புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 டிச., 2013

கள்ளக் காதலியின் வீட்டுக்குத் தீ வைத்துவிட்டு தன்னையும் மாய்த்துக்கொண்ட சுகாதார பரிசோதகர்

பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர்தனது கள்ளக் காதலியின் வீட்டுக்குத் தீ வைத்துக் கொளுத்திவிட்டு தானும் கழுத்தில் சுருக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
 
இவ்வாறு மரணமானவர் இரு பிள்ளைகளின் தந்தையென இனங்காணப்பட்டுள்ளார். இவரது சடலம் ஆனந்தபுரத்தில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
 
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 
 
மரணமானவர் பொதுச் சுகாதார பரிசோதகராக முருங்கனில் கடமையாற்றி வந்துள்ளார்.  2009 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து இராமநாதன் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்தபோது கிளிநொச்சியைச் சேர்ந்த பெண்ணொருவர் இவருக்கு உதவியாளராக இருந்துள்ளார்.
 
இப் பெண்ணுடன் இவர் காதல் கொண்டிருந்தார். இந்நிலையில் சொந்த இடங்களில் மீளக் குடியேறிய பின்பும் குறித்த பெண்ணின் வீட்டிற்கு அவர் சென்று வந்துள்ளார்.
 
இப் பெண் ஏற்கனவே திருமணமாகி ஒரு பிள்ளையுடன் கணவனைப் பிரிந்து வாழ்ந்து வருகின்றார்.
சம்பவ தினத்தன்று குறித்த பெண்ணின் வீட்டிற்குச்  சென்ற சுகாதார பரிசோதகர், அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கோபமடைந்த அவர் அப் பெண்ணின் வீட்டிற்கு தீவைத்துக் கொளுத்தியுள்ளார்.
 
அதன் பின்னர் பாழடைந்த வீடொன்றுக்குச் சென்று சுருக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்டு விசாரணை முடிவில் தற்கொலை எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ad

ad