புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 டிச., 2013

ஓரினச்சேர்க்கை கிரிமினல் குற்றம்! இந்த குற்றத்திற்கு ஆயுள் தண்டனை வரை விதிக்கலாம்: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
ஓரினச்சேர்க்கையாளர்கள் சம்மதத்துடன் அந்தரங்கத்தில் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டால் குற்றம் அல்ல என்று, டெல்லி ஐகோர்ட்டு கடந்த 2009–ம் ஆண்டு பரபரப்பான தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு குறித்து
நாடு தழுவிய சர்ச்சை எழுந்தது.

டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து பல்வேறு சமூக–மத அமைப்புகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ஓரினச்சேர்க்கை நமது நாட்டின் கலாசார, மத கோட்பாடுகளுக்கு எதிரானது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே.முகோபாத்யாயா ஆகியயோரைக்கொண்ட சுப்ரீம் கேர்ட்டு அமர்வு இந்த வழக்கை விசாரித்து, டெல்லி ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தனர்.
‘‘இந்திய தண்டனை சட்டம் 377–வது பிரிவின்படி, ஓரினச்சேர்க்கை கிரிமினல் குற்றம். இந்த குற்றத்திற்கு ஆயுள்தண்டனை வரை விதிக்க அரசியல் சட்டத்தில் வகை செய்யப்பட்டு இருப்பது செல்லும்’’ என்று, நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளனர்.
அதே நேரத்தில், சர்ச்சைக்குரிய இந்த விவகாரத்தில் பாராளுமன்றம் விவாதித்து ஒரு முடிவை எடுக்கலாம் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
‘‘ இந்திய தண்டனை சட்டம் 377–வது பிரிவு இருக்கும்வரை, இது போன்ற செக்ஸ் உறவுகளை நீதிமன்றத்தால் சட்டபூர்வமாக்க முடியாது. அந்த சட்டப்பிரிவை நீக்குவதற்கு பாராளுமன்றத்துக்குத்தான் அதிகாரம் உள்ளது’’ என்றும், நீதிபதிகள் குறிப்பிட்டு உள்ளனர்.
இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதும் கோர்ட்டுக்கு வந்திருந்த ஓரினச்சேர்க்கை ஆர்வலர்கள், தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்வோம் என்று அவர்கள் நிருபர்களிடம் தெரிவித்தனர்.

ad

ad