புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஆக., 2013

கிளிநொச்சியில் நவி. பிள்ளையைச் சந்திக்க காத்திருந்தவர்களை ஓடஓட விரட்டி பஸ்களில் ஏற்றிய பொலிஸார்
கிளிநொச்சியில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையைச் சந்நிக்கவிடாது காணாமல்போனவர்களது உறவுகளை பொலிஸாரும், புலனாய்வாளர்களும் இணைந்து  விரட்டியடித்துள்ளனர்.
கிளிநொச்சி பரந்தன் சந்தியில் வன்னிக்கு வருகை தந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையைச் சந்தித்து, தமது உள்ளக்கிடக்கைகளை அவரிடம் நேரடியாகக் கூறி, காணாமல் போன தமது உறவுகளுக்கு என்ன நடந்தது? அவர்களை எங்கே மறைத்து வைத்துள்ளார்கள்? எனக் கோரி தமக்கு உதவுமாறு கோருவதற்காக கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா போன்ற பகுதிகளைச் சேர்ந்த காணாமல் போனவர்களது உறவுகள் இன்று காலை 8.00 மணி முதல் நவநீதம்பிள்ளையின் வருகைக்காக காத்திருந்தார்கள்.
இந்நிலையில் பரந்தன் சந்திக்கு வந்த பெருமளவு பொலிஸாரும், இராணுவப்புலனாய்வாளர்களும் ஒன்று கூடியிருந்த காணாமல் போனவர்களது உறவுகளை விசாரித்து விட்டு இங்க எவரும் வரமாட்டார்கள் உடனடியாகவே வீட்டுக்குச் செல்லுங்கள் என்று கூறி விரட்டியுள்ளனர்.
அதனை ஏற்க மறுத்த மக்கள், பரந்தன் பஸ் நிலையம் கடைகள் போன்றவற்றுக்கு முன்னால் ஒன்றுகூடி நின்றார்கள். நிற்பவர்களை இனங்கண்டு கொண்ட மிரட்டல்காரர்கள், நவநீதம்பிள்ளை வரும் நேர் நெருங்கும் வேளை பார்த்து பஸ் நிலையத்தில் நின்றவர்கள் அனைவரையும் ஓட ஓட விரட்டியதுடன், அங்கு வந்த பஸ்களிலும் வலுக்கட்டாயப்படுத்தி ஏற்றிவிட்டார்கள்.
கூடி நின்ற உறவுகள் அனைவரையும் நண்பகல் 12.30 மணிக்கு விரட்டியடித்ததன் பின்னர் நண்பகல் 12.50 மணியளவில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை பரந்தன் சந்தியால் கடந்து கிளிநொச்சி மக்களின் நிரவரம் பற்றி அறியச் சென்றுள்ளார்.
இவ்விடத்தில் கூடி நின்ற காணாமல் போனவர்களின் உறவுகளை விரட்டியடிக்குமாறு கிளிநொச்சியில் வெற்றிலைச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்பவர்களும் பொலிஸாருக்கும் புலனாய்வாளர்களுக்கும் கூறியதாக இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட உறவுகள் கூறி வேதனைப்பட்டனர்.

ad

ad