புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 செப்., 2013




             மிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2013-2015 ஆம் ஆண்டுகளுக்கான தேர்தல் பலத்த பரபரப்புடன் கடந்த 7-ந்தேதி நடந்து முடிந்திருக்கிறது. "கலைப்புலி' எஸ்.தாணு அணியை தோற் கடித்து அசுர பலத்துடன் ஜெயித்திருக் கிறது கேயார் அணி.

எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை தயாரிப்பாளர் சங்க தேர்தலில் இம்புட்டு பரபரப்பு ஏற்பட ஏகப்பட்ட "அரசியல்' காரணங்கள் இருந்ததுதான்
.நக்கீரன் 

நடிகர்கள்ல விஜய்க்கும் சூர்யா வுக்குமான சினிமா போட்டி தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் எதிரொலித்தது.

எப்படி?

"கலைப்புலி' தாணு, சங்கிலி முருகன், புஷ்பா கந்தசாமி, சந்திரபிரகாஷ் ஜெயின் ("தலைவா' புரொடியூஸர்) உள்ளிட்ட தாணு அணியைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் விஜய்யை வைத்து படம் தயாரித்தவர்கள். விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி.யும் தாணு அணிக்கு சூத்ரதாரியாக இருந்தார். இத னால் தாணுவின் அணி விஜய்யின் அணியானது.

அதுமட்டுமில்லாமல் ஓரிரு மாதங்களுக்கு முன் திரைப்பட விநியோகஸ்தர் கூட்டமைப்பு எடுத்த ஆபத்தான ஒரு முடிவை அப்போது கவுன்சில் தலைவராக இருந்த எஸ்.ஏ.சி.யும், பொருளாளர் தாணுவும் ஏற்றுக் கொண்டனர். அதாவது... ஒரு தயாரிப்பாளர் படத்தை எடுத்து முடித்து சென்ஸார் சான்றிதழ் வாங்கியதும், சான்றிதழை விநியோகஸ்தர் கூட்டமைப்பிடம் கொடுத்துவிட வேண்டும். அந்தப் படத்தை எந்த தேதியில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்கிற முடிவை விநியோகஸ்தர் கூட்டமைப்பு முடிவு செய்யும். இதை எஸ்.ஏ.சி. தரப்பு ஏற்றுக் கொண்டது.

"இப்படி ஒரு முடிவு உறுதி செய்யப்பட்டு விட்டால் சூர்யா, கார்த்தி படங்களைக் கூட குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் செய்யாமல் போய்விட முடியும் என்பதால் ஆவேசமான, சூர்யாவின் சித்தி மகன் ஞானவேல்ராஜா களத்தில் குதித்தார். கேயார் அணியில் இணைந்தார். அதன்பிறகே கேயார் அணி சூர்யாவின் அணியாக உருவெடுத்தது.

இதுபோக இன்னொரு முனை தாக்குதலுக்கும் ஆளானது விஜய் அணி எனப்பட்ட தாணு அணி.

எஸ்.ஏ.சி.க்கும், சரத்துக்கும் ஏற்கனவே ஆகாது. அதனால் கேயார் அணியை முன்னிறுத்தி ஆதரவு திரட்டினார் சரத். ஜெ.விடமும் கேயார் அணிக்கு ஆதரவு தர கேட்டுக் கொண்டார். தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் கல்யாண் சமீபத்தில் ஜெ.வை சந்தித்தார். சென்னையில் நடைபெறவிருக்கும் இந்திய சினிமா நூற்றாண்டு விழா சம்பந்தமாக இந்த சந்திப்பு நடந்தது. அப்போது தயாரிப்பாளர் சங்க தேர்தல் குறித்தும், கேயார் அணி ஜெயிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஏற்கனவே "தலைவா' படப்பிரச்சினையில் விஜய்-எஸ்.ஏ.சி. மீது ஜெ. அதிருப்தியில் இருந்த நிலையில்தான் தேர்தலுக்கு முதல்நாள் சரத் மற்றும் இப்ராஹிம் ராவுத்தருக்கு ஜெ.விடமிருந்து கேயார் அணியை ஆதரித்து சிக்னல் கிடைத்தது.

இதையடுத்து ஜெ. படத்துடன் கேயார் அணியை ஆதரித்து சரத்தும், ராவுத்தரும் நாளிதழில் விளம்பரம் செய்தனர்.

நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் வாக்குப்பதிவு தொடங்கியது. அ.தி.மு.க.வின் கட்சிப் பத்திரிகையான "நமது எம்.ஜி.ஆரி'லும் இரண்டு பக்கத்திற்கு அந்த விளம்பரம் கொடுக்கப்பட்டிருந்தது.

உடனடியாக பலநூறு காப்பிகள் "நமது எம்.ஜி.ஆர்.' பத்திரிகை, வாக்களிக்கும் இடத்திற்கு கொண்டு வரப்பட்டு விநியோகிக்கப்பட்டது.

