கொடுமையிலும் கொடுமை
-
13 டிச., 2013
இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க தயாராகும் அமெரிக்கா
ராஜபக்ஷ ஆட்சியாளர்கள் ராஜதந்திர ரீதியிலான செயற்பாடுகளை புறக்கணித்து விட்டு, தொடர்ந்தும் முரண்டுபிடிக்கும் வகையில் செயற்பட்டு வருவதால், இலங்கை எதிராக பொருளாதார தடைகளை விதிப்பது தொடர்பான முனைப்புகளை அமெரிக்க மேற்கொண்டு வருவதாக தெரியவருகிறது.
கசினோவில் 150 மில்லியன் முதலீடு செய்துள்ள அமைச்சர் வீரவன்சவின் மனைவி
தேசப்பற்றாளர் என தன்னை அடையாளப்படுத்தி அரசியல் நடத்திவரும் தேசிய சுதந்திர முன்னிணயின் தலைவரும், வீடமைப்புத்துறை அமைச்சருமான விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச, 150 மில்லியன் ரூபா பணத்தை கசினோ சூதாட்ட மையத்தில் முதலீடு செய்துள்ளதாக தகவல்கள்
இனி வரும்காலங்களில் பல சிக்கல்களை நாங்கள் எதிர்கொள்ளப் போகின்றோம்; வடக்கு முதல்வர்
சட்ட திட்டங்களைக் குறைகூறிக்கொண்டு பதவிகளைப் பாதுகாக்க நாங்கள் ஆட்சிப்பீடம் வரவில்லை வடமாகாண மக்கள் என்ற முறையில் எமது அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கவே வந்துள்ளோம்.
கணவனைக் கொலை செய்து மலசலக் குளியில் போட்ட மனைவிக்கு மரண தண்டனை!
கணவனைத் தாக்கி கத்தியால் குத்திக் கொன்று அவரது உடலை மலசலக் குளியில் வீசிய மனைவி மற்றும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆணொருவருக்கும் கேகாலை மேல்நீதிமன்ற
வடக்கில் சகல நடவடிக்கைகளிலிருந்தும் இராணுவம் விலகிக்கொள்ள வேண்டும்; சலோகா பெயானி
சிறிலங்காவின் வடக்கில் இடம்பெயர்ந்த நிலையில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்கள் மிகவும் ஆபத்தான நிலையிலேயே வாழ்ந்து வருவதாக இடம்பெயர்ந்தோர் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான
டெல்லியில் ஆட்சி அமைப்பது தொடர்பாக கெஜ்ரிவாலின் கட்சிக்கு துணைநிலை ஆளுநர் அழைப்பு
70 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட டெல்லி மாநிலத்தில் ஆட்சி அமைக்க வேண்டுமானால் 36 எம்எல்ஏக்களின் பலம் வேண்டும். பாஜக கூட்டணிக்கு 32 இடங்கள். அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு 28 இடங்கள். காங்கிரஸ் கட்சிக்கு 8 இடங்கள், சுயேட்சைக்கு 2 இடங்கள் கிடைத்தன.
சட்டமன்றத்தில் மிகப் பெரும் கட்சி என்ற நிலையில் இருக்கும் பாஜகவை ஆட்சியமைக்க அல்லது நிலவும் தேக்க நிலையை மாற்ற பாஜக முயலவேண்டும் என்று கூறி துணை நிலை ஆளுநர்
வங்காளதேச போர்க்குற்றவாளி அப்துல் காதர் மொல்லா தூக்கில் போடப்பட்டார்!
