புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 டிச., 2013



             ""ஹலோ தலைவரே... …  இந்தியாவின் செமி ஃபைனல்ஸ் தேர்தல்னு சொல்லப்பட்ட 4 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க லம்ப்பா ஜெயித்திருப்பதால ஃபைனல்ஸ் தேர்தலான எம்.பி. தேர்தலிலும் இதே மாதிரியான ரிசல்ட்டுகள்தான் வருமோன்னு தமிழக கட்சிகளிடம் எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்குது.''


""ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியிடமிருந்த ஆட்சியை பா.ஜ.க பறிச்சிருக்குது. மத்தியபிரதேசத்தில் பா.ஜ.க தன்னோட ஆட்சியைத் தக்க வச்சிருக்குது. சட்டீஸ்கரில் இருந்த ஆட்சியைத் தக்க வைத்தாலும் அதற்கு ரொம்பவே போராட வேண்டியிருந்தது. டெல்லியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் பரிதாபகரமா வீழ்த்தப்பட்டாலும் பா.ஜ.க.வுக்கு எதிர் பார்த்த மெஜாரிட்டி கிடைக்கலை. அரவிந்த் கெஜ்ரி வாலின் ஆம் ஆத்மி கட்சி வலுவான இரண்டாவது இடத்தைப் பிடிச்சதால காங்கிரஸ், பா.ஜ.க இந்த இரண்டு கட்சிக்குமே பாதிப்பு. ஐ.ஐ.டி. இன்ஜினியரான அரவிந்த் கெஜ்ரிவால் இன்கம்டாக்ஸ் டிபார்ட் மெண்ட்டில் பணியாற்றி பிறகு தகவல் உரிமைப் போராளியாகி, அரசியலுக்கு வந்து ஒரே வருடத்தில் பெரும் வெற்றியைப் பெற்று இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். ஆம் ஆத்மியின் வெற்றியால் எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. பா.ஜ.க.வும் ஆம் ஆத்மியும் ஆட்சியமைக்க உரிமை கோரப் போவதில்லை என அறிவித் திருப்பதால் டெல்லியில் யார் ஆட்சிங்கிற கேள்வி எழுந்திருக்குது. இந்த 4 மாநிலம் போக, வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங் கிரசுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் வெற்றி கிடைத்து ஆட்சியை தக்கவைத்திருக்குது. இதுதானே செமி ஃபைனல்ஸ் ரிசல்ட்.''

""ஆமாங்க தலைவரே.. … இதில் பெருமளவில் பா.ஜ.க.வுக்கு சாதகமான முடிவுகள் வந்ததால் மோடி அலை வீசுவதா பொதுவான ஒரு பார்வை இருக்குது. அதனடிப்படையில் இங்குள்ள கட்சிகளும் எம்.பி. தேர்தலுக்கான வியூகங்களை வகுக் குது. நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி பிரதமராவார்ங்கிறதுக்கு இந்த 4 மாநிலத் தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டா இருப்பதா வைகோ சொல்லியிருக்காரு. காங்கிரசுக்கு எதிரான இந்த அலை 4 மாநிலங்களோடு நின்றுவிடும்னு தோன்ற வில்லைன்னு ராமதாஸ் சொல்லியிருக்காரு.'' 

""அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் என்ன நினைக்கு துங்கிறதுதானே முக்கியம். இரண்டு கட்சிகளும் இந்த மாதத்தில் பொதுக்குழுவைக் கூட்டுதே.''. 

