புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஆக., 2013

36 வருடங்களுக்கு பின்னர் இலங்கைக்கு வந்த முதல் தென்கொரிய பிரதமர்

36 வருடங்களுக்கு பின்னர் தென்கொரிய பிரதமர் உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.


மூன்று நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டு பிரதமர் சுங் ஹொங் வோங் இலங்கை வந்துள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

1977 ஆம் ஆண்டு இலங்கைக்கு தென்கொரியாவுக்கும் இடையில் ராஜதந்திர தொடர்புகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், இலங்கைக்கு பயணம் செய்யும் முதல் தென்கொரிய பிரதமர் வோங் ஆவார்.

அவர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பிரதமர் டி.எம். ஜயரத்ன ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதன் போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளது

ad

ad