பங்களாதேஷ் பாகிஸ்தானிடமிருந்து 1971 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற நடத்திய போரில், மானுட குலத்துக்கு எதிரான குற்றங்கள் இழைத்ததாகத் தீர்ப்பளிக்கப்பட்ட, இஸ்லாமிய எதிர்க்கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவரான அப்துல் காதர் முல்லா சற்று முன்னர் தூக்கிலிடப்பட்டார். இவர் நேற்று முந்தினம் செவ்வாய்க்கிழமையே தூக்கிலிடப்படவிருந்தார். ஆனால் நீதிமன்றத்தின் தலையீட்டின் பேரில் அவருக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இவருக்கு அளிக்கப்பட்ட மரணதண்டனை சரியானதே என்று அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த பின்னணியில் இவர் சற்றுமுன்னர் தூக்கிலிடப்பட்டதாக, வங்கதேசத்திலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை அவர் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு சில மணிநேரங்களுக்கு முன்னர், அவர் சமர்ப்பித்த மேல்முறையீட்டு மனு மீது நீதிபதிகள் விசாரணையை நடத்த உதவ, அவரது தூக்கு தண்டனை பரபரப்பான வகையில் நிறுத்திவைக்கப்பட்டது. முல்லாவுக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனையின் மீது நீதிமன்ற மேல் முறையீட்டை செய்ய அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படாமல் அவர் தூக்கிலிடப்பட்டால், அது சர்வதேச சட்டத்தை மீறும் செயலாகும் என்று மனித உரிமைக் குழுக்கள் எச்சரித்திருந்தன. போர்க்குற்றங்களுக்காக ஒரு அரசியல் தலைவர் தூக்கில் போடப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
12 டிச., 2013
வன்னியில் பால் கறக்கும் படையினர் கொழும்பு நிறுவனத்திற்கு ஏற்றுமதி செய்கின்றனர்
"நிலங்களை மட்டுமல்லாது மாடுகளையும் அபகரித்து வைத்திருக்கின்றனர்": ஐங்கரநேசன்
வன்னியில் பால் கறக்கும் படையினர் கொழும்பு நிறுவனத்திற்கு ஏற்றுமதி செய்கின்றனர்:-
வன்னியில் நிலங்களை மட்டுமல்லாது மாடுகளையும் அபகரித்து வைத்திருக்கும்
"நிலங்களை மட்டுமல்லாது மாடுகளையும் அபகரித்து வைத்திருக்கின்றனர்": ஐங்கரநேசன்
வன்னியில் பால் கறக்கும் படையினர் கொழும்பு நிறுவனத்திற்கு ஏற்றுமதி செய்கின்றனர்:-
வன்னியில் நிலங்களை மட்டுமல்லாது மாடுகளையும் அபகரித்து வைத்திருக்கும்
மஹிந்தவின் அழைப்பு! நானும் பிள்ளையும் வேண்டாமா? அரசியலுக்கு போகலாம் என்கிறார் மனைவி! - குழப்பத்தில் முரளிதரன்!
இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதனை அரசியலுக்குள் இழுப்பதற்கு மகிந்த ராஜபக்ஷ, அண்மைக் காலமாக பலத்த பிரயத்தனம் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டனி வெளியேற்றப்பட்டுவிட்டதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட போது தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ரெலோ, ஈபிஆர்எல்எப் ஆகிய கட்சிகளும் கட்சி சாரா உறுப்பினர்களும் உள்வாங்கப்பட்டிருந்தனர்.
