புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 டிச., 2013


டெல்லியில் ஆட்சி அமைப்பது தொடர்பாக கெஜ்ரிவாலின் கட்சிக்கு துணைநிலை ஆளுநர் அழைப்பு
70 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட டெல்லி மாநிலத்தில் ஆட்சி அமைக்க வேண்டுமானால் 36 எம்எல்ஏக்களின் பலம் வேண்டும். பாஜக கூட்டணிக்கு 32 இடங்கள். அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு 28 இடங்கள். காங்கிரஸ் கட்சிக்கு 8 இடங்கள், சுயேட்சைக்கு 2 இடங்கள் கிடைத்தன. 
சட்டமன்றத்தில் மிகப் பெரும் கட்சி என்ற நிலையில் இருக்கும் பாஜகவை ஆட்சியமைக்க அல்லது நிலவும் தேக்க நிலையை மாற்ற பாஜக முயலவேண்டும் என்று கூறி துணை நிலை ஆளுநர்
நஜீப் ஜங் அழைப்பு விடுத்தார். புதன்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஹர்ஷவர்த்தனிடம் பேசிய துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங், அவரை நேரில் சந்திக்க அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த அழைப்பை ஏற்று ஹர்ஷவர்த்தன் ஆளுநர் மாளிகைக்குச் சென்றார். வியாழக்கிழமை மாலை அவர் டெல்லி துணை நிலை ஆளுநர் மாளிகைக்குச் சென்று, அரசியல் நிலவரம் குறித்து விளக்கினார்.
டெல்லியில் ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோராது என்று பாஜக முதல்வர் வேட்பாளர் ஹர்ஷ்வர்த்தன், டெல்லி துணைநிலை ஆளுநரை சந்தித்தப்பின்னர் தெரிவித்துள்ளார். ஆட்சி அமைக்க துணைநிலை ஆளுநர் விடுத்த அழைப்பை பாஜக ஏற்கவில்லை. டெல்லி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி வரிசையில் அமர பாஜக தயாராக உள்ளது. ஆட்சி அமைக்க பெரும்பான்மை பலம் இல்லை என்பதை விளக்கினேன் என்றார். மேலும், ஆட்சி அமைப்பதற்காக குதிரைபேரத்தில் பாஜக ஈடுபடாது என்றும் கூறினார். 
இதை அடுத்து, மரபுப் படி, உறுப்பினர் எண்ணிக்கையில் அடுத்த இடத்தில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியை ஆட்சி அமைப்பது தொடர்பான செயல்திட்டம் குறித்து விவாதிக்க வருமாறு துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த அழைப்பினை ஏற்றுக் கொண்ட அரவிந்த் கேஜ்ரிவால், வரும் சனிக்கிழமை துணை நிலை ஆளுநரை சந்திக்க வருவதாக பதில் அளித்துள்ளார்.

ad

ad