புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 செப்., 2013

கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரே ஒரு தமிழ்ப் பெண் வேட்பாளர்..


பெயர் : திருமதி வினுபானந்தகுமாரி கேதுரட்ணம் (ஆசிரியை - கிளி.கிராஞ்சி அ.த.க.பாடசாலை)

சின்னம் : வீடு

இலக்கம் : 04

யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் நடைபவணியை மேற்கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளரும், முன்னாள் நீதியரசருமான சி.வி.வின்னேஸ்வரன் தலைமையிலான பிரச்சாரப் பிரிவினருக்கு மக்கள் மலர் மாலைகள் அணிவித்தும், பொன்னாடைகள் போர்த்தியும் வரவேற்பு..

வடமாகாணசபை தேர்தல் 2013 இணையக் கருத்துக்கணிப்பு

இலங்கையில் வடக்கு மாகாணத்திற்கான தேர்தல் எதிர்வரும் 21.09.2013 அன்று நடைபெற உள்ளது.
election2013
21ம் திகதி வடமகாணசபைத்தேர்தலில் வெற்றி பெறும் சின்னம்
  • வீடு (86%, 1,078 Votes)
ஆற்காடு வீராசாமி அவர்களை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தபோது.
· 
வரலாற்றுச் பிரசித்தி பெற்ற யாத்திரை தலங்களில் ஒன்றாக திகழும் சாட்டி சிந்தாத்திரை அன்னை ஆலய பெருவிழா. மிகவும் சிறப்பான முறையில் யாழ் ஆயர் வணக்கத்திற்குரிய தோமஸ் சவுந்தரநாயகம் அடிகளார் தலைமையில்
நடைபெற்றது.

ஆலய பெருநாளை முன்னிட்டு தீவகத்தினை நோக்கி பெருந்திரளான பக்தர்கள் வருகைதந்திருந்தனர்.kumaran
வாக்கு கொள்ளை இடம்­பெ­றா­விட்டால் வடக்கில் கூட்­ட­மைப்பு அமோக வெற்­றி­பெறும்!- சுனந்த தேசப்­பி­ரிய
வட மாகாண சபை தேர்­தலில் வாக்­குகள் கொள்ளை இடம்­பெ­றா­விட்டால் தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பு வெற்றி பெறு­வது உறு­தி­யா­கி­விட்­டது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வட மாகா­ணத்­தி­லுள்ள ஐந்து மாவட்­டங்­க­ளிலும் இப்­போது வெற்றி பெறும் என்­பதை காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது.
பொங்கு தமிழென சங்கே முழங்கு: மகிந்தவின் வருகைக்கு எதிராக அணிதிரளும் வட அமெரிக்கத் தமிழர்கள்
சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் அமெரிக்க வருகைக்கு எதிராக அமெரிக்க மற்றும் கனேடியத் தமிழர்கள் அணிதிரளத் தயாராகி வருகின்றனர்.
சமஷ்டி பிரிவினையல்ல என்பது சட்டம் படித்த ஜனாதிபதிக்கு தெரியாதா?- சி.வி. விக்னேஸ்வரன்

சமஷ்டி என்பது பிரிவினையல்ல என்பதை சட்டம் படித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு தெரிந்திருக்க வேண்டுமென்று,  தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களை சந்தித்த சுமந்திரன், தவராசா!- சர்வதேச கண்காணிப்பாளர்களின் பணி வட மாகாணத்தில் இன்று ஆரம்பம்
நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தல்களின் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ள தெற்காசிய தேர்தல்கள் கண்காணிப்பாளர்கள் 21 பேரும் இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையாளர் கோபாலசுவாமி தலைமையில் மாகாண சபைத் தேர்தல்களில்
ஈழத்தமிழர்கள் குண்டு வீசி கொல்லப்பட்டுள்ளனர். காவிரிக்காக முல்லை பெரி யாறுக்காக, கச்சத்தீவுக்காக போராடுகிறோம். நாங்களும் தத்தளித்துக் கொண்டு இருப்பதால் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க முடியாது என்று சொல்ல முடியுமா? 
ஆந்திராக்காரர்கள் போல் நாங்களும் சினிமா நூற்றாண்டு விழாவில்
 பங்கேற்க முடியாது என்று சொல்ல முடியுமா? : பாரதிராஜா
சேரன் இயக்கும் புதிய படம் ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை’. அதில் கதாநாயகனாக சர்வானந்த், நாயகியாக நித்யாமேனன் நடிக்கிறார்கள். படத்தின் பாடல் சி.டி. வெளியிட்டு விழா சத்யம் தியேட்டரில் இன்று காலை நடந்தது.
இயக்குநர்கள் பாரதிராஜா, பாலுமகேந்திரா, ஆர்.பார்த்திபன், ஷங்கர், சீமான், அமீர், கேயார், சமுத்திரக்கனி, சசி, பாண்டியராஜன், உட்பட பல இயக்குநர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர்.   நடிகர்கள் சரத்குமார், சூர்யா, சர்வானந்த், நடிகைகள் சினேகா, ரோகிணி, நித்யாமேனன் மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.
விழாவில் சேரனின் மகள்கள் நிவேதா, தாமினி கலந்து கொண்டனர். விழாவுக்கு வந்தவர்களை தாமினி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இவ்விழாவில் பாரதிராஜா பேசியபோது, ‘’ சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. தெலுங்கானா பிரச்சனையில் தத்தளித்துக் கொண்டு இருக்கும்போது இந்த விழாவில் எப்படி பங்கேற்போம் என்று ஆந்திராக்காரர்கள் சொல்கிறார்கள். நமக்கும் பிரச்சனைகள் உள்ளன.
ஈழத்தமிழர்கள் குண்டு வீசி கொல்லப்பட்டுள்ளனர். காவிரிக்காக முல்லை பெரி யாறுக்காக, கச்சத்தீவுக்காக போராடுகிறோம். நாங்களும் தத்தளித்துக் கொண்டு இருப்பதால் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க முடியாது என்று சொல்ல முடியுமா?
தமிழ் சினிமாவுக்கு தனி சங்கங்கள் வேண்டும். தென் இந்திய திரைப்பட வர்த்தகசபை, தென் இந்திய நடிகர் சங்கம் என்பதை விட்டு விட்டு தமிழ் நடிகர் சங்கம், தமிழ் வர்த்தகர் சபை தமிழ் திரைப்பட தொழிலாளர் சங்கம் என்று வரவேண்டும். அப்போது தான் நம் உரிமைகள் காக்கப் படும்’’என்றார்.
விருதுநகர் மதிமுக மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்கள்!
விருதுநகரில் நடைபெற்ற ம.தி.மு.க. மாநில மாநாட்டில் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி 14 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. அதன் விவரம்
ஜெ., - சோ : 35 நிமிடங்கள் தீவிர ஆலோசனை
துக்ளக் ஆசிரியர் சோ, இன்று காலை தலைமைச் செயலகத்திற்கு சென்றார். பகல் 12:00 மணிக்கு முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார். பகல், 12:35 மணி வரை அதாவது, 35 நிமிடங்கள் அவர்கள் சந்திப்பு நீடித்தது. 
ஆடிட்டர் ரமேஷ் குடும்பத்தினர் ஜெயலலிதாவை சந்திக்க முடிவு