புங்குடுதீவு மடத்துவெளி சனசமூக நிலையத்தின் முன் பள்ளி சிறப்பான முறையில் புனரமைப்பு செய்யப் பட்டு திறப்பு விழா செய்யப்பட்டது .இந்த அரிய பணிகளை அ.சண்முகநாதன் என்னும் கண்ணாடி அவர்கள் முன்னின்று சீராக கவனித்து செய்து முடித்துள்ளார் . திறப்பு விழாவில் பாலசுப்பிரமணிய ஆலயக் குருக்கள்,ஒய்வு பெற்ற காவல்துறை அதிகாரியும் சமூக சேவகருமான சிவலிங்கம் .ஊடகவியலாளர் சதீபன் உட்பட ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர் (படங்கள் )
ஈழத்தமிழர் எல்லாம் பெருமை அடையும் வண்ணம். 2014 இம் முறைசீனாவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் கனடாவை பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில். கனடா டொரோன்டோவில் வாழ்ந்து வரும் யாழ்ப்பாணம் கரவெட்டியை சொந்த இடமாக கொண்ட ஆன்ட்ரியா ஜெரோம் வரதராஜா என்ற முதல் தமிழ் இளம்பெண் TAEKWONDO எனும் விளையாடில் கனிஷட்ட பிரிவில் கலந்து கொள்ள இருக்கிறார். தமிழ்ர் என்ற ரீதீயில் பெருமை அடைவதுடன் அவர் வெற்றி பெற உலகத்தமிழ்ர் சார்பில் வாழ்த்துகின்றோம்……
சாத்வீகப் போர் மீண்டும் வெடிக்கும்; யசூசி அகாஷியிடம் சம்பந்தன் தெரிவிப்பு
"தமிழர் தாயகப் பகுதிகளில் அரசு கட்டவிழ்த்து விட்டுள்ள அடக்கு முறைகளை இன்னும் இரண்டு, மூன்று மாதங்களுக்குள் நிறுத்தாவிடின் தமிழ் மக்களை அணிதிரட்டி மாபெரும் சாத்வீகப் போராட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும். இதை எவரா லும் தடுத்துநிறுத்த முடியாது."
இவ்வாறு இலங்கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷியிடம் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன்.
இலங்கையில் போரின் பின்னரான புனர்வாழ்வு மற்றும் நல்லிணக்க விடயங்கள் குறித்து ஆராய்வதற்காகக் கொழும்பு வந்துள்ள இலங்கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷிக்கும் இரா.சம்பந்தன் எம்.பி. தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமி
இனக்கொலை குற்றவாளிகள் தப்பவே முடியாது; வைகோ
சிறிலங்காவில் இடம்பெற்றது இனப் படுகொலைதான் என ஜெர்மனி மக்கள் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. எனவே, இனக்கொலை குற்றவாளிகள் தப்பவே முடியாது என ம.தி.முக. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் இடம்பெற்றது இனப் படுகொலைதான் என ஜெர்மனி மக்கள் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. எனவே, இனக்கொலை குற்றவாளிகள் தப்பவே முடியாது என ம.தி.முக. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
11 டிச., 2013
டிசம்பர் மாத ராசிபலன்கள்
மேஷம்
இந்த மாதம் கோட்சார கிரக அமைப்பு உங்களுக்கு மிகமிக சாதகமாக இருப்பதால், உங்களுடைய எண்ணங்களும் திட்டங்களும் நீங்கள் விரும்பியபடியே நிறைவேறும். சில நேரங்களில் சில தடைகளும் குறுக்கீடுகளும் தென்பட்டாலும், அவற்றையெல்லாம் கடந்து உங்கள் வெற்றிப்பயணம் தொடரும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்களும்
சம்பள விஷயத்தில் "2சி' என்பதில் பட்டம் நடிகை ஸ்ட்ராங்காக நிற்பதை கடந்த இதழில் சொல்லியிருந்தோம். "வம்பு'க்காக அவரின் டாடி... போன்போட்டு பட்டத்திடம் பேசியபோதும் அதே பதில்தான் கிடைத்ததாம்! அதனால் "வேறு ஹீரோயின் வச்சுக்கலாம்' என டாடி சொல்ல... டைரக்டர் பாண்டியும் ஓ.கே. மனநிலையில் இருக்க... "வம்பு' மட்டும் "பட்டம் தான் வேணும்' என பிடிவாதமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது!
லயனுக்கு சீயான் என்றால் ஆகாது! அது சொந்த விவகாரம். இந்த கதைக்குத் தேவையில்லாத விவகாரமும்கூட!
"இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமையும் இந்திய அரசின் நிலை யும்' என்கிற தலைப்பில் சென்னையில் நடந்த கருத்தரங்கத்தில் பேசிய ப.சிதம்பரத்தின் ஆதரவாளரும் கடலூர் எம்.பி.யுமான கே.எஸ். அழகிரி, ஈழத்தில் நடந்த யுத்தத்தை நிறுத்த சிதம்பரம் கடும் முயற்சி எடுத்ததாகப் பதிவு செய்தார். இந்த நிலையில், கே.எஸ்.அழகிரி யை தொடர்புகொண்டு சில கேள்விகளைக் கேட்டோம்.
தமிழ்த்தேசிய உறவுகளே! ஊடகவியலாளர்களை அவமதிக்கும் வடக்கு மாகாண சபை? - சுகபோகங்கள்அம்பலப்படாமல் விடுவதற்கான நடவடிக்கையா? வடக்கு மாகாண சபையின் அமர்வுகளில் இடையில் மதிய போசனத்தில் தம்முடன் இணைந்து ஊடகவியலாளர்கள் பங்கெடுப்பதனால் தமக்கு இடையூறு ஏற்படுவதாக தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தன்னிடம் முறையிட்டுள்ளதாக வடக்கு மாகாண சபையின் உறுப்பினரும் அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்ததைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் சபை நிதியில் பரிமாறப்படும் உணவு மற்றும் தேனீர்
"இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமையும் இந்திய அரசின் நிலை யும்' என்கிற தலைப்பில் சென்னையில் நடந்த கருத்தரங்கத்தில் பேசிய ப.சிதம்பரத்தின் ஆதரவாளரும் கடலூர் எம்.பி.யுமான கே.எஸ். அழகிரி, ஈழத்தில் நடந்த யுத்தத்தை நிறுத்த சிதம்பரம் கடும் முயற்சி எடுத்ததாகப் பதிவு செய்தார். இந்த நிலையில், கே.எஸ்.அழகிரி யை தொடர்புகொண்டு சில கேள்விகளைக் கேட்டோம்.
நான்கு மாநில தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வை உற்சாக வெள்ளத்தில் மிதக்க வைத்துள்ளது. தமிழக பா.ஜ.க. அலுவலகத்திற்குள் நுழைபவர்கள் எல்லாம் ஒரு ஸ்வீட் பாக்சோடுதான் நுழைகிறார்கள். ஸ்வீட் சாப்பிட்டு... சாப்பிட்டு சுகர் அதிகமாகிவிட்டது என சில தலைவர்கள் வருத்தப்படும் அளவிற்கு அங்கே உற்சாகம் கரை புரண்டோடிக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக் கொண்டாட்டங்களுக்கிடையே கடமையே கண்ணாக தமிழகம் முழுவதும் கட்சி நடத்தும் பாத யாத்திரைக்கு தயாராகிக் கொண்டிருந்தார் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அவரை சந்தித்தோம்.
நான்கு மாநில தேர்தல் முடிவுகளை எப்படி பார்க்கிறீர்கள்?
வட மாகாணசபையின் மூன்றாவது அமர்வில் கவனவீர்ப்பு போராட்டம்
வட மாகாண சபையின் மூன்றாவது அமர்வு இன்று காலை 10 மணியளவில் கைதடியில் அமைந்துள்ள கட்டடத்தில் ஆரம்பமாகியது.
