"இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமையும் இந்திய அரசின் நிலை யும்' என்கிற தலைப்பில் சென்னையில் நடந்த கருத்தரங்கத்தில் பேசிய ப.சிதம்பரத்தின் ஆதரவாளரும் கடலூர் எம்.பி.யுமான கே.எஸ். அழகிரி, ஈழத்தில் நடந்த யுத்தத்தை நிறுத்த சிதம்பரம் கடும் முயற்சி எடுத்ததாகப் பதிவு செய்தார். இந்த நிலையில், கே.எஸ்.அழகிரி யை தொடர்புகொண்டு சில கேள்விகளைக் கேட்டோம்.
* ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடந்த இறுதிக்கட்ட போர் உக்கிரமடைந்திருந்த சூழலில் "போரை நிறுத்த முயற்சியுங்கள்' என ஒட்டுமொத்த தமிழகமும் ஓங்கிக் குரல் கொடுத்தது. ஆனால் அதுகுறித்து இந்திய அரசு செவி சாய்க்கவில்லை. உண்மை இப்படி இருக்க, சிதம்பரம் முயற்சித்ததாக சொல்கிறீர்களே, அவர் என்ன முயற்சி எடுத்தார்?
இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின் உக்கிரத்தைக் கண்டு மனம் வெதும்பியவர் சிதம்பரம். போரை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்கிற பதைபதைப்பும் பதட்டமும் அவரிடம் இருந்தது. பிரதமர் மன்மோகன்சிங்கிடமும் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த பிரணாப்பிடமும் இது குறித்து விரிவாக விவாதித்தார் சிதம்பரம். அதனைத் தொடர்ந்து இந்திய அரசு அதிகாரி கள், இலங்கை அரசை தொடர்புகொண்டு பேசியபோது "அவர்கள் (போராளிகள்) சண்டையை தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். நாங்கள் எப்படி நிறுத்துவது' என்று கேட்டனர். இந்த நேரத்தில் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன், புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் குமரன்பத்மநாபன் மூலமாக "போரை நிறுத்த இந்திய அரசு உதவ வேண்டும். எவ்வளவு விரைவாக நிறுத்த முடியுமோ அவ்வளவு வேகத்தில் நடவடிக்கை எடுங்கள்' என்று இந்திய அரசுக்கு தகவல் தெரிவித்தார். இதே தகவல் சிதம்பரத்திற்கும் கிடைத்தது.
கொஞ்சம்கூட தாமதியாமல் பிரதமர், வெளியுறவு அமைச் சர், சிதம்பரம் மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடந்தது. அந்த ஆலோசனையில், "யார் தவறு செய்தார்கள் ? யார் குற்றமிழைத்தார்கள் ? என்றெல்லாம் விவாதிக்க நேரம் இல்லை. போர் நின்றாக வேண்டும். அதற்கான முயற்சியை நாம் எடுத்தாக வேண்டும்' என்கிற அவ சரத்தை அழுத்தமாக வாதிட்டார் சிதம்பரம். அப் போது, "போராளிகள் நிறுத்துவார்களா? நிறுத்தமாட் டார்களா? என்பதை அறியாமல் இலங்கை அரசை எப்படி நாம் கேட்கமுடியும்? போர் நிறுத்தம் செய்வ தாக போராளிகள் சொல்வார்களா? என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டுமே' என்று சொல்லி அந்த பொறுப்பை சிதம்பரத்திடம் ஒப்படைத்தனர்.
உடனே தனக்கு தகவல் வந்த வழியாக, "போரை நிறுத்த சம்மதிக்கிறோம். ஆயுதத்தை கீழே போடுகிறோம் என்கிற ஒரு அறிவிப்பை முதலில் செய்யுங்கள். மற்றதை இந்தியா பார்த்துக்கொள்ளும்' என்று சிதம்பரம் தகவல் அனுப்பினார். அந்த தகவல் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு போய்ச் சேர்ந்துவிட்டதையும் சிதம்பரம் அறிந்துகொண்டார். அத்துடன் சிதம்பரம் கேட்டுக்கொண்டதுபோல புலிகள் தலைமை யும் அறிவிக்க ஒப்புக்கொண்டதாகவும் தகவல் இந்திய அரசுக்கு கிடைத்தது. அதனால் அந்த அறிவிப்பிற்காக காத் திருந்தனர். ஆனால் இரண்டுநாள் கடந்தும் அறிவிப்பு வரவில்லை. பிரதமரிடம் என்ன சொல்வதென தெரியா மல் தவித்தார் சிதம்பரம். திடீரென ஆயுதங்களை மௌனிக்கிறோம் என்று அறிவித்தார்கள் போராளிகள். ஆனால் அதற்குள் காலம் கடந்துவிட்டது. சிதம்பரம் தகவல் அனுப்பிய உடனே இந்த முடிவை புலிகள் எடுத்திருந்தால் நிச்சயம் போர் நிறுத்தப்பட்டிருக்கும். புலிகளின் தாமதத்தால் சிதம்பரம் எடுத்த முயற்சிகள் வீணானது.