பாரதீய ஜனதா கட்சியின் மாநில பொது செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் சேலத்தில் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார்.  இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை நடந்து 2 மாதம் ஆகியும் கொலையாளிகள் பற்றி துப்பு துலங்கவில்லை.

14 செப்., 2013

தென்மராட்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது மேற்கொள்ளபட்ட மோசமான தாக்குதல்
சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர். வெள்ளை வாகனத்தில் வந்திறங்கிய கும்பலொன்று சிங்களத்தில் கத்தியவாறு இரும்புக் கம்பிகளுடன் ஓடிவந்து தமது வாகனத்தை இடைமறித்து தாக்கியதாகவும் தாங்கள் பாதுகாப்பு தேடி
தென்மராட்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது மேற்கொள்ளபட்ட மோசமான தாக்குதல் 
தென்மராட்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது மேற்கொள்ளபட்ட மோசமான தாக்குதலில் சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர். வெள்ளை வாகனத்தில் வந்திறங்கிய கும்பலொன்று சிங்களத்தில் கத்தியவாறு இரும்புக் கம்பிகளுடன் ஓடிவந்து தமது வாகனத்தை இடைமறித்து தாக்கியதாகவும் தாங்கள் பாதுகாப்பு தேடி ஒடியதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் காயடைந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ஐந்து மணியளவில் நாவற்குழியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபைத் தேர்தல் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டவர்கள் மீதே இந்த மிலேச்சத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இந்தச் சம்பவத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் ஞா.கிஸோர் (வயது-24), மற்றும் நுணாவில் கிழக்கைச் சேர்ந்த ஆர்.றஜிந்தன் (வயது-19) ஆகியோரே காயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கூட்டமைப்பு ஆதரவாளர்கள் ஏழு பேர் டெமோ வாகனம் ஒன்றில் சென்று நேற்று பிற்பகல் வேளை தனங்களப்பில் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இவர்கள் நாவற்குழியை நோக்கி வந்துகொண்டிருந்தபோது தச்சன்தோப்பு சந்தியிலுள்ள இராணுவத்தினர் தங்களை மறித்து எங்கே போகின்றீhகள் என்று விசாரித்தாகவும் தாங்கள் நாவற்குழி சந்திக்கு செல்கின்றோம் என்று கூறியபோது நாவற்குழி சந்திக்கு செல்வீர்களா என்று பல தடவைகள் கேட்டதாகவும் மேற்படி ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

படையினர் இவ்வாறு திருப்பத் திருப்பக் கேட்டமையானது தங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதால் தாங்கள் அச்சமடைந்து நாவற்குழி சந்திக்கு மாற்றுப் பாதையூடாக செல்ல முற்பட்டதாகவும் இதன்போது திடீரென்று எங்கிருந்தோ வந்த வெள்ளை நிற வாகனமொன்று தங்களைப் பின்தொடர்ந்ததாகவும் இவர்கள் தெரிவித்தனர். குறித்த வாகனத்தைக் கண்டதும் நாங்கள் அச்சமடைந்து எமது வாகனத்தை மீண்டும் வந்த பாதையாகிய கேரதீவு வீதிக்கு திருப்பினோம். அந்த வாகனம் எங்கள் வாகனத்தை பின்தொடர்ந்தது. நாங்கள் நாவற்குழி மகா வித்தியாலயத்திற்கு அண்மையில் எமது வாகனத்தை நிறுத்தினோம். அந்த வாகனம் எங்களைக் கடந்து சென்றது. அதனால் நாங்கள் மீண்டும் நாவற்குழியை நோக்கிப் பயணித்த போது சடுதியான வேகத்தில் எங்களைத் துரத்தி வந்த அந்த வாகனம் எங்கள் வானத்திற்கு குறுக்கே நிறுத்தப்பட்டது.

