புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜன., 2020

மார்ச் 3 நாடாளுமன்ற கலைப்பு அறிவிப்பு
பொதுத் தேர்தலுக்காக நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான சட்டரீதியான அதிகாரம் மேலும் 55 நாள்களுக்குள் ஜனாதிபதிக்கு கிடைக்கும் என, கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதம் 2 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு அந்த சட்டரீதியான அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கும்.
நாடாளுமன்றம் குறிப்பிட்டவகையில் அன்றைய தினம் கலைக்கப்பட்டால் மேலும் 110 நாட்களில், நாடாளுமன்ற பொதுத் தேர்தலை நடத்துவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என்றும் கல்வியமைச்சர் கூறியுள்ளார்.
மாத்தறையில் இடம் பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணைக்கு அமைய, எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களைப் பெறும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ad

ad