போர் நிறுத்தம் ஏற்படாமல் போனதற்கு நெடுமாறனும் வைகோவும் பிரபாகரனை குழப்பியதுதான் காரணம் என்றும் அதற்கான ஆதாரங்கள் இருக்கிறது என்றும் கூட்டத்தில் பதிவு செய்திருக்கிறீர்களே... என்ன ஆதாரம்?
குமரன் பத்மநாபன் இலங்கை உளவாளி என்று ஏற்கனவே வைகோ குற்றம் சாட்டியிருக் கிறாரே? அந்த வகையில் குமரன் பத்மநாபன் சொல்வதையெல்லாம் ஆதாரமாக எப்படி எடுத்துக்கொள்ள முடியும்?
இவர் இந்த நாட்டு உளவாளி, அவர் அந்த நாட்டு உளவாளி என்று சொல்வதற்கு வைகோ யார்? யார், யார் எந்த நாட்டு உளவாளி என்று சொல்வதற்கு வைகோ என்ன அத் தாரிட்டியா? அவர்கள் சொல்வதெல் லாம் உண்மையா? புலிகள் இயக்கத்தில் ஆயுதக் கொள்வனவு பரிவர்த்தனையை செய்துகொண்டிருந்த மிக முக்கியமான நபர் குமரன் பத்மநாபன். புலிகள் இயக்கத்தின் சர்வதேச பொறுப்பாளர் என்கிற முக்கிய பொறுப்பையும் வகித்தவர் அவர். யுத்தம் முடிவுக்கு வருவது வரைக்கும் பிரபாகர னோடு தொடர்பில் இருந்ததால் கடைசி நிமிடத்தில் என்ன நடந்தது என்பது அவ ருக்குத் தெரியும். அதனால் அவரிடமிருந்து தான் இந்திய அரசு பல தகவல்களைப் பெற் றிருக்கிறது. அதனால் குமரன் பத்மநாப னுடைய தகவல்கள் முக்கியமான ஆதாரம். யுத்தம் முடிந்து சில மாதங்கள் கழித்துதான் குமரன் பத்மநாபனை கைது செய்கிறது இலங்கை அரசு. அவர்கள் பிடியில் சென்றதற் குப் பிறகு வேண்டுமானால் இலங்கை அரசுக்கு சாதகமான நிலையை குமரன் பத்மநாபன் எடுத்திருக்கலாம். ஆனால், அதற்கு முன்புவரை புலிகள் இயக்கத்தின் பொறுப்பாளராகத்தான் இருந்தார்.
போர் நிறுத்தம் குறித்து பல்வேறு முயற்சிகளை கனிமொழி, கார்த்தி சிதம்பரம், ஜெகத் கஸ்பர் உள்ளிட்டவர்கள் எடுத்ததாக சொல்லப்பட்டதே?
போர் நடக்க வேண்டும் என்று யாரும் விரும்பவில்லை. எல்லோருமே போர் நிறுத்தம் வேண்டுமென்றுதான் போராடினார்கள். அந்த வகையில் இவர்களும் முயற்சி எடுத்திருப்பார்கள். அவர்கள் எந்த மாதிரி முயற்சி எடுத்தனர் என்பது பற்றி எனக்குத் தெரியாது.
போர் நிறுத்தத்தை வலியுறுத்தி உண்ணாவிரதமிருந்த தம்மிடம் போர் நிறுத்தம் செய்யப்பட்டுவிட்டது என்று மத்திய அரசு (சிதம்பரம்) சொன்னதாக கலைஞர் ஏற்கனவே கூறியிருக்கிறார்? அப்படியானால் கலைஞருக்கு பொய்யான வாக்குறுதி தரப்பட்டதா?
கலைஞரிடம் என்ன வாக்குறுதி தரப்பட்டது என்று எனக்குத் தெரி யாது. யுத்த நிறுத்தம் தொடர்பாக கலைஞரிடம் சிதம்பரம் என்ன பேசினார் என்பதும் எனக்குத் தெரி யாது.