அந்த வாகனத்தில் இருந்து இறங்கி வந்த எட்டு வரையான இளைஞர்கள் சிங்களத்தில் கத்தியவாறு எமது வாகனத்தை நோக்கி ஒடி வந்து இரும்புக் கம்பிகளால் எங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் நாங்கள் ஓடினோம். ஆனாலும் இருவர் காயமடைந்தனர். பின்னர் ஒருவாறு எமது சாரதி புத்திசாதுரியமாக செயற்பட்டு வாகத்தை திருப்பிக்கொண்டு ஓடியதால் நாங்கள் தப்பித்தோம் என்று காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் தெரிவித்தனர். தங்களைத் தாக்கிய அனைவரும் கட்டைக் காற்சட்டையும் ரீ-சேர்ட்  அணிந்திருந்தாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த விடயம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தாக்குதலில் சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் ஞானப்பிரகாசம் கிஷோர் (24) மற்றும் ராஜ்குமார் ராஜிந்தன் (19)ஆகியோர் படுகாயமடைந்தனர்.
சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர். வெள்ளை வாகனத்தில் வந்திறங்கிய கும்பலொன்று சிங்களத்தில் கத்தியவாறு இரும்புக் கம்பிகளுடன் ஓடிவந்து தமது வாகனத்தை இடைமறித்து தாக்கியதாகவும் தாங்கள் பாதுகாப்பு தேடி ஒடியதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் காயடைந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ஐந்து மணியளவில் நாவற்குழியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபைத் தேர்தல் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டவர்கள் மீதே இந்த மிலேச்சத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் ஞா.கிஸோர் (வயது-24), மற்றும் நுணாவில் கிழக்கைச் சேர்ந்த ஆர்.றஜிந்தன் (வயது-19) ஆகியோரே காயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் மேலும்
இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைகளை கோரும் யோசனை முன்வைக்கப்பட உள்ளது?
இலங்கையில் யுத்தம் நடைபெற்ற போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்ற யோசனை ஒன்று ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தில் முன்வைக்கப்பட உள்ளதாக ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சர்வதேச விசாரணையை கோரும் இந்த யோசனை எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தில் முன்வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இந்த யோசனையுடன் சம்பந்தப்பட்ட சில விடயங்களை எதிர்வரும் 25 ஆம் திகதி ஆணைக்குழுவின் கூட்டத்தில் முன்வைக்க உள்ள வாய்மொழி மூலமான அறிக்கையில் வெளியிட தயாராக இருப்பதாக தெரியவருகிறது.
அதேவேளை சர்வதேச விசாரணையை கோரும் குறித்த யோசனை அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் உதவியுடன் முன்வைக்கப்பட உள்ளதாகவும் அதற்கு மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையும் பூரண ஆதரவை வழங்குவார் என்றும் ராஜதந்திர வட்டாரங்களின் அந்த தகவல்கள் கூறியுள்ளன.
இலங்கைக்கு எதிராக கடந்த மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் முன்வைக்கப்பட்ட யோசனையின் தொடர்ச்சியாக இருந்த யோசனை முன்வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
23 வருடங்களின் பின் யாழ்தேவி இன்று கிளிநொச்சி செல்கிறது! ஜனாதிபதியும் பயணிக்கிறார்


ஓமந்தையிலிருந்து கிளிநொச்சி வரையிலான ரயில் சேவை, கிளிநொச்சி ரயில் நிலையம், சுன்னாகம் உப மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்டவற்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இன்று காலை 9.30 மணிக்கு ஓமந்தை ரயில் நிலையத்திலிருந்து ரயில் மூலம் கிளிநொச்சி ரயில் நிலையத்தைச் சென்றடையும் ஜனாதிபதி அவர்கள், ரயில் நிலையத்தைத் திறந்து வைக்கவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து ரயில் நிலையத்திற்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பொதுக் கூட்டத்திலும் அவர்
கிளிநொச்சியை அழிப்பதில் ஈபிடிபி கங்கணங்கட்டி அலைகிறது! அதற்கு எம் தலைமைகள் அனுமதிக்காது: பசுபதிப்பிள்ளை காட்டம்
கிளிநொச்சியின் அபிவிருத்தி என்பது பிரதானம், அதனை ஈபிடிபி தடுத்து பித்தலாட்டம் செய்கிறது. இது அரசின் பணமல்ல, உலக நாடுகளுடையது என தனது மண்ணிற்கு ஏற்பட்ட அநீதியை லங்காசிறி FMக்கு வழங்கிய செவ்வியில் உணர்வுடன் உச்சரிக்கிறார் கிளிநொச்சி மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரும் முன்னாள் கிராமசேவையாளருமான திரு.சு.பசுபதிப்பிள்ளை.
பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க இந்தியா நிபந்தனை விதித்துள்ளது
கொழும்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் மன்மோகன் சிங் சில நிபந்தனைகளை இலங்கை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

விடுதலைக்கேங்கும் மக்கள் கருத்தால் முரசறையும் போர்க்களம்!