""அதற்கு முன்னாடியே தினம் தினம் சின்னச் சின்ன குழுவாகக் கூடி ஆலோசனை பண்ணிக் கிட்டுத்தான் இருக்காங்க. 4 மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருந்த நேரத்தில், கலைஞரை கட்சியின் பலதரப்பட்ட நிர்வாகிகளும் சந்திச்சி இந்த ரிசல்ட் பற்றி தங்களோட கருத்துகளை சொல்லிக் கிட்டிருந்தாங்க. மோடி அலை வீச ஆரம்பிச்சிடிச்சிங்கய்யான்னு சில பேர் சொல்ல, திருச்சியையும் அதற் கப்புறம் உள்ள தென்மாவட்டங்களையும் சேர்ந்த நிர்வாகிகள் பலரும், இல்லீங்கப்பா.. தமிழ்நாட்டுல அதுவும் எங்க பகுதியில இப்பவும் காங் கிரசுக்குத்தான் ஓட்டு பலம் இருக்குது. பா.ஜ.க.வுக்கு இல்லைன்னு சொல்லியிருக் காங்க. வடமாவட்டத்தைச் சேர்ந்த நிர் வாகிகளோ, காங்கிரசுக்கு செல்வாக்கு இல்லை. பா.ஜ.க.வோடு கூட்டணி வைக்க லாம்னு சொல்லியிருக்காங்க. மு.க.ஸ்டாலினும் பா.ஜ.க.வோட செல்வாக்கை உன்னிப்பா கவனிச்சி, குஜராத்தில் நரேந்திர மோடி 13 வருசமா தன்னை புரூஃப் பண்ணிக்கிட்டி ருக்காரு. ராகுல்காந்தி என்னத்த புரூஃப் பண்ணியிருக்காருன்னு கேட்கிறாராம். வேலூரில் தன் பையனுக்கு எம்.பி. சீட் வாங்கிடணும்ங்கிற கணக்கில் இருக்கிற துரைமுருகனும் பா.ஜ.க. செல்வாக்கைப் பற்றி சிலாகிச்சிருக்காரு.''

""இதற்கெல்லாம் கலைஞரோட பதில் என்னவாம்?''

""75 வருடகாலமா அரசியலைப் பார்த்துக்கிட்டு வர்றவராச்சே... டெல்லி நிலவரங்களை அறிந்த தி.மு.க. எம்.பி.க்கள்கிட்டேயும் முன்னாள் மத்திய மந்திரிகள் கிட்டேயும் நிலைமை எப்படி இருக்குன்னு விசாரிச்சிருக்காரு. டெல்லி சட்டமன்றத்தில் 3 முறையும், மத்திய அரசில் இரண்டு முறையும் தொடர்ந்து ஆட்சியில் இருந்ததால காங்கிரசுக்கு இது செல்வாக்கு சரிகிற நேரம்தான்னும், இத்தனை நாளா கண்டுக்காம இருந்த காங்கிரஸ்காரங்க இப்ப தி.மு.க. தரப்பிடம் ரொம்ப நெருக்கமா வந்து பேசுவதாகவும் சொன்னதோடு, பா.ஜ.க. தரப்பிலிருந் தும் ரொம்ப வருடங்களுக்குப்பிறகு பேசுறாங்கன்னு சொல்லியிருக்காங்க. டி.ஆர்.பாலு, ஆமாங்கண்ணே பா.ஜ.க. லீடர்ஸ் என்கிட்டே டச்சில் இருக்காங் கன்னு சொல்லியிருக்காரு. 4 மாநிலங்க ளில் வெற்றி, மோடி அலை வீசுதுங்கிற நம்பிக்கை இதெல்லாம் தி.மு.க.வுக்குள் ளேயே பா.ஜ.க ஆதரவு நிலையை ஒரு தரப்பிடம் உருவாக்கியிருக்குது. அதே நேரத்தில் கனிமொழி, தயாநிதி மாறன் இருவரும் காங்கிரசோடு தான் கூட்டணி நீடிக்கணும்னு நினைக்கிறாங்க. பா.ஜ.க. பக்கம் போகக்கூடாதுன்னு சொல்றாங்க. ஆ.ராசாவும் பா.ஜ.க.கூட போவதை விரும்பலை. அதேநேரத்தில், நிர்வாகிகள் பலரும் காங்கிரஸ் கட்சியால் தி.மு.க. பட்ட அவமானங்களையும் மறக்கலை. அவங்கவங்களும் தங்களோட கருத்துகளையும் சொல்ல, எல்லாத்தையும் கேட்டுக் கிட்ட கலைஞர், இப்போதைக்கு அவசரப்பட வேண்டாம்னு சொல்லியிருக்காரு.''



""அவரோட கணக்கு என்ன?''