"அம்மா ஆதரிக்காம அவங்க கட்சிப் பத்திரிகையில் விளம்பரம் வருமா?' என "அரசியல்' கலந்ததை உறுதி செய்து கொண்டனர்.

"நான் எல்லா தயாரிப்பாளர்களுக்கும் பொதுவானவன்' என விஜய் அறிக்கை விட்டாலும் கூட எஸ்.ஏ.சி. பலருக்கும் போன் போட்டு தாணு அணிக்கு கேன்வாஸ் செய்தார்.

சூர்யா தனது நிலைப்பாடு குறித்து வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் கூட சிவகுமார், கார்த்தி ஆகியோர் கேயார் அணிக்கு கேன்வாஸ் செய்தார்கள்.

ஓட்டுப்பதிவு தொடங்கிய நிலை யில்... தேர்தல் அதிகாரிகளான ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஜெகதீசன் மற்றும் வெங்கட்ராமன் ஆகியோரிடம் தாணு தரப்பினர் புகார் ஒன்றை தெரிவித்தனர். ஓட்டுப்பதிவு நடக்கும் வளாகத்திற்கு உட்புறத்திலும் வைக்கப்பட்டிருக்கும் ஜெ. கட்-அவுட்டுகளை அகற்ற வேண் டும்!' எனச் சொன்னார்கள். இதை யடுத்து தேர்தல் அதிகாரிகள் இருவரும் வெளியே வந்து பார்வை யிட்டு திட லின் உள்புறம் வைக்கப்பட்டிருந்த ஐந்து கட்-அவுட்களை அகற்ற உத்தர விட்டார்கள். இதே போல் தாணுவின் படம் பொறித்த டி-ஷர்ட் அணிந்து வந்த தயாரிப்பாளர் சங்க உறுப்பினர் அல்லாதவர்களை வெளியேற்ற வேண்டும் என கேயார் தரப்பு போலீஸில் முறையிட்டது. இதனால் அரைமணி நேரம் தாமதமாக ஓட்டுப் பதிவு தொடங்கியது.

ரஜினி, கமல் உள்ளிட்டவர்கள் வி.ஐ.பி. என்ட்ரன்ஸ் வழியாகப் போய் ஓட்டளித்தனர். விஜயகாந்த் வந்த போது ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகளும் கும்பலாக வர... "ஓட்டுப்போட வருகிறவர்கள் "யாராக' இருந்தாலும் வரிசையில் வரவேண்டும்' என அறிவிப்புச் செய்தார் ஒரு போலீஸ்காரர். இதற்கு தே.மு.தி.க. நிர்வாகிகள் எதிர்ப்புத் தெரிவிக்க... அதன்பிறகு வி.ஐ.பி. வழியில் சென்று ஓட்டளித்தார் விஜயகாந்த். ஆனால் விஜயகாந்த் மைத்துனர் சுதீஷை வி.ஐ.பி. வழியில் அனுமதிக்காமல் க்யூவில் நிற்கச் சொன்னார்கள். மிக நீண்ட அந்த வரி சையைப் பார்த்ததும் "நான் அப்புறமா வந்து ஓட்டுப் போடுறேன்' எனச் சொல்லி கிளம்பிய சுதீஷ் ஓட்டுப்பதிவு முடியும் வரை வரவேயில்லை.

விஜய் தரப்பு ஆதரித்த தாணு அணி பெரும் தோல்வியையும் ஜெ. தரப்பும் சூர்யா தரப்பும் ஆதரித்த கேயார் அணி பெரும் வெற்றியையும் பெற்றது. "கம்ப்யூட்டர் ஓட்டுப்பதிவில் குளறுபடி நடந்திருக்கிறது. இந்த தேர்தல் முடிவை ஏற்பதற்கில்லை!' என தாணு அறிவித்தார்.

விஜய்-எஸ்.ஏ.சி. அணி தோல்வி யடைந்த விஷயம் ஜெ.வுக்கு சொல்லப்பட ரொம்பவே சந்தோஷப் பட்டாராம் ஜெ.

 "நான் அப்படி என்ன செஞ்சுட்டேன். ஏன் முதல் வர் எங்களுக்கு எதிரா இருக்காங்க? என் அப்பா ஒரு அணியை ஆதரித்ததற்காக எங்களை எதிரி யாக நினைத்து முதல்வரே இன்னொரு அணியை ஆதரிக்கிறாரே! "தலைவா' பட விஷயமாக முதல் வரைச் சந்திக்க கொடநாடுபோய் அவமானப்பட் டோம். அதுக்குப் பின்னாடி போயஸ் கார்டனில் முதல்வரைச் சந்திக்கப் போய் அவமானத்துக்கு மேல் அவமானப்பட்டோம்!' என தனக்கு நெருக்க மானவர்களிடம் மனவேதனைப்பட்டாராம் விஜய்.

கார்டனில் என்ன நடந்தது? என விஜய் வட்டாரங்களில் விசாரித்தோம்.