வடக்கு மாகாண வரவு செலவுத்திட்ட சமர்ப்பிப்பும்; சபை நடவடிக்கைகளும்
வடமாகாண சபையின் 2014ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டம் சபையில் இன்று முதலமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐ. நா பிரதிநிதிகளை இலங்கைக்கு விஜயம் செய்ய அரசாங்கம் கூடுதல் சந்தர்ப்பம் அளிக்க வேண்டும்; ஐரோப்பிய ஒன்றியம்
ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய அரசாங்கம் கூடுதல் சந்தர்ப்பம் அளிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
சிங்களவர்களை எங்கே குடியேற்றுவது?: வட மாகாண சபையில் எதிர்க்கட்சி உறுப்பினர் கேள்வி
வடக்கிலுள்ள தமிழ் மக்கள் கொழும்பில் தங்கியிருப்பது போல் சிங்கள மக்களும் யாழ்ப்பாணத்தில் குடியேற முடியாதா?. முடியாதாயின் சிங்கள மக்களை நாங்கள் எங்கே குடியேற்றுவது என வட மாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் செனவிரத்ன எ.டி.தர்மபால கேள்வி எழுப்பினார்.
நெல்சன் மண்டேலாவின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி
தென் ஆப்பிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவிற்கு நினைவு பிரார்த்தனை, ஜோகன்னஸ்பர்க் அருகில் உள்ள ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இந்தியா சார்பில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பாஜக மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ராஜஸ்தான் முதல்வராக வசுந்தரா ராஜே சிந்தியா 13ந்தேதி பதவி ஏற்பு
அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலில் பாரதீய ஜனதா அமோக வெற்றி பெற்றது. மாநிலத்தில் உள்ள 200 சட்டசபைத் தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் ஒருவர் இறந்ததை அடுத்து 199 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.
இதில், பாரதீய ஜனதா 162 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் வசுந்தரா ராஜே சிந்தியா முதல்–மந்திரியாக
சத்தீஸ்கர் முதல் அமைச்சராக ராமன் சிங் 12ஆம் தேதி பதவியேற்பு
சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது. அங்கு மீண்டும் முதல் அமைச்சராக ராமன்சிங் வரும் 12ஆம் தேதி பதவியேற்க உள்ளார். ராயப்பூர், போலீஸ் மைதானத்தில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. விழாவில் அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
மனித உரிமைகளைப் பேணுவதில் சமநிலை இன்மையே எமது இன்றைய நிலைக்கு காரணம்!- கிளிநொச்சியில் ஹான்ஸ் போவர்
மனித உரிமைகளைப் பேணுவதிலும் அதனை உத்தரவாதப்படுத்துவதிலும் உலகில் சமநிலை காணப்படாமையே எமது இன்றையநிலைக்கு காரணமாகும் என கிளிநொச்சியில் நடைபெற்ற மனித உரிமைகள் தின நிகழ்வில் கலந்து சிறப்புரையாற்றிய அருட்தந்தை மரியாம்பிள்ளை
இலங்கையில் நடந்த படுகொலைகள் தொடர்பில்
ஆக்கங்களை படைக்க முனைவேன்! -
கவிஞர் வைரமுத்து
10 டிசெம்பர் 2013,
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் அடுத்த ஆண்டில், இலங்கையில் நடந்த படுகொலைகள் தொடர்பான ஆக்கங்களை படைக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய ஊடகமான விகடனில் கேட்கப்பட்ட கேள்விகள் சிலவற்றுக்கு அழகிய தமிழ்ச் சொற்களை கோர்த்து கவிதை நயத்தோடு பதில்களை அளித்த கவிஞர் வைரமுத்து அவர்களிடம் இறுதியாக ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
அதாவது,
அடுத்த ஆண்டு என்ன செய்வதாக உத்தேசம்?
இதற்குப் பதிலளித்த கவிஞர்,
நமது இசை, நாட்டிய, சிற்ப மரபுகள் எல்லாம் பெரும்பாலும் மத வழிப்பட்டவை. இல்லாத கதை மாந்தர்களே பெரும்பாலும் கலைகளுக்குக் கருப்பொருளாகி இருக்கிறார்கள்.
இலங்கையில் நடந்த இனப் படுகொலை ஏன் இந்தக் கலையாளர்களின் கண்களுக்குத் தெரியவில்லை? அடுத்த ஆண்டு இதற்குத்தான் நான் முனைவேன். அதற்காக என்னை முன்மொழியும் கலைஞர்களை நான் வழிமொழிவேன்; துணையிருப்பேன்! எனத் தெரிவித்திருக்கின்றார்.
