புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 டிச., 2013




               மிழ்நாடு முழுவதும் டிச.02-ம் தேதி முதல் அடுத்த மாதம் 26-ம் தேதி வரை "இல்லம் தோறும் தாமரை, உள்ளம் தோறும் மோடி' என்கிற பிரச்சார யாத்திரையை பா.ஜ.க. நடத்து கிறது. பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளரான மோடியின் அருமை பெருமைகளை விளக்கும் இந்த யாத்திரையின் உச்சகட்டமாக நரேந்திர மோடியின் செல்போன் எண்ணை கிராமத்தில் உள்ள விவசாயியிடம் கொடுத்து நேரடியாக மோடியுடன் பேச வைக்கின்றனர்.


சென்னை மேடவாக்கத்தில் இந்த பிரச்சார யாத்திரையை துவக்கிய பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசனை யாத்திரை களத்தில் சந்தித்தோம்.

தமிழகத்தில் நரேந்திர மோடிக்கான வரவேற்பு எப்படி இருக்கிறது?


இல.கணேசன் : காட்டாற்று வெள்ளம் போல தமிழகத்தில் பெருகி வரும் ஆதரவு அலை, தமிழகத்தின் அரசியல் தட்ப வெப்ப சூழ்நிலைகளை நன்கு அறிந்தவனான எனக்கே ஆச்சரியம் அளிக் கிறது. முதலில் கம்ப்யூட்டர், இ-மெயில் போன்றவற்றைக் கையா ளும் உயர்தர, நடுத்தர மக்களிடம் இருந்த மோடியின் புகழ், இன்று பல்கிப் பெருகி பலஆண்டு காலம் பல்வேறு கட்சிகளின் வாக்கு வங்கி களாக இருந்த கிராம முதியவர்களையும் தொட்டு விட்டது. மோடிக்கு தமிழகத்தில் பெருகிவரும் ஆதரவை அணை போட்டு வாக்குகளாக மாற்றவே நாங்கள் இந்த யாத்திரையை தமிழகம் முழுவதும் நடத்துகிறோம்.




ஒரு பக்கம் மோடி பற்றிய புகழ் பரவினாலும் மறுபக்கம் அவரது பேச்சுக்கள் தேர்தல் கமிஷனிடம் புகார் செய்யப்படும் அளவிற்கு மோசமாக இருப்பதாக விமர்சனங்கள் வருகிறதே?


இல.கணேசன் : தேர்தல் கமிஷனில் முதலில் புகார் செய்பவரே மோடிதான். "உத்திரப்பிரதேச முசாபர் நகரில் நடைபெற்ற கலவரத்தில் பா.ஜ.க.வினர் கொலைகள் செய்தார்கள்' என நேரடியாக ஒரு பொய்யான குற்றச்சாட் டை ராகுல் மேடையில் பேசினார். அது தவறு என்று மோடி, தேர்தல்  கமிஷனில் புகார் செய்தார். அந்தப் புகாருக்கு நேரடியாக பதில் சொல்லாமல், மோடி "காங்கிரசின் கை ரத்தம் படிந்த கை' என பேசினார் என ஒரு புகாரை தேர்தல் கமிஷனில் பதிவு செய்தனர். காங் கிரஸ் கட்சி கடந்த 40 வருடங்களாக இந்திய மக்களுக்கு மாத்திரை வடிவில் ஊழல் என்னும் விஷத்தை ஊட்டிய கட்சி என சொன்னதை யும் தேர்தல் கமிஷனில் புகாராகப் பதிவு செய்தனர்.

சோழ மன்னன் கால்கள் கருகிப்போனதால் "கரிகாலன்' என அழைக்கப்பட்டான். அதுபோல லட்சக்கணக்கான இலங்கைத் தமிழ் மக்களைக் கொன்று குவித்த ரத்தம் படிந்த கைதான் காங்கிரஸின் கை. அதுமட்டுமல்ல, நிலக்கரி ஊழல் என்னும் கரி படர்ந்த கைதான் காங்கிரஸின் கை. இதைப்பற்றி மேடையில் பேசினால், தேர்தல் கமிஷனிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். தேர்தல் கமிஷன் நியாயமான விசாரணை நடத்தட்டும். அப்போது உண்மைகளை விரிவாக எங்கள் தரப்பு எடுத்துச் சொல்லும்.

பாலியல் வன்முறை பற்றி பேசுகிறீர்கள். ஒரு தனிப்பட்ட இளம் பெண்ணின் அந்தரங்க வாழ்க்கையை துப்பறிய அரசு எந்திரத்தையே மோடி பயன்படுத்தினார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?


இல.கணேசன் : இந்த விஷயத்தில் மோடி பாராட்டுக்குரியவர். இரவில் காவலுக்குப் போன பாண்டிய மன்னன் "தனது தேசம் மன்னனின் ஆட்சியில் பாதுகாப்பாக உள்ளது' என மனைவி யிடம் சொல்லிவிட்டு வெளியூர் செல்லும் ஒரு கணவனின் பேச்சைக் கேட்டு அகமகிழ்ந்தான். சில நாட்கள் கழித்து தனியாக வசித்த அந்த பெண்ணின் வீட்டில் ஒரு ஆண் குரல் கேட்டதை கேட்டு சந்தேகப் பட்டு அவர்கள் வீட்டுக் கதவை தட்டிவிட்டான். விசாரித்தபோது அந்த வீட்டில் கேட்ட ஆண் குரல் வெளியூர் சென்று திரும்பிய கணவனின் குரல் என அறிந்ததும் வருத்தமுற்றான்.