""ரிசல்ட் வந்த அன்னைக்கு பத்திரிகையாளர்களை சந்திச்ச கலைஞர், 4 மாநிலங்களில் வெற்றி பெற்றவங் களுக்கு வாழ்த்துகள்னு சொன்னாரு. இது காங்கிரசுக்குப் பின்னடைவுதான்னும் ஆனா எம்.பி. தேர்தல் பற்றி இப்ப ஆரூடம் சொல்ல முடியாதுன்னும் ஓப்பனா சொன்னாரு. கட்சியில் நெருக்கமான நிர்வாகிகள்கிட்டே பேசுறப்ப , சட்டமன்றத் தேர்தலில் ஒரு கட்சி ஜெயிக்கிறதும் தோற் கிறதும் சகஜம்தான். அதை வச்சி முடிவுக்கு வந்திடமுடி யாது. ஆனா,  காங்கிரசுக்கு ரொம்ப கஷ்டமான நேரம்தான்ய்யான்னு சொல்லியிருக்காரு. இரண்டு முறை தொடர்ந்து மத்திய அரசில் இருந்ததால் இப்ப அந்தக் கட்சி பலவீனமா இருக்குன்னும் இருந்தாலும் வெயிட் பண்ணி நிலைமைகளைப் பார்ப்போம்னும் கலைஞர் சொல்லியிருக்காரு. சென்ட்ரலில் 15 வருசமா பவரில் இருந்தாச்சு. இப்ப நம்ம டார்கெட் மறுபடியும் தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றுவதுதான். அதனால, அசெம்ப்ளி எலெக்ஷனுக்கும் யூஸ் ஆகிற மாதிரிதான் எம்.பி. தேர்தலில் கூட்டணியை அமைக்கணும்னு தி.மு.க. தரப்பில் ஆலோசிக்கப்பட்டிருக்குது.''

""பிரதமர் வேட்பாளராகத் தன்னை நினைக்கிற ஜெ., இந்த 4 மாநிலத் தேர்தல் முடிவுகளை எப்படிப் பார்க்கிறாராம்?''

""அவரால இந்த ரிசல்ட்டுகளை ஏற்க முடியலை. எல்லா சேனலிலும் பா.ஜ.க. வெற்றி பற்றிய செய்திகளும், மோடி அலை வீசுதா இல்லையாங்கிற விவாதங்களும் ஓடிக்கிட்டிருந்ததால, ஏற்காடு இடைத்தேர்தல் முடிவுகள் பற்றி பெருசா கவனம் எடுத்துக்கலை. அதனாலதான், ஏற்காட்டில் அ.தி.மு.க வேட்பாளர் 10ஆயிரம் ஓட்டுகள் லீடிங் பெற்றதுமே, கட்சி நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு உடனடியா போயஸ் கார்டனுக்குத் தொண்டர்களோடு வரச் சொல்லியிருக்காரு. தலைமைக்கழகத்தில் பட்டாசு வெடிச்சிக்கிட்டிருந்த தொண்டர்களும் மகளிரணியினரும் உற்சாகமா போயஸ்கார்டனுக்கு கிளம்பிட்டாங்க. மீடியாக்களுக்கும் கார்டனிலிருந்து அழைப்பு போக அவங்களும் வந்துட்டாங்க. ஏற்காடு இடைத்தேர்தலில் கிடைத்துள்ள வெற்றி, தனது அரசின் சாதனைகளுக்கு கிடைத்த வெற்றின்னு சொன்ன ஜெ., 4 மாநிலத் தேர்தல் முடிவுகள் பற்றி அப்புறம் சொல் றேன்னு சொல்லிட்டாரு. அப்புறம் அதுபற்றி அன்னைக்கு முழுக்க எதுவும் சொல்லலை. அடுத்தநாளும் எதுவும் சொல்லலை.'' 

""ஏனாம்?''