ஆக்கங்களை படைக்க முனைவேன்! -
கவிஞர் வைரமுத்து
10 டிசெம்பர் 2013,
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் அடுத்த ஆண்டில், இலங்கையில் நடந்த படுகொலைகள் தொடர்பான ஆக்கங்களை படைக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய ஊடகமான விகடனில் கேட்கப்பட்ட கேள்விகள் சிலவற்றுக்கு அழகிய தமிழ்ச் சொற்களை கோர்த்து கவிதை நயத்தோடு பதில்களை அளித்த கவிஞர் வைரமுத்து அவர்களிடம் இறுதியாக ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
அதாவது,
அடுத்த ஆண்டு என்ன செய்வதாக உத்தேசம்?
இதற்குப் பதிலளித்த கவிஞர்,
நமது இசை, நாட்டிய, சிற்ப மரபுகள் எல்லாம் பெரும்பாலும் மத வழிப்பட்டவை. இல்லாத கதை மாந்தர்களே பெரும்பாலும் கலைகளுக்குக் கருப்பொருளாகி இருக்கிறார்கள்.
இலங்கையில் நடந்த இனப் படுகொலை ஏன் இந்தக் கலையாளர்களின் கண்களுக்குத் தெரியவில்லை? அடுத்த ஆண்டு இதற்குத்தான் நான் முனைவேன். அதற்காக என்னை முன்மொழியும் கலைஞர்களை நான் வழிமொழிவேன்; துணையிருப்பேன்! எனத் தெரிவித்திருக்கின்றார்.
10 டிச., 2013
இலங்கை மீது விசாரணை ரோமில் சனியன்று ஆரம்பம்; இறுதிப்போரில் அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன் நாடுகளின் பங்களிப்புக் குறித்தும் ஆராய்வு
இத்தாலி தலைநகர் ரோமைத் தளமாகக் கொண்டு இயங்கும் "நிரந்தர மக்கள் சபை' இலங்கைப் போரில் நடைபெற்ற மனிதப் படுகொலைகள், உலக நாடுகளின் பங்களிப்புகள், சமாதானப் பேச்சுக்களில் ஏற்பட்ட தோல்விகளுக்கான காரணம் என்பன குறித்து தனது இரண்டாவது விசாரணையை ஆரம்பித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுவிப்பாளர் பதவிக்கான தேர்வில் இங்கி லாந்து அணியின் முன்னாள் வீரர் போல் பார் ப்ராஸும் இணைக்கப்பட்டுள்ளார்.
புதிய பயிற்றுவிப்பாளர் தேர்வு தொடர்வில் நியமிக்கப்பட்டிருந்த குழுவே அவரை இப்பதவிக்கு பரிந்துரை செய்துள்ளது.
இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக உள்ள கிரஹம் போர்ட் அடுத்தவருடம் பெப்ரவரி மாதம் பயிற்றுவிப்பாளர் பதவி யிலிருந்து விலகவுள்ளார்.
மாணவர் இருவருடன் நிர்வாணமாக இருந்த தேரருக்கு விளக்கமறியல்
ஆண் மாணவர்கள் அறுவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட பிக்கு ஒருவரை நீர்கொழும்பு பிரதான நீதவான் ஏ.என்.எம்.பி. அமரசிங்க எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
மிசோரம் மாநிலத்தில் ஆட்சியை தக்க வைத்தது காங்கிரஸ்
40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை நடைபெற்றது.
