புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 டிச., 2013

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு திருகோணமலை பஸ் நிலையத்துக்கு முன்பாக காணாமல் போனோரது உறவினர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது இனந்தெரியாதோரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காணாமல்போனோரை தேடியறியும் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தின்போது முகத்தை மறைத்துக்கொண்டு வந்த சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
"யுத்தத்தின்போது எமக்கும் இழப்புகள் ஏற்பட்டன. ஏன் அதைப்பற்றி நீங்கள் கதைக்க மறுக்கிறீர்கள்? உங்களது ஆர்ப்பாட்டத்தை யாழ்ப்பாணத்தில் நடத்துங்கள். இது எங்களது இடம். இங்கு ஆர்ப்பாட்டம் நடத்த விடமாட்டோம்" என்று கூறி தாக்குதல் நடத்தியதுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்த பதாகைகள் மற்றும் காணாமல்போனோரின் புகைப்படங்களையும் கிழித்து வீசியுள்ளனர்.
இதன்போது 30 இற்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்த போதும் சம்பந்தப்பட்டவர்களைத் தடுக்கவோ கைது செய்யவோ எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தாக்குதல் சம்பவத்தில் காயமுற்ற சிலர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ad

ad