புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஆக., 2013

அங்கஜனின் தந்தை யாழ். பொலிஸாரால் கைது- த.தே.கூட்டமைப்பின் வேட்பாளர் தம்பிராசா சாகும்வரை உண்ணாவிரதம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜனின் தந்தையார் இராமநாதன், சுதந்திரக் கட்சியின் சக வேட்பாளர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு சாவகச்சேரியில் வைத்து சு.கட்சியின் வேட்பாளர் குமாரு சர்வானந்த் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாகவே சற்று முன்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொடிகாமம் மற்றும் சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதாக யாழ்.பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் சிஹேரா தெரிவித்தார்.
இதேவேளை வடக்கில் அரசாங்க தரப்பினர்கள் தமக்குள் மோதிக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதால் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி
இரண்டாம் இணைப்பு
யாழ்.சாவகச்சேரி பிரதேசத்தில் சக வேட்பாளர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட வடக்கின் மேர்வின் சில்வா இராமநாதன் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நேற்றிரவு இராணுவத்தினரால் தெரிவு செய்யப்பட்ட சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் சர்வானந்த் என்பவரின் மீது அதே கட்சியைச் சேர்ந்த இராமநாதன் சரமாரியான துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டிருந்தார்.
இந்தச் சம்பவத்தின்போது அங்கு கடமையிலிருந்த பொலிஸாரும் சம்பவத்தை கண்டும் காணாமலும் விட்ட நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில்,சாவகச்சேரி, கொடிகாமம் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் நடந்த சம்பவத்தில் இராமநாதனே குற்றவாளி என வாக்கு மூலம் வழங்கிவிட்ட நிலையில் அவர் இன்று மாலை 5.15மணியளவில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இராமநாதன் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை வேட்பாளர் தம்பிராசா யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை இன்று ஆரம்பித்துள்ளார்.
மேலும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மாகாணசபை வேட்பாளர்களான மு.றெமீடியஸ், எஸ்.சர்வானந்த், எஸ்.அகிலதாஸ், எஸ்.பொன்னம்பலம் ஆகியோர் இராமநாதன் கைது செய்யப்படாவிடில் தேர்தலிலிருந்து விலகப்போவதாக இன்று மாலை அறிவித்துள்ளனர்.

ad

ad