மாவை சேனாதி அவர்களின் முகநூலில் இருந்து 
முள்ளிவாய்க்காலில், தமிழ் மக்களை கொத்துக்கொத்தாய்க் கொன்று குவித்து, ஒரு இனஅழிப்பை நடத்தி முடித்த சிங்களம், அழித்துச் சிதைக்கப்பட்ட தமிழினம், சிங்களத்தின் ஆட்சியதிகாரத்துக்குக் கட்டுப்பட்டு, கீழ்ப்பட்டு நிற்கும் ஒரு புதியதொரு காலத்தையே எதிர்பார்த்து நின்றது.ஆனால், சிங்களத்தின்
கிளிநொச்சி இராணுவ முகாமிற்குள் தேர்தல் சுவரொட்டிகள்! கண்காணிப்பு அமைப்பு குற்றச்சாட்டு
வட மாகாண சபைத் தேர்தலுடன் தொடர்புடைய ஒரு தொகை சுவரொட்டிகளை ஏற்றிய பாரஊர்தி ஒன்று கிளிநொச்சியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றினுள் அவற்றை கையளித்துள்ளதாக தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐநா மாநாட்டில் உரையாற்ற மகிந்த ராஜபக்ச 23ம் திகதி நியூயோர்க் பயணம்
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் 23ம் திகதி திங்கட்கிழமை நியூயோர்க் பயணமாகவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
rain_keleசுமார் 24 வருடங்களுக்குப் பின்னர் யாழ்தேவி புகையிரதத்தின் கிளிநொச்சி வரையிலான மீள் பயணம் 15.09.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இன்று காலை 10 மணியளவில் கிளி நொச்சி 155ம் கட்டைப் பகுதியில் பரீட்சார்த்த பயணத்தில் ஈடுபட்டிருந்த புகையிரத்தத்தினால் முதலாவது பொதுமகன் பலியெடுக்கப்பட்டுள்ளார். தேர்தல் காலப் பகுதிக்குள் இப்புகையிரத நிலையம் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் கிளிநொச்சி நகரிற்கிடையிலான புகையிரதப் பாதுகாப்புப் கடவைகள் பூர்த்தியாக்கப்படாத நிலையில் பயணம் ஆரம்பிக்கப்படவுள்ளது…..ஏற்கனவே பல கால்நடைகள் இப் பரீட்சார்த்த புகையிரதப் பயணத்தின் போது கொல்லப்பட்ட நிலையில் முதலாவது மனிதப் பலியெடுப்பு இன்று நிகழ்ந்துள்ளது. கொல்லப்பட்டவர் கிளிநொச்சி தொண்டைமான் நகர் பகுதியினைச் சேர்ந்த 70 வயது முதியவரான முத்தப்பா எனத் தெரிய வருகிறது.

வெள்ளவத்தையில் விபச்சார விடுதி முற்றுகை: மூன்று பெண்கள் கைது

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் ஹெவலொக் வீதி 287ம் இலக்க முகவரியில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.

தம்புள்ளை பள்ளிவாசலை இடிப்பது மற்றும் அகற்றுவது சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும் அரசாங்கத்தினதும் கவனத்திற்கு கொண்டுவருவதாக நீதியமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவ+ப் ஹக்கீம் தெரிவித்தார்.
இந்த பள்ளிவாசல் உடைக்கப்படமாட்டாதென்று ஜனாதிபதி கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது கல்முனையில் பகிரங்கமாக அறிவித்ததையும் அமைச்சர் ஹக்கீம்

வெற்றிலை சின்னத்துக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும், கோவில்களையும், கிறிஸ்தவ தேவாலயங்களையும், பள்ளிவாசல்களையும் உடைத்து நொறுக்கும் மதவாதத்துக்கு அளிக்கும் வாக்குகள் என்பதை மலையகத்தில் வாழும் ஒவ்வொரு தமிழ் பேசும் இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க மத சிறுபான்மை வாக்காளர்களும் மனதில் கொள்ள வேண்டும்.மனோ கணேசன் 

வெற்றிலை என்பது நம்மை பொறுத்தவரையில் வாயில் மென்று துப்பும் வெற்று இலைதான். அதற்கு மேல் அது நமக்கு பயன்தராது.
 அனைத்துலக விசாரணையை எதிர்கொள்ள நேரிடும்; சிறிலங்காவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை 
பொறுப்புக்கூறல் விவகாரங்களுக்கு சிறிலங்கா உள்ளக செயல்முறைகளின் மூலம் பதிலளிக்கத் தவறினால், அனைத்துலக செயல்முறைகளை நோக்கிய அழுத்தங்கள் அதிகரிக்கும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
பாஜக செயல்படும் விதம் வேதனையளிக்கிறது: ராஜ்நாத்சிங்குக்கு அத்வானி கடிதம்
பாஜக மூத்த தலைவர் அத்வானி, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்குக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், பாஜக செயல்படும் விதம் குறித்து, தமது வேதனையை ஏற்கனவே தெரிவித்துள்ளதாக
மருத்துவமனையில் தீ: ரஷ்யாவில் 37 பேர் பலி
ரஷ்யாவில், மனநல மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில், 37 பேர் கருகி பலியாயினர். ரஷ்யாவின், நோவ்கோராட் பகுதியில் உள்ள,
மோடி வெற்றிபெறுவதை இந்த உலகம் பார்க்கத்தான் போகிறது: ராம்ஜெத்மலானி
பாஜக பிரதமர் பதவி வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நரேந்திர மோடிக்கு ராம்ஜெத்மலானியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். நரேந்திரமோடி வெற்றிபெறுவதை இந்த உலகம் பார்க்கத்தான் போகிறது. இந்தியா இழந்துவிட்ட பெருமையை மோடி மீட்டெடுப்பார் என்று கூறியுள்ளார்.

