12 செப்., 2013

வாதுவையில் ஹோட்டலொன்றில் பதற்ற நிலை: பொலிஸார் குவிப்பு

வாதுவ பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டலொன்றில் இரு குழுக்களிடையே முரண்பாடொன்று இடம்பெற்றுள்ளதுடன் அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவியதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
மேலும் சம்பவத்தின் போது அங்கு வந்த  அப்பிரதேச பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பக்கச்சார்பாக செயற்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
குறித்த ஹோட்டலின் உரிமையாளர்கள் எனக் கூறப்படும் இரு தரப்பினரிடையே முரண்டாடொன்று ஏற்பட்டதாகவும் இதனைத் தொடர்ந்து அங்கு பதற்ற நிலை நிலவியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அங்கு நிலவிய பதற்ற சூழ்நிலையால் ஹோட்டலில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகள் அசௌகரியத்துக்கு முகங்கொடுக்க நேரிட்டதாகவும் தெரியவருகின்றது.
மேலும் இதன்போது ஹோட்டலில் பிரதான நிறைவேற்று அதிகாரிக்கும் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.