புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஆக., 2013

நைஜீரியாவில் 44 கிராமத்தினர் கழுத்தறுத்து படுகொலை: தீவிரவாதிகள் அட்டகாசம்

வடகிழக்கு நைஜீரியாவின் கிராமத்துக்குள் புகுந்த போகோ ஹரம் தீவிரவாதிகள் கிராமத்தினர் 44 பேரின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று கூறிவரும் போகோ ஹரம் தீவிரவாதிகள், அவ்வபோது கிராமங்களுக்குள் புகுந்து அதிரடி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்பகுதியில் தீவிரவாதிகளின் முகாம்கள் பல இருப்பதாகவும், 2010ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 1,700 பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டிருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அதிகாலை வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள போர்னோ மாநிலம் தும்பா கிராமத்திற்குள் கடந்த செவ்வாய்க்கிழமை புகுந்த தீவிரவாதிகள் அப்பாவி கிராம மக்கள் 44 பேரின் கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் கொன்றுக் குவித்தனர்.
துப்பாக்கிகளால் சுட்டால், பொலிஸாரின் காதுகளில் கேட்டுவிடும் என்று நினைத்தே, மக்களின் கழுத்தை அறுத்துக் கொன்றுள்ளனர் என்று உள்ளூர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கொல்லப்பட்டவர்களில் பலரது கண்கள் தோண்டப்பட்டு பிணங்கள் கொடூரமான முறையில் காட்சியளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சம்பவம் நடைபெற்ற இடம் மிகவும் குக்கிராமம் என்பதாலும், அப்பகுதிக்குச் செல்லும் தொலைபேசி இணைப்புகள் சில நாட்களாக துண்டிக்கப் பட்டிருந்ததாலும் இச்சம்பவம் பற்றிய தகவல் தாமதமாக வெளியிடப்படுவதாகவும் அவர் கூறினார்.

ad

ad