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி: ராஜ்நாத் சிங் அறிவிப்பு
 

    டெல்லியில் பாஜக ஆட்சிமன்றக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாகவும், பிரதமர் பதவி வேட்பாளர் குறித்தும்  ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 
கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த லொறியிலிருந்து 120 கிலோ வெடிபொருட்கள் மீட்பு
கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றிலிருந்து 120 கிலோ கிராம் எடையுடைய வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
தாயக மண்ணில் சுய நிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு, தமிழ் தேசியம் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஒரு தேசமாக நாங்கள் வாழ தீர்வு கிடைக்க வேண்டும்: சிறீதரன் எம்.பி
வடக்கு கிழக்கு இணைந்த தாயக மண்ணில் எங்கள் சுய நிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு, எங்களுடைய தமிழ் தேசியம் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஒரு தேசமாக நாங்கள் வாழ்வதற்குரிய தீர்வு எமக்குக் கிடைக்க வேண்டும் என முட்கொம்பனில் இடம்பெற்ற தேர்தல்
யாழ்ப்பாணத்தில் தேர்தல் வன்முறைகள்! நாவற்குழியில் தமிழ் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் மீது தாக்குதல்
இன்று நாவற்குழி பகுதியில் தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த தனது ஆதரவாளர்கள் பத்துப் பேர் மீது அடையாளம் காணப்படாத கும்பலொன்று தாக்குதல் நடத்தியிருப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராகிய பாலசுப்பிரமணியம் கஜதீபன் தெரிவித்திருக்கின்றார்.
தூக்கில் தொங்கிய நிலையில் மட்டு. மத்திய கல்லூரி மாணவனின் சடலம் மீட்பு!
மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் தரம் 10ல் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் வேட்பாளர் ராஜ்குமார் மீது ஜனாதிபதியின் அடியாட்கள் தாக்குதல்!
மத்திய மாகாண சபை தேர்தலுக்காக நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி பட்டியலில் ஜனநாயக மக்கள் முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர் ராஜ்குமார் மீது மஸ்கெலியா நகரப்குதி ஜனாதிபதியின் ஆளென தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட
ராஜீவ் காந்தியை படுகொலை செய்ய உத்தரவிட்டது பிரபாகரன் தான்: கே.பி
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்ய உத்தரவிட்டது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் என கேபி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
மட்டு அம்பாறை மக்கள் வெளியிட்டுள்ள துண்டுப்பிரசுரம்..
அம்பாறை மாவட்டத்தின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தலைமையில் அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ்தேசியக்கூட்டமைப்பின் உள்ளூராட்சிமன்றங்களின் தவிசாளர்கள், உப தவிசாளர்கள், மாநகரசபையின் எதிர்க்கட்சித்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் அடங்கலான குழுவினர் வடமாகாண சபைத்தேர்தலில் பிரச்சார நடவடிக்கைகளுக்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று மாலை வந்திறங்கினர். நாளைமுதல் தொடர்ச்சியாக பலபகுதிகளிலும் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்..
அம்பாறை மாவட்டத்தின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தலைமையில் அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ்தேசியக்கூட்டமைப்பின் உள்ளூராட்சிமன்றங்களின் தவிசாளர்கள், உப தவிசாளர்கள், மாநகரசபையின் எதிர்க்கட்சித்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் அடங்கலான குழுவினர் வடமாகாண சபைத்தேர்தலில் பிரச்சார நடவடிக்கைகளுக்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று மாலை வந்திறங்கினர். நாளைமுதல் தொடர்ச்சியாக பலபகுதிகளிலும் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்..

13 செப்., 2013

பாஜக ஆட்சிமன்றக் குழு கூட்டம்: அத்வானி புறக்கணிப்பு
பாஜக ஆட்சிமன்றக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கலந்து கொள்ளவில்லை. 
டெல்லி மாணவி பலாத்கார வழக்கு! குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு.
ஓடும் பேருந்தில் டெல்லி மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் டெல்லி விரைவு நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
விடுதலைப் புலிகளை அமெரிக்காவின் உதவியுடன் எவ்வாறு அழித்தோம்: கோத்தபாய விளக்கம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் மிதக்கும் ஆயுத களஞ்சியங்களை ஆழ் கடல் பகுதியில் வைத்து அழிக்க அமெரிக்கா உதவியாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில், ஆளுநர் சந்திரசிறி கலந்து கொண்டது பிரச்சினைக்குரியது: கெஹெலிய
வடக்கில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களை ஆதரித்து நடக்கும் தேர்தல் கூட்டங்களில் மாகாணத்தின் ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி கலந்து கொண்டமை பிரச்சினைக்குரியது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அகவை ஐம்பது காணும் அண்ணலே வாழ்க 


