www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வெள்ளி, ஜூலை 05, 2019

பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு! -அமைச்சர் தலமையில் ஆரம்பம்-

யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யும் பணிகளின் ஆரம்ப விழா இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

1

சுமார் 19.5 பில்லியன் ரூபா செலவில் பிராந்திய விமான சேவைகளை நடத்தக் கூடிய வகையில் பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இந்த திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று பலாலி விமான நிலையத்தில், இதன்போது போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க விமான நிலையத்தின் புனரமைப்பு பணிகளை அங்குரார்ப்பணம் செய்தார்.

இந்நிலையில் இரண்டு கட்டங்களாக பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

2

ஓடுபாதை விரிவாக்கம் மற்றும் தொடர்புடைய வசதிகளை மேற்கொள்வது முதலாவது கட்டப் பணிகளாக முன்னெடுக்கப்படும்.

விமான நிலையம் கணிசமான விமானப் போக்குவரத்தை ஈர்த்தவுடன், இரண்டாவது கட்டமாக, நிரந்தரமான முனைய கட்டடங்கள் கட்டப்படும்.

4

பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதை, 3500 மீற்றர் நீளம் கொண்டதாக விரிவுபடுத்தப்பட்டு, யு320, யு321 போன்ற பாரிய பயணிகள் விமானங்கள் தரையிறங்கக் கூடிய வசதிகள் செய்யப்படவுள்ளன