மன்னன் தீர விசாரிக்காமல் செய்த தவறால் அந்தப் பெண்ணின் வாழ்க்கைக்கு எந்த களங்கமும் வந்து விடக் கூடாது என்ற கவலையில் அந்த தெருவில் இருந்த அனைத்து வீடுகளின் கதவையும் தட்டிவிட்டு சென்றான். இறுதி யாக தான் செய்த தவறுக்காக தனது கையை வெட்டிக் கொண் டான். அவன்தான் பொற்கை பாண்டியன். அதுபோல ஒரு தந்தையின் வேண்டுகோளை ஏற்று ஒரு இளம் பெண்ணை பாதுகாக்க, நரேந்திர மோடி செய்த ஒரு நல்ல காரியத்தை அசிங்கப்படுத்தி அவர் மீது சேற்றை வாரி இறைக் கிறார்கள். 

ஒரு இளம் பெண்ணுக்கு பாதுகாப்பளிக்க பல வழிகள் இருக்கிறதே. நீங்கள் சொல்வதெல்லாம் நம்புவது போல் இல்லையே?


இல.கணேசன் : குஜராத் மாநில தேர்தல் பிரச்சாரத்தில் நான் பங்கெடுத்தபோது, இதுபோல பல சம்பவங்களை நரேந்திர மோடி மக்களின் பாதுகாப்பிற்காகச் செய்தார் என அவரது சொந்த தொகுதியான மணிநகரில் வசிக்கும் தமிழர்கள் கூற கதை கதையாக கேட்டிருக்கிறேன். நரேந்திர மோடி முதல்வர் ஆவதற்கு முன்பு குஜராத்தில் எந்தப் பெண்ணும் வெளியே போனால் பத்திரமாக திரும்பி வருவார் என்ற நம்பிக்கை பெற்றோர் களிடம் இல்லை. அந்த அளவிற்கு காங்கிரஸ் குண்டர்கள் பெண்களின் கற்பை சூறை யாடிக்கொண்டிருந்தார்கள். அதை மாற்ற மோடி மேற்கொண்ட நட வடிக்கைகளில் ஒன்றுதான் இது. நல்ல உயரிய நோக்கத்துக்காக செய்யப்பட்ட இந்த செயலை ஒரு அதி காரியை வைத்து டேப் செய்து அதை வெளியிட்டு மோடி யை களங்கப் படுத்துகிறார்கள். அந்த இளம் பெண் ணின் வாழ்வையும் சீரழிக்க முயல் கிறார்கள். அரசு இரகசியமாக செய்த ஒரு நல்ல காரி யத்தை எந்த சட்டத்தின் அடிப்படையில் ஒரு போலீஸ் அதிகாரி டேப் செய்தார்? அதை ஏன் இப்போது வெளியிட்டார். 

ஒரு பெண்ணின் நடவடிக்கைகளை அரசு உளவு பார்த்தது என அந்தப் பெண்ணோ அவரது பெற்றோரோ புகார் எழுப்பாத நிலையில் மற்றவர்கள் இதைப் பற்றி பேசுவது உள்நோக்கம் கொண்ட செயல்.

தமிழகத்தில் பா.ஜ.க. எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தல் களம் காண இருக்கிறது?


இல.கணேசன் : தமிழகத்தில் ஒரு காலத்தில் தீண்டப்படாத கட்சி யாக இருந்த பா.ஜ.க. வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர அனைத்துக் கட்சிகளும் முன்வந்திருப்பது ஆரோக்கியமான விஷயம். அ.தி.மு.க.வுடன் கூட்டணியா? தி.மு.க.வுடன் கூட்டணியா? அல்லது அ.தி.மு.க., தி.மு.க. அல்லாத மற்ற கட்சிகளுடன் இணைந்து கூட்டணியா? என்பதைப் பற்றி நாங்கள் ஆலோசித்து வருகிறோம். தி.மு.க., அ.தி.மு.க. அல்லாத கட்சிகளை பா.ஜ.க. கூட்டணிக்கு கொண்டுவர சில பூர்வாங்க முயற்சிகள் நடந்துவருகிறது. அவை வெற்றி பெறுமா? என்பதை பற்றியெல்லாம் ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிந்ததும் முடிவு செய்வோம்.

-தாமோதரன் பிரகாஷ்


 உஷ்!

தெற்கு காசியில் கடந்த வாரம் முழுக்க, வெள்ளைக்காக்கிக, ஊரே வாய்பிளக்கிற அளவுக்கு தீ வேலை செய்தாங்க.. மலையாள தேசப் பக்கம் போன சரக்குவண்டிகளை நிறுத்தி, "கறிக்கு கோழிகளைக் கொண்டு போறியே, நோயில்லைனு காகிதம் இருக்காவே?'னு கேட்க, ‘என்ன சார், புதுசா கேக்கீகளே’னு ஓட்டுநர்கள் விசும்ப.. அதைக் காதுலயே வாங்காம, ‘கட்டு தண்டத் தை’னு காக்கிக ரசீதை நீட்ட..’"என்னய்யா, 200னு எழுதிட்டு, மூவாயிரம் கேக்கீகளே'னு கேட்க, "மந்திரி வீட்டுக் கல்யாணத்துக்கு மொய் வைக்க, நாங்க எங்கலே, போக?'னு அதட்டியே பையை நிறைச்சுருக்காங்க.. சண்முகா..நீ(தான்) இதைக் கேக்குறயா?

ad

ad