                                        13.09.2013
விஸ்வலிங்கம் குகராசன் 
சுவிட்சர்லாந்து 
    

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியதி மதிய குழு உறுப்பினரும் தாயாக விடுதிக்கு பெரும் பங்கற்றியவருமான குகரசன் அவர்கள் இன்று தனது ஐம்பதாவது அகவையினுள் காலடி வைக்கிறார் இவரை இன்னும் இன்னும் இனிதே நீடூழி வாழ்கவென வாழ்த்துகிறோம் 




ஈகைப்பேரொளி இரட்ணசிங்கம் செந்தில்குமரனின் வீரவணக்க நிகழ்வு
வீரவணக்க நிகழ்வு இருபுறங்களும் மலைகளால் சூழப்பட்ட வலே மாநிலத்தில் 11.09.2013 மதியம் 12.00 மணிக்கு ஆரம்பமானது. ஈகைப்பேரொளியின் திருவுடல் அவரின் உறவினர்களால் தாங்கி வரப்பட்டு மண்டபத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டு ஈகைப்பேரொளி செந்தில்குமரனின் குடும்பத்தினரால் சமயக்கிரிகைகள் நடாத்தப்பட்டது.
கொழும்பு - கிளிநொச்சிக்கு தினமும் மூன்று ரயில் சேவைகள்! ஞாயிறு முதல் ஆரம்பம்
கொழும்பு, கோட்டையிலிருந்து கிளிநொச்சிக்கு எதிர்வரும் 15 ம் திகதி முதல் தினமும் மூன்று ரயில்கள் புறப்படவுள்ளன.அதற்கான ஆசனங்களை முன் கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம் என ரயில்வே
தமிழ் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை! மகிந்த
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக தேர்தல்கள் திணைக்கள ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
தம்புள்ள பள்ளிவாசல் அகற்றப்படும் அபாயம்!- நிர்வாகத்தினர் கவலை
மாத்தளை மாவட்டம் தம்புள்ள புனித பூமி அபிவிருத்தி திட்டம் தொடர்பாக புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள வரை படத்திலும் தம்புள்ள ஹைரியா பள்ளிவாசலை அகற்றுவதற்கு அடையாளமிடப்பட்டுள்ளதாக நிர்வாகம் கவலை வெளியிட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் அவுஸ்திரேலியத் தூதுவர் இரகசிய சந்திப்பு
தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலியத் தூதுவருக்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
பிரபாகரன் கேட்டதையே கூட்டமைப்பு கேட்கிறது என மகிந்த கூறியது வெட்கத்திற்குரியது! - சீ.வி.விக்கினேஸ்வரன்
தம்பி பிரபாகரன் கேட்டதையே தமிழ்தேசிய கூட்டமைப்பும் கேட்பதாக சிறீலங்காவின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்திருக்கும் கருத்து மிகவும் வெட்கத்திற்குரியது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சட்டம் படித்ததாக கூறிக்கொள்ளும் ஒருவருக்கு தனிநாட்டு கோரிக்கைக்கும், சமஷ்டிக்கும் வித்தியாசம் தெரியாதா எச்னவும் கேள்வி எழுப்பியுள்ளார்

’கூட்டணியும் கிடையாது ஒரு புண்ணாக்கும் கிடையாது’
மக்கள் முன்பு இசையமைத்த இசைஞானி!

ராஜராஜனின் போர்வாள் படத்தொடக்க விழா கரூர் பசுபதீசுவரர் கோயிலில் நேற்று(11.09.13) சித்தர் கரூவூரார் சன்னதியில் நடைபெற்றது.
கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க கோரி ஆர்ப்பாட்டம்! திருமாவளவன் உட்பட 200 பேர் கைது
சென்னையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் உள்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையில் நடக்க உள்ள கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது, கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் செப்டம்பர் 12ம் திகதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
நீதி கேட்டு ஐ.நா. முன்றலில் மாபெரும் போராட்டம்!- சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு
16.09.2013 ஐ.நா. முன்றலில் நடைபெறவிருக்கும் மாபெரும் ஊர்வலத்திலும் கவனஈர்ப்பு போராட்டத்திலும் கலந்து கொள்வதுடன், எமது ஈகைப்பேரொளி செந்தில்குமரனுக்கும் வணக்கம் செலுத்தி அவன் கோரிக்கைக்கு வலுச்சேர்க்க வேண்டிய அவசியம் ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கிறது.

