ஞாயிறு, ஜனவரி 05, 2020

ஈரப்பெரியகுளத்தில் தொடங்கியது சோதனை


வவுனியா - ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக பொலிஸார் வீதித் தடையை ஏற்படுத்தி, சோதனை நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே, இந்தச் சோதனை
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
இதற்கமைய, கண்டி நெடுஞ்சாலை ஊடாக செல்லும் வாகனங்களை மறித்து, தீவிர சோதனை நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். பயணிகளின் பொதிகளும் ஸ்கானர் இயந்திரத்தைக் கொண்டு சோதனைக்குட்படுத்தப்பட்டன.