புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஆக., 2013


கோச்சடையானில் எஸ்.பி.பி பாடிய பாடல்(வீடியோ)!

கோச்சடையான் திரைப்படத்தின் ரிலீஸுக்கான கடைசி கட்ட பணிகள் வேகமாக நடந்துவருகின்றன. கோச்சடையான் திரைப்படத்தின் எந்த ஒரு தகவலும் எந்த விதத்திலும் வெளியாகிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது கோச்சடையான் டீம். 


ஆனாலும் ரசிகர்களை வருத்தப்பட வைக்கக்கூடாது என்பதால் அவ்வப்போது கோச்சடையான் திரைப்படத்தின் ஒரு வீடியோ க்ளிப்பை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விப்பதோடு, திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துவருகின்றனர். கடைசியாக கோச்சடையான் டீம் மூலமாக ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸிங் செய்யும் வீடியோ க்ளிப் வெளியிடப்பட்டது.
நன்றி நக்கீரன் 
அதன்பிறகு எந்த தகவலும் தெரியாமல் வருத்தத்தில் இருந்த ரசிகர்களை மகிழ்விக்கும் விதத்தில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் எஸ்.பி.பி கோச்சடையான் பாடலை பாடிக் காட்டிய வீடியோவை ரிலீஸ் செய்திருக்கின்றனர். ’மெதுவாகத்தான் மெதுவாகத்தான்’ என இந்த பாடல் துவங்குகிறது.

கோச்சடையான் தீபாவளிக்கு ரிலீஸாகவிருப்பதாக தகவல்கள் வெளியானாலும் படக்குழுவிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.



ad

ad