""போயஸ் கார்டன் தரப்பில் விசாரித்தால் இரண்டு காரணங்களை சொல்றாங்க. முதல் காரணம், ஏற்காடு இடைத்தேர்தல் வெற்றியில் அவருக்கு திருப்தியில்லையாம். எப்படியும் 1 லட்சம் ஓட்டுகள் லீடிங்கில் ஜெயிக்கணும்னும், தி.மு.க. டெபாசிட் இழக்கணும்னுங்கிறதும்தான் மந்திரிகளுக்கு ஜெ. கொடுத்திருந்த அசைன் மென்ட். அப்பதான், எம்.பி. தேர்தலில் தி.மு.க.வோடு கூட்டணி பேச எந்தக் கட்சியும் வராதுங்கிறது ஜெ.வோட கணக்கு. 78ஆயிரம் லீடிங்னு பெரியளவில் வெற்றி பெற்றாலும் ஜெ. போட்ட 1 லட்சம்ங்கிற கணக்கு வரலை. அதோடு, தி.மு.க. டெபாசிட்டுக்குத் தேவை யான ஓட்டுகளோடு இன்னொரு பங்கு ஓட்டும் வாங்கிடிச்சி. அதிலே ஜெ. பயங்கர அப்செட். அடுத்ததா, அடுத்த பிரதமர் மோடிங்கிற பேச்சை 4 மாநிலத் தேர்தல் முடிவுகள் அதிகப்படுத்திவிட்டதிலும் அவர் ரொம்ப அப்செட்.''

""சந்திரபாபு நாயுடு போன்ற பிற மாநிலத்தைச் சேர்ந்த தலைவர்கள்கூட மோடியின் ஆதரவு பெருகிவருவதா பேச ஆரம்பிச்சிட்டாங்களே..''

""பிரதமருக்கான ரேஸில் தன்னை முன்னிறுத்தணும்ங்கிறது ஜெ.வின் எதிர் பார்ப்பு. ஆனா, அவரது அரசியல் ஆலோ சகரா இருந்த சோகூட மோடியை முன்னிறுத் தியதாலதான் சோ மகன் திருமணத்துக்குக் கூட ஜெ. நேரில் போகலை. பரிசுப்பொருட் களை மட்டும் அனுப்பி வச்சிட்டாரு. அதே நேரத்தில் கலைஞர், ஸ்டாலின்னு தி.மு.க. தரப்பில் அந்தத் திருமண வரவேற்பு விழாவில் கலந்துக்கிட்டாங்க. இரண்டு கட்சித் தலைமைகளின் அணுகுமுறையையும் தமிழக பா.ஜ.கவினர் கவனிக்கத் தவறலை. ஒரு பக்கம் ரெட் சிக்னல், இன்னொரு பக்கம் க்ரீன் சிக்னல் எரிவதா அவங்க நினைக்கிறாங்க.''

""எம்.பி. தேர்தல் பற்றி ஜெ. என்ன நினைக்கிறார்?''


""தமிழ்நாட்டில் 40 தொகுதிகளையும் ஜெயிச்சாலும் பிரதமராகிட முடியாதுங்கிறது அவருக்கும் தெரியும். அவரோட கணக்கெல் லாம் 40ஐ குறி வச்சி, 30 சீட்டுகளை ஜெயிச் சிட்டால் மத்தியில் யார் அரசு அமைச்சாலும் அதை டிக்டேட் செய்யும் அதிகாரம் தன் கையில்தான் இருக்கும்ங்கிறதையும், நினைச்ச படி ஆட்டி படைச்சிடலாம்ங்கிறதும்தான் அவரோட கணக்கு. 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வே போட்டியிடணும்னு நினைக்கும் ஜெ., வேட்பாளர்களையும் செலக்ட் பண்ணி வச்சிருக்காராம். வேட்பாளர்கள் தன் சொந் தப் பணத்தில் 5சி முதல் 10சி வரை செலவு பண்ணணும். மொத்தமா ஒரு தொகுதிக்கு 50சி வரை செலவு செய்து ஜெயிக்கணும்ங்கிறது தான் அவரோட திட்டம். ஏற்காட்டில் அதற்கு முன்னோட்டம் பார்க்கணும்னு நினைத்தார். அவர் நினைத்த லீடிங் வரலை.''

""ஜெ.வின் அப்செட்டும் கோபமும் மந்திரிகள் மேலேதானே திரும்பும்… அதன் உடனடி எஃபெக்ட்டுதான் ரிசல்ட் வந்த மறுநாள் நடந்த மந்திரிசபை மாற்றமா?''

