புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஆக., 2013

 பெங்களூர் ஊரகம் மற்றும் மண்டியா ஆகிய இரு மக்களவை தொகுதியிலும் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. மண்டியாவில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் நடிகை ரம்யா 67 ஆயிரம் வாக்கு வித்தியாசத்திலும், பெங்களூர் ஊரகத்தில் போட்டியிட்ட டி.கே.சுரேஷ் 1.36 லட்சம் வாக்கு வித்தியாசத்திலும்
வெற்றி பெற்றனர். பாஜ ஆதரவு கொடுத்தும் மஜத படுதோல்வி அடைந்துள்ளது.முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி மற்றும் என்.செலுவராயசாமி ஆகியோர் ராஜினாமா செய்ததால் காலியாக இருந்த பெங்களூர் ஊரகம் மற்றும் மண்டியா ஆகிய இரு மக்களவை தொகுதிகளுக்கு கடந்த 21ம் தேதி தேர்தல் நடந்தது. பெங்களூர் ஊரகம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக டி.கே. சுரேஷ், மஜத வேட்பாளராக அனிதாகுமாரசாமி உள்பட 13 பேரும், மண்டியா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நடிகை ரம்யா, மஜத வேட்பாளராக புட்டராஜு உள்பட 9 பேரும் போட்டியிட்ட னர்.

 இரு தொகுதி வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு துவங்கியது.இத்தேர்தலில் பெங்களூர் ஊரக தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட டி.கே. சுரேஷ், 5 லட்சத்து 78 ஆயிரத்து 596 வாக்குகளும், மஜத வேட்பாளராக போட்டியிட்ட அனிதாகுமாரசாமிக்கு 4 லட்சத்து 41 ஆயிரத்து 600 வாக்குகள் கிடைத்தது. அனிதாகுமாரசாமியை விட 1 லட்சத்து 36 ஆயிரத்து 996 வாக்குகள் அதிகம் பெற்று டி.கே.சுரேஷ் வெற்றி பெற்றார். எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி உள்பட மற்ற 11 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.மண்டியா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் நடிகை ரம்யாவுக்கு 4 லட்சத்து 84 ஆயிரத்து 085 வாக்குகளும், இவரை எதிர்த்து போட்டியிட்ட மஜத வேட்பாளர் புட்ட ராஜுக்கு 4 லட்சத்து 16 ஆயிரத்து 474 வாக்குகளும் கிடைத்தது. 

மஜத வேட்பாளரை விட 67 ஆயிரத்து 611 வாக்குகள் அதிகம் பெற்று நடிகை ரம்யா வெற்றி பெற்றார். இதன் மூலம் லோக்சபாவில் கால்பதிக்கும் இளம் உறுப்பினர் என்ற பெருமையை நடிகை ரம்யா பெற்றுள்ளார். அவருக்கு 31 வயதாகிறது. மண்டியாவில் போட்டியிட்ட மற்ற 7 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். காங்கிரஸ் வெற்றி பெற்றதை அக்கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.இந்த தேர்தல் வெற்றி கர்நாடக காங்கிரசின் சிறந்த நிர்வாகத்துக்கு கிடைத்த பரிசு என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மஜத தோல்விக்கு பொறுப்பேற்றுக்கொள்வதாக அறிவித்துள்ள மாநில தலைவர் குமாரசாமி, தனது பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று குறிப்பிட்டுள்ளார்.

ad

ad