புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 மே, 2019

இருக்கிற பிரச்சினையில் இது வேறு - வேறு நாட்டின் குடியுரிமை உள்ள தமிழர் புலனாய்வு பிரிவின் அனுமதி பெற்றே உள் நுழைய விசா எடுக்கலாம்

இருக்கிற  பிரச்சினையில்  இது வேறு  - வேறு  நாட்டின்   குடியுரிமை உள்ள  தமிழர்   புலனாய்வு பிரிவின்  அனுமதி பெற்றே  உள் நுழைய  விசா  எடுக்கலாம் -இலங்கை சுற்றுலா  துறை  மோசமான வீழ்ச்சி  காணும்  நிலை 
வெளிநாட்டவர்கள் சிறிலங்காவில் வதிவிட நுழைவிசைவைப் பெற்றுக் கொள்வதற்கு, அரச புலனாய்வுச் சேவையின் அனுமதி (Clearance) அவசியம் என்ற நடைமுறையைக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது, வதிவிட நுழைவிசைவுகளை, பெற்றுக் கொள்வதற்கு உள்துறை அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதிகள் பெறப்படும் நடைமுறைக்கு மாறாக, அரச புலனாய்வுச் சேவையின் அனுமதியும் அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1000 வெளிநாட்டவர்கள் சிறிலங்காவில் நுழைவிசைவு காலாவதியான நிலையில் தங்கியிருப்பதாக கிடைத்துள்ள தகவல்களை அடுத்து, குடிவரவுத் திணைக்களம்  கடுமையான நுழைவிசைவு நடைமுறைகளை கடைப்பிடிக்கவுள்ளது.

அனைத்துலக காவல்துறையின் கருப்புப்பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் உள்ளிட்டவர்கள் சிறிலங்காவில் வதிவிட நுழைவிசைவைப் பெற்றுக் கொள்வதை தடுப்பதற்கே, அரச புலனாய்வுச் சேவையின் அனுமதி பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.

ad

ad