"கொடநாட்டிலிருந்து முதல்வர் போயஸ் கார்டன் திரும்பியதும் மறுநாள் எஸ்.ஏ.சி. ஒரு காரிலும் விஜய் ஒரு காரிலும் கார்டன் போனாங்க. "முதல்வரைச் சந்திக்கணும்'னு எஸ்.ஏ.சி. கொடுத்த துண்டுச்சீட்டைப் பெற்ற காவலர்கள் ஜெ. உதவியாளர் பூங்குன்றனிடம் அதைக் கொடுக்க... எஸ்.ஏ.சி. உள்ளே அழைக்கப்பட்டார். விஜய் தன் காரிலேயே கொஞ்ச தூரம் தள்ளி காத்திருந்தார்.

எஸ்.ஏ.சி.யை தரைத்தளத்திற்கு வர வழைத்து பூங்குன்றன் விசாரிக்க... "சி.எம்.மை பார்க்கணும். என் மகனும் வெளியே வெய்ட் பண் றார்' எனச் சொல்ல... ""அம்மாக்கிட்ட சொல்றேன். நீங்க வெய்ட் பண்ணுங்க' என எஸ்.ஏ.சி.யை அமர வைத்துவிட்டு மாடிக்குப் போனாராம் பூங்குன்றன். இரண்டு மணி நேரமாகியும் எந்தப் பதிலும் இல்லாததால் மேலே இருந்த பூங் குன்றனை செல் மூலம் தொடர்பு கொண்டு "என் மகன் அவசர ஷுட்டிங் போகணும்! கார்லயே எவ்வளவு நேரம் உட்கார முடியும்?' என எஸ்.ஏ.சி. சொல்ல  அங்கு வந்த அதிகாரிகள் "சி.எம். வீட்டுக் குள் செல்ஃபோன் கொண்டு வரக்கூடாது' என செல்ஃபோனை வாங்கி ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டார்களாம்.


வெளியே இருந்த விஜய் தன் அப்பாவை தொடர்பு கொள்ள முயன்று, முடியாத தால் காரிலிருந்து இறங்கி கேட்டுக்கு வந்திருக்கிறார்.

"நீங்க யாரு? எதுக்கு வந்தீங்க?' என காவலர்கள் குடைச்சல் தர? "என்னைத் தெரி யாதா? நான் விஜய் என் அப்பா உள்ளே இருக்கார். அவரோட போன் ஸ்விட்ச் ஆஃப்பில் இருக்கு. நான் அவர்கிட்ட பேசிட்டு அவசரமா கிளம்பணும்!' எனக் கேட் டாராம் விஜய்.

"கொஞ்சம் வெயிட் பண்ணுங்க' என நிற்கச் சொல்லிவிட்டு எஸ்.ஏ.சி.யை அழைத்து வந்திருக் கிறார்கள். "எவ்வளவு நேரம் வெய்ட் பண்றது? நான் வீட்டுக்கு கிளம்புறேன்!' எனச் சொல்ல... "கொஞ்சம் பொறுமையா இருப்பா' என மகனை சமாதானப் படுத்தினாராம் எஸ்.ஏ.சி.

அப்போது காவலர் ஒருவர் "பூங்குன்றன் உங்களைக் கூப்பிடுறார்' என எஸ்.ஏ.சி.யிடம் சொல்ல... "இதோ கூப்பிடுறாங்கப்பா' தகவல் தெரிஞ்சுக்கிட்டு கிளம்பு' என விஜய்யிடம் சொல்லிவிட்டு எஸ்.ஏ.சி. உள்ளே போக "முறையான அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கிட்டு வந்தாதான் சி.எம்.மை வீட்டில் சந்திக்க முடியும்' எனச் சொல்லிவிட்டாராம் பூங்குன்றன்.

"தோல்வியோடு திரும்பி வந்த எஸ்.ஏ.சி.யிடம் "உங்க பேச்சைக் கேட்டு இனிமே போயஸ் கார்டன் பக்கம் வரவே மாட்டேன்!' என விஜய் கிளம்பி வந்துட்டார். எஸ்.ஏ.சி.யும் நொந்து போய் கிளம்பினாராம்' என விவரித்தார்கள்.

விஜய்யும், சூர்யாவும் போட்டி ஹீரோக்களாக இருக்க... சூர்யாவை ஆதரிக்கிறதாம் மேலிடம்.

இந்த அரசியல் அதிரடிகளுக்கு மத்தியில் தாணு, டைரக்டர் சங்க செயலாளர் ஆர்.கே.செல்வமணி "தலைவா' தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின், சங்கிலிமுருகன், புஷ்பா கந்தசாமி உள்ளிட்ட பிரபலங்கள் தோல்வியைத் தழுவியிருக்கிறார்கள்.

சங்கத்தைக் கைப்பற்றிய கேயார் டீம் முதல் வேலையாக சங்க அலுவலகத்தில் கணபதி ஹோமம் நடத்தியிருக்கு. அதோடு முதல் அலுவலாக புதிய லெட்டர் ஹெட் தயாரித்து சி.எம். அப்பாயிண்ட் மெண்ட் கேட்டு கடிதம் ரெடி செய்திருக்கிறார்கள்.

ad

ad