புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 டிச., 2013

டெல்லி: 21 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஷீலா தீட்சித்தை தோற்கடித்தார் அரவிந்த் கேஜ்ரிவால்
 


டெல்லி சட்டமன்றத் தேர்தல் கடந்த 4ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே காங்கிரஸ் பின்னடைவை சந்தித்தது. பாஜக, ஆம் அத்மி கட்சி முன்னிலை பெற்றிருந்தது. 


இந்தநிலையில் டெல்லி தொகுதியில் மூன்று முறை முதல் அமைச்சராக இருந்த ஷீலா தீட்சித் மீண்டும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் போட்டியிட்டார். 
வாக்கு எண்ணிக்கையில் அரவிந்த் கேஜ்ரிவால் 37,062 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதில் ஷீலா தீட்சித் 16,061 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். பாஜக வேட்பாளர் விஜேந்திரகுமார் 15,051 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். இதில் நடிகர் விஜயகாந்தின் தேமுதிக சார்பில் போட்டியிட்ட ஜி.எஸ்.மணி 162 ஓட்டுகள் பெற்றார். 
ஆம் ஆத்மி கட்சி ஆரம்பித்து முதல் முறையாக டெல்லி சட்டமன்றத் தேர்தலை சந்தித்தது. அதில் அக்கட்சியின் தலைவர் மூன்று முறை முதல் அமைச்சராக இருந்த ஷீலா தீட்சித்தை எதிர்த்து நிற்பேன் என்று சவால் விட்டார். அதன்படி தற்போது போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். 

வெற்றி பெற்ற அரவிந்த கேஜ்ரிவாலுக்கு, ஷீலா தீட்சித் தனது வாழ்த்துக்களை தெரிவத்துள்ளார். இதேபோல் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ad

ad