புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 மே, 2019

ஐ.பி.எல். சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்?

இறுதிப்போட்டியில் சென்னை–மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை
ஐ.பி.எல். சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்? இறுதிப்போட்டியில் சென்னை–மும்பை அணிகள் இன்று பலப்பரீட்ச
கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு ஐதராபாத்தில் நடைபெறும் சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்–மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு ஐதராபாத்தில் நடைபெறும் சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்–மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஐ.பி.எல். கிரிக்கெட்
8 அணிகள் இடையிலான 12–வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மார்ச் 23–ந் தேதி தொடங்கியது. லீக் ஆட்டங்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் முறையே 5 முதல் 8–வது இடங்களை பிடித்து வெளியேறின.

‘பிளே–ஆப்’ சுற்று ஆட்டம் கடந்த 7–ந் தேதி தொடங்கியது. சென்னை சேப்பாக்கத்தில் நடந்த முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. விசாகப்பட்டினத்தில் 8–ந் தேதி நடந்த வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை தோற்கடித்து 2–வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது. தோல்வி கண்ட ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி வெளியேறியது. விசாகப்பட்டினத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த 2–வது தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை சாய்த்து மீண்டும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. நேற்று ஓய்வு நாளாகும்.

இன்று இறுதிப்போட்டி
ஐ.பி.எல். மகுடத்தை மீண்டும் வெல்லப்போவது யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் அரங்கேறுகிறது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்–ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் (2010, 2011, 2018–ம் ஆண்டுகளிலும்), மும்பை இந்தியன்ஸ் (2013, 2015, 2017–ம் ஆண்டுகளிலும்) அணிகள் தலா 3 முறை கோப்பையை வென்று இருக்கின்றன. 4–வது முறையாக கோப்பையை கைப்பற்றி சாதிக்க போகும் அணி எது? என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருக்கிறார்கள். 2 ஆண்டு தடையை சந்தித்த சென்னை அணி 10–வது முறையாக இந்த போட்டியில் களம் கண்டு அதில் 8–வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடித்து வைத்து சாதனை படைத்து இருக்கிறது. மும்பை அணி 5–வது முறையாக இறுதிப்போட்டியில் விளையாடுகிறது.

சென்னை பதிலடி கொடுக்குமா?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் சிறப்பாக விளையாடினாலும், மும்பை அணிக்கு எதிரான 2 லீக் ஆட்டங்களிலும் 37 ரன்கள் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அத்துடன் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்திலும் மும்பையிடம் வீழ்ந்தது. மும்பை அணிக்கு எதிராக சென்னை அணி தொடர்ச்சியாக (கடந்த ஆண்டு ஒரு ஆட்டம் உள்பட) 4 தோல்வியை சந்தித்து இருக்கிறது.

முந்தைய தோல்விகளுக்கு சென்னை அணி இறுதிப்போட்டியில் பதிலடி கொடுக்கும் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள். முதலாவது தகுதி சுற்றில் மோசமாக செயல்பட்ட சென்னை அணி, 2–வது தகுதி சுற்றில் பொறுப்புடன் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் பாப் டுபிலிஸ்சிஸ், ஷேன் வாட்சன் ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தியது அணிக்கு புதிய நம்பிக்கையை அளித்து இருக்கும். கேப்டன் டோனி இதுவரை 414 ரன்கள் குவித்து நல்ல நிலையில் உள்ளார். சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, வெய்ன் பிராவோ ஆகியோர் பேட்டிங்கில் கூடுதல் பங்களிப்பு அளித்தால் அணியை வலுப்படுத்தும்.

பலமான பந்து வீச்சு
சென்னை அணியின் பந்து வீச்சு எதிரணிக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் பேட்ஸ்மேன்களுக்கு கிலி ஏற்படுத்தி வருகிறார்கள். சுழற்பந்து வீச்சாளர்கள் இம்ரான் தாஹிர் 24 விக்கெட்டும், ஹர்பஜன்சிங் 16 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா 15 விக்கெட்டும் வீழ்த்தி இருக்கிறார்கள். வேகப்பந்து வீச்சாளர்கள் தீபக் சாஹர் 19 விக்கெட்டும், வெய்ன் பிராவோ 11 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர்.

மும்பை அணியில் அதிரடி ஆட்டக்காரர்கள் உள்ளனர். அந்த அணி பேட்ஸ்மேன்கள் சென்னை அணியின் மாயாஜால சுழற்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு வருகிறார்கள். பேட்டிங்கில் குயின்டான் டி காக் (500 ரன்கள்), சூர்யகுமார் யாதவ் (409 ரன்கள்), ரோகித் சர்மா (390 ரன்கள்) ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆல்–ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா 14 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன் 386 ரன்னும் எடுத்துள்ளார். பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா (17 விக்கெட்), மலிங்கா (15 விக்கெட்), ராகுல் சாஹர் (12 விக்கெட்) ஆகியோர் வலு சேர்க்கிறார்கள்.