காங்கிரஸ் 28 தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. மிசோ தேசிய முன்னணி கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் 28 தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. மிசோ தேசிய முன்னணி கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மிசோரம் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல் அமைச்சர் வேட்பாளர் லால்தான்ஹாவ்லா தனது சொந்தமாவட்டமான செர்ச் சிப்பிலுள்ள, செர்ச்சிப் மற்றும் ஹராங்டுர்ஹோ ஆகிய இரு தொகுதிகளில் போட்டி வெற்றி பெற்றார்,
ஆட்சி அமைக்க 21 இடங்கள் போதுமான நிலையில் 28 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது,
9 டிச., 2013
வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் இன்று 08.12.2013 ஞாயிற்றுக்கிழமை ஊர்காவற்றுறை தொகுதிக்குட்பட்ட வேலணை, புங்குடுதீவு பகுதிகளுக்கு விஜயம் செய்து தேர்தலில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு தனது நன்றியினைத்தெரிவித்துக்கொண்டதுடன், மக்களின் தேவைகள்,பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளார். மாகாணசபை உறுப்பினருடன் வலி.தெற்கு பிரதேசசபை தலைவர் தி.பிரகாஷ், வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர் சி.ஹரிகரன், இலங்கைத்தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட இளைஞரணிச்செயலாளர் ப.தர்சானந் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு முழுவதும் டிச.02-ம் தேதி முதல் அடுத்த மாதம் 26-ம் தேதி வரை "இல்லம் தோறும் தாமரை, உள்ளம் தோறும் மோடி' என்கிற பிரச்சார யாத்திரையை பா.ஜ.க. நடத்து கிறது. பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளரான மோடியின் அருமை பெருமைகளை விளக்கும் இந்த யாத்திரையின் உச்சகட்டமாக நரேந்திர மோடியின் செல்போன் எண்ணை கிராமத்தில் உள்ள விவசாயியிடம் கொடுத்து நேரடியாக மோடியுடன் பேச வைக்கின்றனர்.
8 டிச., 2013
யாழ் ஈபிடிபி தலைமையகத்தில் கைத்துப்பாக்கியா? நாட்டின் ஜனநாயகம்: சபையில் அரியநேத்திரன் காட்டம்
நாட்டின் ஜனநாயகம் இன்று கைத்துப்பாக்கியாகிவிட்டதுடன், யாழில் ஈபிடிபி அரசியற் கட்சி காரியாலயத்தில் கைத்துப்பாக்கி என்பதுடன் யுத்தமில்லாத காலத்தில் 500 பேர் கொலை என்றால் நாட்டில் நடப்பது என்ன என்று சபையில் அரியநேத்திரன் பா.உ காட்டம்.
ஆம் ஆத்மியின் சாதனை ஆச்சரியப்படுத்துகிறது: பெரிய கட்சிகளுக்கு எச்சரிக்கை: காங்கிரஸ் கருத்து
முதன் முறையாக டெல்லி சட்டமன்ற தேர்தலில் களம் இறங்கியுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு பெரிய வெற்றி கிடைத்துள்ளது. டெல்லி சட்டசபை தேர்தலில் அக்கட்சி இரண்டாம் இடம் பிடித்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.
மோடி அலையே வெற்றிக்கு காரணம்: வசுந்தரா ராஜே
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தில்லி, சட்டீஸ்கர் உட்பட நான்கு மாநிலங்களில் பாஜக அமோ வெற்றி பெற்றதற்கு மோடியின் அலையே காரணம் என்று ராஜஸ்தான் பாஜக தலைவரும் அங்கு முதல்வராக பொறுப்பேற்க விருக்கும் வசுந்தரா ராஜே தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றததையடுதது பாஜகவினர் பட்டாசுவெடித்து கொண்டாடிவருகின்றனர்,
ராஜஸ்தானில்(199) பாஜக 128இடங்களில் வெற்றி 31 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 18இடங்களில்வெற்றி பெற்று 7இடங்களில் முன்னிலையில் உள்ளது. மற்ற கட்சிகள் 7இடங்களில் வெற்றி பெற்று 8 இடங்களில் முன்னிலையில் உள்ளன.