""புதுக்கோட்டை இடைத்தேர்தலில் எதிர்பார்த்த லீடிங் வராம போனப்ப ஒரு மாசத்துக்கு எந்த மந்திரி களையும் ஜெ. பார்க்கலை. ஏற்காடு இடைத்தேர்தலைப் பொறுத்தவரைக்கும், மந்திரிகளெல்லாம் எம்.பி. தேர்தல் வரைக்கும் தங்களோட பதவி பறிபோகாதுங்கிற நம்பிக் கையில்தான் இருந்தாங்க. ஆனா, எம்.பி. தேர்தலுக்கு முதல்நாள் வரைக்கும்கூட மந்திரிசபையை மாத்துவேன்னு எச்சரிக்கிற மாதிரி அதிரடி நடவடிக்கையை ஜெ. எடுத்துவிட்டார். இதில் கே.வி.ராமலிங்கத்தோட பதவி பறிக்கப்பட்டதில் யாரும் பெருசா ஷாக் ஆகலை.''

""நாமதான் அவரோட பதவிக்கு ஆபத்துங்கிறதை யும், மணல் ஆறுமுகச்சாமி டீமோடு கே.வி.ஆருக்கு இருக்கிற நெருக்கம் பற்றியும், பொதுப்பணித்துறை அவர் வசம் இருந்தப்ப நடந்த காண்ட்ராக்ட்டு முறைகேடுகள் பற்றியும் பேசி அது நம்ம நக்கீரனில் டீடெய்லா வந்திருந்ததே.''…

""தலைவரே.. நக்கீரன் செய்தி வந்தப்ப ஏற்காட்டில் இருந்த மந்திரிகளும் நிர்வாகிகளும் வியர்த்துப் போயிட்டாங்க. ஏன்னா, நக்கீரனில் நியூஸ் வந்தால் அடுத்ததா ஹிட் லிஸ்ட்தான்னு அவங்க பேசிக்கிட்டதைக் கேட்டேன். எப்படிதான் இத்தனை துல்லியமா விவரங்களைப் புடிச்சி எழுதுறாங்களோன்னு அவங்க பேசிக்கிட்டதை கேட்டேன். ஏற்காடு தொகுதி ரிசல்ட் வர்றதுக்கு முன்னாடியே கே.வி.ராமலிங்கத்திடமிருந்து மா.செ.பதவியை ஜெ. பறிச்சிட்டார். அடுத்ததா, மந்திரி பதவி தான்னு அவருக்கும் அப்பவே தெரிஞ்சிடிச்சி.''

""மணல் மேட்டர், பொ.ப.து. காண்ட் ராக்ட், உள்ளூர் அரசியல் விவகாரங்கள், லோக்கல் புகார்கள்னு பலவற்றைப் பற்றியும் உளவுத்துறை விசாரித்து கொடுத்த ரிப் போர்ட்தான் பதவிக்கு வேட்டு வச்சதா?''

""கே.வி.ஆர். பற்றி நாம என்ன சொல்லி யிருந்தோமோ அதைத்தான் உளவுத்துறையும் தன்னோட ரிப்போர்ட்டில் உறுதி செய்து கொடுத்திருக்குது. ராமலிங்கத்திடமிருந்த இளைஞர் நலன், விளையாட்டுத்துறைக்கு உதயகுமார் மந்திரியாகியிருக்கிறார். ராமலிங் கத்தோட மா.செ. பதவி பறிக்கப்பட்டு அது தோப்பு வெங்கடாசலத்துக்குக் கூடுதலா கொடுக்கப்பட்ட நாளில்தான், ராமநாதபுரம் மாவட்ட செயலாளரா உதயகுமாருக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டது. உதயகுமாரோ விருதுநகர் மாவட்டத்துக்காரர். கூடுதல் பொறுப்பா கொடுத்திருந்தா அதை விருதுநகர் மாவட்ட அமைச்சரான ராஜேந்திர பாலாஜிக் குத்தான் கொடுத்திருக்கணும். அதற்குப் பதிலாக உதயகுமாருக்குக் கொடுத்தபோதே அவருக்கு ஒரு ஜாக்பாட் அடிக்கப் போகுதுன்னு நானே எதிர்பார்த்தேன். அதே மாதிரி அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி கிடைச்சிருக்குது.''

