புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஆக., 2013

நரிக்குறவர் / குருவிக்காரர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

நரிக்குறவர் அல்லது குருவிக்காரர் என்றழைக்கப்படும் இனத்தவரை பழங்குடியினருக்கான பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.



செவ்வாயன்று அவர் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் குருவிக்காரர் அல்லது நரிக்குறவர் என்று அழைக்கப்படும் இனத்தவர் பல காலமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தமிழகத்தில் பழங்குடியின மக்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து மத்திய அரசுக்கு ஏற்கனவே தமிழக அரசு சார்பில் ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், மத்திய பழங்குடியின மக்கள் பட்டியலில் நரிக்குறவர் அல்லது குருவிக்காரர் இனத்தை சேர்க்க வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதனை பரிசீலத்த இந்திய தலைமை பதிவாளர், இந்த பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்து நிபுணர் குழுவுக்கு பரிந்துரை செய்தார்.

இந்த நிலையில், நரிக்குறவர் அல்லது குருவிக்காரர் இனத்தை பழங்குடியினத்தவர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த கடிதத்தின் வாயிலாக வலியுறுத்துகிறேன்.

எனவே, நரிக்குறவர் அல்லது குருவிக்காரர் இனத்தை பழங்குடியினத்தவர் பட்டியலில் சேர்க்கத்  தேவையான சட்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுத்து, தமிழகத்தில் பல காலமாக வாழ்ந்து வரும் ஒரு இனத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ad

ad