4–வது முறையாக மோதல்
ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் சென்னை, மும்பை அணிகள் இதுவரை 27 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் மும்பை அணி 16 முறையும், சென்னை அணி 11 முறையும் வென்று இருக்கின்றன. இறுதிப்போட்டியில் இரு அணிகளும் 3 முறை சந்தித்து இருக்கின்றன. இதில் 2010–ம் ஆண்டில் சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி கோப்பையை வென்றது. 2013–ம் ஆண்டில் 23 ரன்கள் வித்தியாசத்திலும், 2015–ம் ஆண்டில் 41 ரன்கள் வித்தியாசத்திலும் மும்பை அணி சென்னையை வீழ்த்தி பட்டத்தை தனதாக்கியது. இன்று 4–வது முறையாக இறுதிப்போட்டியில் சந்திக்கின்றன.

சென்னைக்கு எதிரான வெற்றி உத்வேகத்தை தொடர மும்பை அணி எல்லா வகையிலும் முயலும். அதேநேரத்தில் கோப்பையை தக்க வைத்து கொள்ள சென்னை அணி தனது முழு பலத்தை வெளிப்படுத்தும். புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த வலுவான இரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

அணி வீரர்கள்
இன்றைய போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:–

சென்னை சூப்பர் கிங்ஸ்: பாப் டுபிளிஸ்சிஸ், ஷேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, டோனி (கேப்டன்), வெய்ன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், ஹர்பஜன்சிங், இம்ரான் தாஹிர், ‌ஷர்துல் தாகூர் அல்லது எம்.விஜய்.

மும்பை இந்தியன்ஸ்: ரோகித் சர்மா (கேப்டன்), குயின்டான் டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கி‌ஷன், குருணல் பாண்ட்யா, ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட், ஜெயந்த் யாதவ், ராகுல் சாஹர், மலிங்கா, ஜஸ்பிரித் பும்ரா.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

இறுதிப்போட்டிக்குள் நுழைந்த விதம் சென்னை சூப்பர் கிங்ஸ் லீக் சுற்று

பெங்களூருவுடன் 7 விக்கெட்டில் வெற்றி

டெல்லியுடன் 6 விக்கெட்டில் வெற்றி

ராஜஸ்தானுடன் 8 ரன்னில் வெற்றி

மும்பையுடன் 37 ரன்னில் தோல்வி

பஞ்சாப்புடன் 22 ரன்னில் வெற்றி

கொல்கத்தாவுடன் 7 விக்கெட்டில் வெற்றி

ராஜஸ்தானுடன் 4 விக்கெட்டில் வெற்றி

கொல்கத்தாவுடன் 5 விக்கெட்டில் வெற்றி

ஐதராபாத்துடன் 6 விக்கெட்டில் தோல்வி

பெங்களூருவுடன் ஒரு ரன்னில் தோல்வி

ஐதராபாத்துடன் 6 விக்கெட்டில் வெற்றி

மும்பையுடன் 46 ரன்னில் தோல்வி

டெல்லியுடன் 80 ரன்னில் வெற்றி

பஞ்சாப்புடன் 6 விக்கெட்டில் தோல்வி

பிளே–ஆப் சுற்று
முதல் தகுதி சுற்றில் மும்பையுடன் 6 விக்கெட்டில் தோல்வி

2–வது தகுதி சுற்றில் டெல்லியுடன் 6 விக்கெட்டில் வெற்றி

மும்பை இந்தியன்ஸ் லீக் சுற்று
டெல்லியுடன் 37 ரன்னில் தோல்வி

பெங்களூருவுடன் 6 ரன்னில் வெற்றி

பஞ்சாப்புடன் 8 விக்கெட்டில் தோல்வி

சென்னையுடன் 37 ரன்னில் வெற்றி

ஐதராபாத்துடன் 40 ரன்னில் வெற்றி

பஞ்சாப்புடன் 3 விக்கெட்டில் வெற்றி

ராஜஸ்தானுடன் 4 விக்கெட்டில் தோல்வி

பெங்களூருவுடன் 5 விக்கெட்டில் வெற்றி

டெல்லியுடன் 40 ரன்னில் வெற்றி

ராஜஸ்தானுடன் 5 விக்கெட்டில் தோல்வி

சென்னையுடன் 46 ரன்னில் வெற்றி

கொல்கத்தாவுடன் 34 ரன்னில் தோல்வி

ராஜஸ்தானுடன் சூப்பர் ஓவரில் வெற்றி

கொல்கத்தாவுடன் 9 விக்கெட்டில் வெற்றி

பிளே–ஆப் சுற்று
முதல் தகுதி சுற்றில் சென்னையுடன் 6 விக்கெட்டில் வெற்றி

ad

ad