புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

12 மே, 2019

யாழில் பெருந்தொகையான கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

யாயாழில் கஞ்சா போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், வடமராட்சி கடற்பரப்பில் வைத்து 74 கிலோகிராம் கஞ்சா போதைப் பொருள்களுடன் குறித்த இருவரும் இன்று (சனிக்கிழமை) கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வடமராட்சி கடற்பரப்பில் கடற்படையினரின் கண்காணிப்பு நடவடிக்கையின் போதே இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது, வடமராட்சி கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 35 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களின் உடமையில் இருந்து 74 கிலோ கஞ்சாவினை கைப்பற்றிய கடற்படையினர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதுடன் கைதுசெய்தவர்களை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

சந்தேகநபர்கள் மாவட்ட போதைப் பொருள் குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.