11 செப்., 2013

நண்பனை கொண்டு காதலியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர்
காதலியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி அதனை வீடியோவில் பதிவுசெய்து அதனை தனது நண்பனுக்கு காட்டி, நண்பனை கொண்டும் தன் காதலியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மொரட்டுவ நீதவான் கமனி டி சேரம் உத்தரவிட்டுள்ளார்.
மொரட்டுவ பிரதேசத்தில் தங்கி அங்குள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய, முதல் சந்தேகநபர் அதே பிரதேசத்தில் நிறுவனம் ஒன்றில் தொழில் புரியும் பெண்ணொருவரை காதலித்துள்ளார்.
இரண்டு வருடங்களுக்கு பின்னர் அந்த பெண்ணுடன் அறையொன்றில் இருந்ததை சந்தேகநபர் தனது தொலைபேசி கெமராவில் பதிவுசெய்துள்ளார்.
பதிவுசெய்து கொண்ட காட்சிகளை காட்டி தனது நண்பர்களுடன் அவ்வாறு இருக்குமாறு அந்த பெண்ணை அச்சுறுத்தியுள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் பொலிஸில் முறைப்பாடு செய்தார். சந்தேக நபரை கைது செய்த மொரட்டுவ பொலிஸார் அவரை பாணந்துறை கெசல்வத்தை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேக நபரிடம் பொலிஸார் நடத்திய விசாரணைகளில் தன்னுடன் பழகிய பெண்ணுக்கு இராணுவத்தில் பணியாற்றும் ஒருவருடன் தொடர்பு இருந்ததாகவும் இதனால் தான் பதிவு செய்த காட்சிகளை இணையத்தளத்தில் வெளியிடப் போவதாக கூறி அச்சுறுத்தி அந்த பெண்ணை தனது நண்பரை கொண்டு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து சந்தேக நபரும் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்தனர்.