11 செப்., 2013

ஐ.நாவின் நடவடிக்கைக்கு இலங்கை நன்றி தெரிவிப்பு
ஐக்கிய நாடுகளின மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கையை பாதுகாப்பு சபையின் பிரேரணையான ஆயுத மோதலில் சிறுவர்கள் என்ற பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டமைக்கு இலங்கை அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் 24வது மனித உரிமைகள் மாநாட்டில் கலந்துக் கொண்டிருந்த இலங்கையின் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் அளவில் இலங்கை இந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கையின் பிரதிநிதிகள், இலங்கையில் இருந்து சுமார் 190 சிறுவர் போராளிகள் புனர்வாழ்வளிப்புக்கு பின்னர், தற்போது பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகி இருப்பதாக தெரிவித்தனர்.
அத்துடன் அவர்கள் விடுதலைப் புலிகளில் முக்கிய போராளிகளாக இருந்த போதும், அவர்கள் யாரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.