""உதயகுமார் இந்த ஆட்சியில் ஏற்கனவே மந்திரியா இருந்து பதவியை இழந்தவர்தானே?''

""ஆமாங்க தலைவரே.. இந்த ஆட்சியில் சிவபதி, சண்முகநாதன், உதயகுமார் மூன்று பேரும் மந்திரி, அப்புறம் எந்திரி, மறுபடியும் மந்திரின்னு மாறி மாறி பதவி பெற்றி ருக்காங்க. நடுவுல கொஞ்சம் மந்திரி பதவியைக் காணோம்ங்கிற மாதிரி உதயகுமாருக்குப் பதவி போனதற்குக் காரணம், திருச்சி தொகுதி இடைத்தேர்தல்தான். அந்த பை-எலக்ஷனில் ஜெ. பிரச்சாரம் செய்ய வந்தப்ப ஏகப்பட்ட லைட்டுகளைப் போட்டு ஜொலிக்க வச்சிருந்தாரு உதயகுமார். இப்படி செஞ்சா, செலவு கணக்கில் சேர்த்திடும் தேர்தல் கமிஷன். தி.மு.க. தரப்பு கண்ணிலே விளக்கெண்ணெய் விட்டுக்கிட்டு இந்த மாதிரி விஷயங்களையெல்லாம் தேர்தல் கமிஷன்கிட்டே புகாரா கொண்டுபோய்க்கிட்டி ருக்குன்னு உதயகுமார்கிட்டே ஓ.பி.எஸ். சொல்லியிருக்காரு. உதயகுமாரோ அலட்சியமா பதில் சொல்லியிருக்காரு. பிரச்சாரம் முடிச்சிட்டு ஹெலிகாப்டரில் ஏறுவதற்கு முன்பு அந்த லைட்டெல்லாம் போட்டது யாருன்னு கேட்க, நான்தாம்மான்னு உதயகுமார் பெருமையா சொல்ல, ஜெ. டென்ஷனாகி நத்தம் விஸ்வநாதனைப் பார்த்து, சீனியர் மந்திரிகளெல்லாம் இதை எடுத்துச் சொல்ல மாட்டீங்களான்னு கேட்க, சொல்லியும் கேட்கலைம்மானு நத்தம் பற்ற வைக்க, அதில்தான் அவரோட மந்திரி பதவிக்கு வேட்டு வைக்கப்பட்டது.'' 

""இப்ப அவருக்கு மறுபடியும் பதவி கிடைக்க என்ன காரணம்?''

""நாயுடு, தேவர், நாடார்கள் கலந்திருக்கக்கூடிய விருதுநகர் மாவட்டத்தில் விஸ்வகர்மா சமூகத்தை சேர்ந்த ராஜேந்திர பாலாஜி இருப்பதால் எம்.பி.த் தேர்தலில் முக்குலத்தோரை சமாளிப்பதற்காக உதயகுமாருக்கு பதவி தரப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட மந்திரியான கே.வி.ராமலிங்கத்தின் பதவியைப் பறிச்சிட்டு அதற்கு ஏன் விருதுநகர்-ராமநாதபுரம் மாவட்டங்களை கன்வின்ஸ் பண்ணுற மாதிரி மந்திரி பதவியைக் கொடுக்கணும்னு விசாரித்தால், அதற்கொரு காரணம் சொல்றாங்க. ஈரோட்டில் தோப்பு வெங்கடாசலம் மந்திரியா இருக்காரு. அவருக்கு அந்தப் பதவி கிடைக்க காரணம், செங்கோட்டையனின் கடுமையான எதிரி என்பதால்தான். செங்கோட்டையனுக்கோ அவரது ஆதரவாளர்களுக்கோ இப்போது கட்சியில் எந்த முக்கியத்துவமும் கிடையாது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள இன்னொரு எம்.எல்.ஏவான கிட்டுசாமி, கட்சியில் சீனியர்னாலும் செங் கோட்டையன் ஆளு. அதனாலதான் அவருக்குத் தராமல் வேற மாவட்டத்தில் உள்ள உதயகுமாருக்கு பதவி கொடுக்கப்பட்டிருக்குது. இத்தனைக்கும் ஏற்காட்டில் செங்கோட்டையனுக்கு இன்சார்ஜ் கொடுக்கப்பட்ட இடத்தில் நல்ல லீடிங் காட்டியிருக்காரு. ஆனாலும் தலைமையின் கோபம் குறைந்தபாடில்லை.''

