புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 செப்., 2013

போரின் போது ஐ.நா இலங்கையில் செயற்பட்ட விதம் தொடர்பிலான அறிக்கை ஆராயப்படுகிறது!- பர்ஹான் ஹக்
இலங்கையில் போர் நடைபெற்ற போது ஐக்கிய நாடுகள் அமைப்பு எப்படி செயற்பட்டது என்பது பற்றிய அறிக்கை ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு கிடைத்துள்ளதாகவும், அந்த அறிக்கையை ஆராய்ந்து வருவதாகவும் ஐக்கிய நாடுகளின் இணை செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் இலங்கையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை தொடர பரிந்துரைகள் வழங்கப்படும்.
ஐக்கிய நாடுகளின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்படுமா என எழுப்பபட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், அதில் உள்ள சில விடங்களை பகிரங்கப்படுத்த ஐக்கிய நாடுகள் முயற்சித்து வருகிறது என்றார்.
ஆனால் எதனை இறுதியில் வெளியிட வேண்டும் என்று நாம் ஆராய்ந்து வருகிறோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் போர் முடிவடைந்ததை தொடர்ந்தும் ஐ.நா இலங்கையில் செயற்பட்ட விதம் தொடர்பாக ஆராய்ந்து பார்க்க குழு நியமிக்கப்பட்டதுடன் அது தனது அறிக்கை வழங்கியது.
இலங்கையின் இறுதிக்கட்ட போரில் ஆயிரக்காண பொதும்ககளின் இறப்பை ஐக்கிய நாடுகள் அமைப்பு தலையிட்டு தடுக்க தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

ad

ad