புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 நவ., 2019

அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்க சஜித் முடிவு கட்சிக்குள் சிலர் மேற்கொண்ட சதிகளாலேயே தோல்வி

ஐக்கிய தேசிய கட்சிக்குள் சிலர் மேற்கொண்ட சதிகளாலேயே ஜனாதிபதி தேர்தலில் தான் தோல்வி கண்டதாக சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கோல்பேஸ் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற சந்திப்பு ஒன்றின் போது சஜித் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சிக்குள் சிலர் மேற்கொண்ட சதிகளாலேயே ஜனாதிபதி தேர்தலில் தான் தோல்வி கண்டதாக சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கோல்பேஸ் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற சந்திப்பு ஒன்றின் போது சஜித் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் தனக்கு மிகவும் நெருக்கமான அரசியல்வாதிகளை அழைத்து, மூடிய அறைக்குள் இந்த சந்திப்பினை நடத்தியிருந்தார்.

52 வயதான நான் நாட்டுக்கு சிறந்ததை கொடுக்கவே முயன்றேன். நான் சிறந்த பௌத்தன் எனினும் பௌத்தர்கள் எனக்கு அதிகளவில் வாக்களிக்காது விட்டுவிட்டனர்.தேர்தல் பிரச்சாரக் காலத்தில் நான் சகலரையும் நம்பினேன். எனது கட்சியின் தலைமை எனக்கு துரோகம் செய்தது. எனக்கு உரிய பணத்தை கட்சி வழங்கவில்லை. நான் தற்போது கடனாளியாகியுள்ளேன். தேர்தல் பிரச்சாரத்திற்கு பணமின்மையால் நெருக்கடிகளை எதிர்கொண்டேன்.

எனக்கு துரோகம் செய்யப்பட்டுள்ளதாக உணர்கிறேன். சிலர் பாம்புகளை போல செயற்பட்டனர். இந்த 2 தரப்பினரும் எனது தோல்விக்கு வழிவகுத்தனர்.

எங்கள் அணியில் இருந்த சிலர், அமெரிக்காவுடன் மிலேனியம் ஒப்பந்தத்தை செய்ய ஆசைப்பட்டனர். இன்னும் சிலர் பௌத்தத்திற்கு எதிராக குரல் கொடுத்தனர்.

என்னையும் எனது குடும்பத்தினரையும் முழுமையாக அர்ப்பணித்தே இந்தப் பயணத்தில் இறங்கினேன்.நான் அமைச்சராக இருந்தபோது எனக்கென ஒரு வீட்டைக்கூட கட்டிக்கொள்ளவில்லை. இப்படிப்பட்ட நிலையில் நான் தோல்வியடைய வேண்டுமென, கட்சிக்குள் சிலர் விரும்பினர். எனினும் பலர் நான் வெற்றியடைய வேண்டுமென ஆசைப்பட்டனர்.

தற்போது புதிய கட்சி ஆரம்பிக்கும் எந்த நோக்கமும் எனக்கு இல்லை. அதற்காக ரணிலுடன் தலைமைப் பதவிக்காக சண்டைபிடிக்கவுவும் மாட்டேன்.

கட்சியினர் பேசி ஒரு தீர்மானத்திற்கு வரட்டும். அதுவரை நான் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்க தீர்மானித்துள்ளதாக சஜித் தெரிவித்ததாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது

ad

ad