12 செப்., 2013

லண்டன் பொலிஸ் தனது இணையத்தளத்தில் பதிவேற்றியிருந்த புலிக்கொடியை நீக்கியது
லண்டன் மெட்ரோபொலிடன் பொலிஸ் தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தமிழ் மொழிக்காக பயன்படுத்தியிருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் கொடியை நீக்கியுள்ளது.
புலிகளின் கொடியை தமது இணையத்தளத்தில் பயன்படுத்தியிருந்தமை தொடர்பில் பல அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் லண்டன் பொலிஸாரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக குறித்த இணையத்தளத்தின் ஊடாக தமது அதிருப்தியையும் எதிர்ப்பையும் வெளியிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் இணையத்தளத்தில் தமிழ் மொழிக்கு செல்லும் பகுதியில் பதிவேற்றியிருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் கொடி அகற்றப்பட்டுள்ளதுடன் தமிழ் என்ற வார்த்தை மட்டுமே உள்ளது.