ஆலய காணியில் நிலைகொண்டுள்ள கடற்படையினரை வெளியேற்றவும் : செல்வம் எம்.பி

மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள சிறுத்தோப்பு கிராமத்தில் அமைந்துள்ள சிறுத்தோப்பு ஆலயம் ஒன்றிற்குச் சொந்தமான 17 ஏக்கர் காணியில் நிலைகொண்டுள்ள

நுவரெலியாவில் கடும் மழை : இயல்பு நிலை பாதிப்பு

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடை மழையினால் நுவரெலியா அம்பகமுவ, கொத்மலை, வலப்பனை பிரதேசங்களில் பல வீடுகள்

12 செப்., 2013

லண்டன் நகரின் அமைந்துள்ள கடையொன்றில் புகுந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள் இலங்கைத் தமிழர் ஒருவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
லிவர்பூல் பிரதேசத்தின் லித்தர்லேண்ட் என்ற பகுதியில் அமைந்துள்ள கடையொன்றுக்குள் புகுந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள், கடை ஊழியரான மில்டன் தர்மலிங்கம் என்ற தமிழர் மீதே தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பள்ளிக்கூடத்தில் ரேக்கிங்: 5 மணி நேரம் கழிவறையில் அடைப்பு: 11 வயது மாணவி உயிரிழப்பு
கொல்கத்தாவில் ராகிங் காரணமாக 11 வயது மாணவி உயிரிழந்ததால், ஆத்திரமடைந்த உறவினர்கள் பள்ளிக்கூட வகுப்பறைகளை அடித்து நொறுக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். 
என்றும் தமிழர்களின் தானைத் தலைவன் பிரபாகரன் மட்டுமே: ஸ்கந்தபுர மாபெரும் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் வேட்பாளர
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களின் தொடராக கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியில் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ம.அன்ரன் டானியல் (ஒஸ்மன்) தலைமையில் மங்கள விளக்கேற்றல் மற்றும் உயிர் நீத்தோர் அகவணக்கத்துடன் நேற்று
போரின் போது ஐ.நா இலங்கையில் செயற்பட்ட விதம் தொடர்பிலான அறிக்கை ஆராயப்படுகிறது!- பர்ஹான் ஹக்
இலங்கையில் போர் நடைபெற்ற போது ஐக்கிய நாடுகள் அமைப்பு எப்படி செயற்பட்டது என்பது பற்றிய அறிக்கை ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு கிடைத்துள்ளதாகவும், அந்த அறிக்கையை ஆராய்ந்து வருவதாகவும் ஐக்கிய நாடுகளின் இணை செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
இ.தொ.காவை சேர்ந்த 18 பேர் ஐ.தே.கட்சியில் இணைந்தனர்
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 18 பிரதேச தொழிற்சங்க தலைவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டனர்.
ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையினை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்! ஜெனீவாவில் இந்தியா தெரிவிப்பு
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 24வது கூட்டத் தொடரில்,  ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்களது  இலங்கை தொடர்பிலான வாய்மூல அறிக்கையினை தாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக கூட்டத் தொடரில்

வாதுவையில் ஹோட்டலொன்றில் பதற்ற நிலை: பொலிஸார் குவிப்பு

வாதுவ பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டலொன்றில் இரு குழுக்களிடையே முரண்பாடொன்று இடம்பெற்றுள்ளதுடன் அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவியதாகவும்

தமிழ் மக்களிடம் சென்று 4 ஆவது ஈழப் போருக்கான அனுமதியினை த.தே.கூ கோரி நிற்கின்றது: றிசாத்

வடமாகாண சபை தேர்தல் குறித்து மக்கள் மத்தியில் தமிழ் கூட்டமைப்பு பிழையாக  வழி நடத்திவருகின்றது.

இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு வெடிமருந்து, போதை பொருள் கடத்திய வழக்கில் 16 கடத்தல்காரர்களின் நடமாட்டம் குறித்து இந்திய உளவுப்பிரிவு பொலிசார் விசாரித்து  வருவதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் போர் தீவிரமாக நடந்தபோது தமிழகத்தில் இருந்து

 கோப்பாய் ஆசிரிய கலாசாலை ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக அழைத்து ஈ.பி.டி.பி தேர்தல் பிரச்சாரம் 
கோப்பாய் ஆசிரிய கலாசாலை ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக பஸ்களில் ஏற்றி தேர்தல் கூட்டத்திற்கு கொண்டு சென்ற சம்பவம் ஒன்று இன்று
 பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டிற்காக கொழும்பில் பாடசாலைகளிற்கு விடுமுறை 
இலங்கையில் நடைபெற உள்ள பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டை நாடாத்துவதற்காக தலைநகர் கொழும்பில்
யாழில் முதவாவது மின் தகன மயானம் 
யாழ் மாநகர சபையினால் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது மின் தகன இந்து மயானம் இன்று புதன்கிழமை யாழில் திறந்து வைக்கப்பட்டது.



          ""ஹலோ தலைவரே...… … ராகுல்காந்தியும் கனிமொழியும் சந்தித்தது பற்றி நம்ம நக்கீரனில் டீடெய்லா எழுதியிருந்ததைப் படிச்சிருப்பீங்க..''

""படிச்சேம்ப்பா.. தி.மு.க-காங்கிரஸ்-தே.மு.தி.க கூட்டணிக்கான முயற்சிகளையும் அதற்காக ஆ.ராசாவை கழற்றிவிடப் போவதா டெல்லி வட்டாரத்தில் ஒலிக்கும் பேச்சுகளையும் விரிவா எழுதியிருந்ததே நம்ம நக்கீரன். கலைஞர்கூட இது சம்பந்தமா பேட்டி கொடுத்திருந்தாரே..



             மிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2013-2015 ஆம் ஆண்டுகளுக்கான தேர்தல் பலத்த பரபரப்புடன் கடந்த 7-ந்தேதி நடந்து முடிந்திருக்கிறது. "கலைப்புலி' எஸ்.தாணு அணியை தோற் கடித்து அசுர பலத்துடன் ஜெயித்திருக் கிறது கேயார் அணி.

எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை தயாரிப்பாளர் சங்க தேர்தலில் இம்புட்டு பரபரப்பு ஏற்பட ஏகப்பட்ட "அரசியல்' காரணங்கள் இருந்ததுதான்
பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட டெல்லி மாணவி
கொலை வழக்கு தீர்ப்பு: வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைப்பு
டெல்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளான ராம்சிங், வினய், அக்க்ஷய், முகேஷ், பவன் மற்றும் மைனர் சிறுவன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். 
இலங்கையில் இயங்கும் லங்காசிறி, தமிழ்வின் இணையத்தள சேவர்கள் மீது சைபர் தாக்குதல் நடாத்தப்பட்டு வருகின்றன
பொதுவாக சிங்கப்பூரில் இருந்து இலங்கை செல்லும் செர்வர்கள் மீது அதிக தாக்குதல்கள் நடைபெறுகின்றன
தேர்தல் வேட்பாளர்களின் கருத்துக்கள் அடங்கிய பிரச்சாரங்கள் லங்காசிறி தமிழ்வின் ஊடகங்களில் அதிகமாக வெளிவரும் இந்நிலையில் இவ்வாறாக இலங்கையில் இணையத்தள சேர்வர்கள் மீதான தாக்குதல் நடாத்துவது தேர்தல் பிரச்சாரங்களை முடக்குவது போன்ற செயல்கள் தான்
இரவல் சின்னத்தில் போட்டியிடுவோரால் எத்தகைய அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியும்: வேட்பாளர் ப. அரியரத்தினம் கேள்வி - தேனிசைச் செல்லப்பா பாடல் 2 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான தேர்தல் பரப்புரைக் கூட்டம் கிளிநொச்சி பூநகரிப் பகுதியில் கரைச்சிப் பிரதேச சபையின் உப தவிசாளர் வ.நகுலேஸ்வரன் தலைமையில் மாலை 4 மணிக்கு ஆரம்பமாகி இரவு 8 மணிக்கு நிறைவுபெற்றது.
இலங்கைத் தமிழர் செந்தூரனை திருப்பி அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் தடை
இலங்கை அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள செந்தூரனை நாடு கடத்துவது குறித்து மத்திய, மாநில அரசுகள் எடுத்த முடிவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரபாகரனின் பிரசாரங்களையே கூட்டமைப்பும் முன்னெடுக்கின்றது: வவுனியா பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிரசாரங்களையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று வவுனியாவில் குற்றம் சுமத்தினார்.
லண்டன் பொலிஸ் தனது இணையத்தளத்தில் பதிவேற்றியிருந்த புலிக்கொடியை நீக்கியது
லண்டன் மெட்ரோபொலிடன் பொலிஸ் தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தமிழ் மொழிக்காக பயன்படுத்தியிருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் கொடியை நீக்கியுள்ளது.

11 செப்., 2013

ஜெனிவாவில் இனப்படுகொலையை விளக்கும் புகைப்படக் கண்காட்சி! தடை செய்யுமாறு இல. தூதரகம் வேண்டுகோள்
ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 24ஆவது கூட்டத்தொடர் ஆரம் பமாகியுள்ள நிலையில் ஐ.நா. முன்றலில் ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு நடத்திய இனப் படுகொலையை விளக்கும் புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
லோகநாதன் மருதையாவினால் சேகரிக்கப்பட்ட புகைப்படங்களின் காட்சி எதிர்வரும் 15ம் திகதி வரையும், அதன் பின்னர் 23ம் திகதியிலிருந்து 27ம் திகதி வரையிலும் இடம்பெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நண்பனை கொண்டு காதலியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர்
காதலியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி அதனை வீடியோவில் பதிவுசெய்து அதனை தனது நண்பனுக்கு காட்டி, நண்பனை கொண்டும் தன் காதலியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சுவிஸில் இளம்பெண் கொடூர கொலை

சுவிட்சர்லாந்தில் பெண் ஒருவர் பல கத்திக்குத்து காயங்களுடன் மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
சுவிஸில் உள்ள ஜெனிவா மற்றும் லவ்சான் 
ஐ.நாவின் நடவடிக்கைக்கு இலங்கை நன்றி தெரிவிப்பு
ஐக்கிய நாடுகளின மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கையை பாதுகாப்பு சபையின் பிரேரணையான ஆயுத மோதலில் சிறுவர்கள் என்ற பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டமைக்கு இலங்கை அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் கச்சாயில் தாயும் மகளும் கொலை
யாழ்ப்பாணம் கொடிகாமம் கச்சாய் பகுதியில் இன்று அதிகாலை குடும்பஸ்தர் ஒருவர் தமது மனைவியையும் மகளையும் கொலை செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தமிழநாட்டில் தமிழீழ சின்னம்! திறந்து வைக்க முதல்வர் வருவாரா?

2009 நாடாளுமன்றத் தேர்தலில் புயலைக் கிளப்பிய ஈழ விவகாரம்தான் இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கப் போகிறது. இலங்கையில் போர் உக்கிரமாக வெடித்து தமிழர்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட நேரத்தில் இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் வேலைகள் ஜரூராக நடந்தன.

ad

ad