டெல்லி: 21 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஷீலா தீட்சித்தை தோற்கடித்தார் அரவிந்த் கேஜ்ரிவால்
டெல்லி சட்டமன்றத் தேர்தல் கடந்த 4ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே காங்கிரஸ் பின்னடைவை சந்தித்தது. பாஜக, ஆம் அத்மி கட்சி முன்னிலை பெற்றிருந்தது.
மத்தியப்பிரதேசத்தில் 3வது முறையாக மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது பாஜக!
மத்தியப்பிரதேசத்தில் பாஜக மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது. அக்கட்சியின் தொண்டர்கள் முதல் அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் வீட்டின் முன்பு திரண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் 116 இடங்களை கைப்பற்றினால் பெரும்பான்மை கிடைக்கும் என்ற நிலையில், பாஜக 157 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 60 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 2005 மற்றும் 2009 சட்டமன்ற தேர்தல்களில் ஆட்சியை பிடித்த பாஜக தற்போது 2013 சட்டமன்றத் தேர்தலிலும் ஆட்சியை பிடிக்கிறது.
ராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்கிறது பாஜக: முதல் அமைச்சராக பதவியேற்கிறார் வசுந்தரா ராஜே சிந்தியா
ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பாஜக முன்னிலை வகித்தது.
199 தொகுதிகளில் நடந்த தேர்தல்களில் 109 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. 57 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் இருந்தது. காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளில் வெற்றி பெற்று, 11 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. இதையடுத்து ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து ஆட்சியை பாஜக பிடிப்பது உறுதியானது.
மத்தியப்பிரதேசம்: பாஜக 103 தொகுதிகளில் முன்னிலை
மத்தியப்பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பாஜக 103 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 47 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. சுயேட்சை வேட்பாளர் ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.
ராஜஸ்தான்: 119 தொகுதிகளில் பாஜக முன்னிலை
ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பாஜக 119 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 21 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 3 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. சுயேட்சை வேட்பாளர்கள் 6 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.
ஏற்காடு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம்
1) பி.சரோஜா - அதிமுக.
2) மாறன் - திமுக.
3 )பழனி - சுயேட்சை
4) எம்.பழனிசாமி - சுயே
5) கே.பழனிவேல் - சுயே
6) கே.பூபாலன் - சுயே
7) ஈ.பொன்னுசாமி - சுயே.
8) சி.மணிகண்டன் - சுயே
9) கே.மதியழகன் - சுயே
10) ஏ.ராஜாக்கண்ணு - சுயே.
11) ஏ.ராஜேந்திரன் - சுயே.
12) நோட்டா (மேலே உள்ள யாவருக்கும் இல்லை)
மொத்தம் பதிவான வாக்குகள் 2,14,434
ஆண்கள் 1,05,610
பெண்கள் 1,08,820
திருநங்கைகள் 4
ஆண்கள் 1,05,610
பெண்கள் 1,08,820
திருநங்கைகள் 4
ஏற்காடு: 21.336 வாக்குகளில் அதிமுக முன்னிலை
ஏற்காடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் 4வது சுற்று முடிவில் அதிமுக 21336 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளது. திமுக 11788 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. 9 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முன்னிலையில் உள்ளது.
ஏற்காடு தொகுதியில் இதுவரை 912 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்
டெல்லியில் தொடர்ச்சியாக 3 முறை ஆட்சி புரிந்த ஷீலா தீட்சித் கடும் போராட்டத்தை எதிர்கொண்டுள்ளார்
டெல்லி மாநிலத்தில் தொடர்ச்சியாக மூன்று முறை ஆட்சி புரிந்த முதல்வர் ஷீலா தீட்சித் இம்முறை கடும் போராட்டத்தை எதிர்கொண்டுள்ளார். அரவிந்த் கேஜரிவாலின் ஆம் ஆத்மி கட்சியானது காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளின் கணக்குக
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)