""ஓ...''… 

""அதேநேரத்தில், தோப்பு  வெங்கடாசலமும் தலைமை எதிர்பார்த்த அளவுக்கு செயல்படலையாம். அதனாலதான் அவரை பவர்ஃபுல்லான வருவாய்த் துறையிலிருந்து தூக்கிட்டு, சிம்பிளான சுற்றுச் சூழலைக் கொடுத்திருக்கிறார் ஜெ.  வணிகவரித்துறை சம்பந்தமா அமைச்சர் ரமணா மேலே பல புகார்கள் வந்துக்கிட்டிருந்தது. அங்கிருந்து அவரைத் தூக்கினாலும் வெயிட்டான வருவாய்த்துறை கிடைச்சிருக்குது. வணிகவரித்துறை பத்திரப்பதிவுத்துறை அமைச்சராயிட்டாரு எம்.சி.சம்பத்.''

""உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி முடிஞ்சிடிச்சின்னு சொன்னாங்க, ஆனாலும் தமிழக அமைச்சரவையில் காய் நகர்த்தல்கள் தொடர்ந்துகிட்டுத்தான் இருக்குது. ஜெ. தலைமையில் 32 பேர் அமைச்சர்களா இருக்காங்க. இதில் 8 பேர் கவுண்டர்கள். 8 பேர்  முக்குலத்தோர். 6 பேர் வன்னியர்கள். காய் நகர்த்தல்களும் வெட்டுகளும் அவ்வப்போது தொடரும்.''


 தமிழக காங்கிரஸ் கட்சிக்கான மாநில-மாவட்ட நிர்வாகிகளை 10 ஆண்டுகளுக்குப் பிறகு நியமித்திருக்கிறது கட்சியின் மேலிடம். மாநிலத்தலைவராக ஞானதேசிகனே நீடிக்க, 17 துணைத்தலைவர்கள், 29 பொதுச்செயலாளர்கள், 43 செயற்குழு உறுப்பினர்கள், 54 மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்டு, பொருளாளராக கோவை தங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பட்டியலில் வாசன் ஆதரவாளர்கள் 45% இடம்பெற்றுள்ளனர். மீதி 55% இடங்களை தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்., ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன், சுதர்சன நாச்சியப்பன், பிரபு, மாணிக்தாக்கூர், கிருஷ்ணசாமியின் ஆதரவாளர்களுக்குப் பிரித்துத் தந்துள்ளனர். 

இதில் ப.சி தரப்பு அப்செட். கார்த்திசிதம்பரத்துக்குத் துணைத்தலைவர் பதவியையும், கராத்தேதியாகராஜன், செல்வப்பெருந்தகை ஆகியோருக்கு பொதுச்செயலாளர் பதவியையும் சிபாரிசு செய்திருந்தார் ப.சி. மூவருக்கும் பதவி இல்லை என்றதும் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் முகுல்வாஸ்னிக்கிடம் ப.சி விசாரிக்க அவரோ, "பட்டியலை நாங்கள் அனுப்பிவிட்டோம். அதை ராகுல்ஜி பார்த்து, சோனியாஜியிடம் அனுப்பிவைத்தார். இறுதி முடிவெடுத்தவர் மேடம்தான்' என்று சொல்லியிருக்கிறார். கார்த்திக்குப் பதவி இல்லை என்பதால் பதவி பெற்ற ப.சி ஆதரவாளர்கள் ராஜினாமா மூடில் இருக்கிறார்களாம். பழைய முகங்களுக்கே அதிக பதவிகள் தரப்பட்டிருப்பதால் அனைத்து கோஷ்டிகளிடமும் அதிருப்தி நிலவுகிறது.

ad

ad