திங்கள், மார்ச் 28, 2016

இலங்கையின் முதலாவது சபாரி பூங்கா இன்று திறப்பு!

இலங்கையின் முதலாவது சபாரி பூங்கா இன்று ஹம்பாந்தோட்டை, ரிதிகம பிரதேசத்தில் திறந்து வைக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள செய்திகள் குறிப்பிடுகின்றன. 

500 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டுள்ள இச்சபாரி பூங்காவில் சிங்க வலயம்,உலக விலங்கு வலயம் மற்றும் ஆசிய யானைகள் வலயம் என மூன்று வலயங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. 

இப்பூங்காவில் 22 வகையான 200 இற்கும் மேற்பட்ட விலங்குகளை காணக்கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.