11 செப்., 2013

சுவிஸில் இளம்பெண் கொடூர கொலை

சுவிட்சர்லாந்தில் பெண் ஒருவர் பல கத்திக்குத்து காயங்களுடன் மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
சுவிஸில் உள்ள ஜெனிவா மற்றும் லவ்சான் 
 பகுதிக்கு இடையே உள்ள கிளாண்ட் என்னும் இடத்தில் இந்த சம்பவமானது நடைபெற்றுள்ளது.
சம்பவம் நடைபெற்ற அன்று 32 வயது பெண் தனது குடியிருப்பு பகுதியில் இறந்துகிடப்பதாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் அப்பெண்ணின் உடலை கைப்பற்றியுள்ளனர்.
மேலும் அவரது கணவரிடம் விசாரணை நடத்தியதில் அவரது பதில்கள் சந்தேகம் அளிக்கும் விதத்தில் இருந்ததால் அவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்துள்ளனர்.
இது குறித்து பொலிசார் கூறுகையில், அப்பெண்ணின் உடலில் பல கத்திக்குத்து காயங்கள் உள்ளன என்றும் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் குடும்பவன்முறை என்பது பொதுவான விடயம் ஆகும்.
2011ம் ஆண்டில் வன்கொடுமையால் 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 21 பெண்கள் மற்றும் 6 ஆண்கள் என்று புள்ளிவிபரம் அறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் ஆண்களை விட 3.1 மடங்கு பெண்கள் வன்கொடுமையால் பாதிக்கப்படுகின்றனர்.