யன ஆயு­தங்­களைப் பயன்­ப­டுத்தி தாக்­கு­தல்­களை நடத்­தி­ய­தாக கூறு­வது எது­வித அடிப்­ப­டை­யு­மற்ற குற்­றச்­சாட்­டு என சிரிய அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது.

 பெங்களூர் ஊரகம் மற்றும் மண்டியா ஆகிய இரு மக்களவை தொகுதியிலும் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. மண்டியாவில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் நடிகை ரம்யா 67 ஆயிரம் வாக்கு வித்தியாசத்திலும், பெங்களூர் ஊரகத்தில் போட்டியிட்ட டி.கே.சுரேஷ் 1.36 லட்சம் வாக்கு வித்தியாசத்திலும்

நாடாளுமன்றம் முடக்கப்பட்டதற்கு பாஜக காரணம் அல்ல:சுஷ்மா சுவராஜ்


நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்பட்டதற்கு பாஜக காரணம் அல்ல என்றும், காங்கிரசும், மத்திய அரசுமே காரணம் என்றும், மக்களவை எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
கட்சியின் மீதும் கட்சியின் தலைவர் மீதும் அபாண்டமான அவதூறு! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கோவையைச் சார்ந்த கவிதா என்பவர் இன்று (24-08-2013) கோவை மாநகரக் காவல் ஆணையர் அவர்களைச் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மீதும் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் மீதும் அவதூறான செய்திகளைக் கூறியிருக்கிறார். 
இன்று சுவிஸ் பேர்ன் சிவன் கோவில் எனப்படும் ஞான லின்கேசுரம் தேர் திருவிழா கொட்டும் மலையிலும் வெகு சிறப்பாக நடைபெற்றது .  சிவன் தேரிலே ஆரோகணித்து அண்மையில் உள்ள மைதானம் ஒன்றுக்கு உலா வந்து இருக்க அங்கே  216 நடன நர்த்க்தகிகளின் ஒரே இணைவில் சதுர்  வேள்வி நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது .கொட்டும் மலையிலும் கலைக்கே தம்மை அர்ப்பணித்த இந்த நர்த்தகிகளின் இறைவனை ஆடலால் குளிர்விக்கும் நிகழ்வானது பார்ப்போரை மெய் சிலிர்க்க வைத்தது 

24 ஆக., 2013

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தென்மராட்சிப் பிரதேச தலைமைச் செயலகம் மாவை எம்.பியால் சாவகச்சேரியில் திறந்து வைப்பு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தென்மராட்சிப் பிரதேச தலைமைச் செயலகம், சாவகச்சேரியில் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான மாவை சேனாதிராசா அவர்களினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

ad

ad