புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 டிச., 2013

 இனி வரும்காலங்களில் பல சிக்கல்களை நாங்கள் எதிர்கொள்ளப் போகின்றோம்; வடக்கு முதல்வர்
சட்ட திட்டங்களைக் குறைகூறிக்கொண்டு பதவிகளைப் பாதுகாக்க நாங்கள் ஆட்சிப்பீடம் வரவில்லை வடமாகாண மக்கள் என்ற முறையில் எமது அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கவே வந்துள்ளோம்.
அனைத்து வடக்கு மாகாண சபை உறுப்பினர்களும் அவ்வாறே செயற்பட வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்தார்.

2014 ஆம் ஆண்டுக்கான பாதீடு விவாத இறுதிநாளான இன்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாதீட்டு விவாதம் நிறைவடையும் நிலையில் எதிர்கட்சித் தலைவர்கள் இன மத மொழி என்ற எந்தவித பேதமும் இல்லாது விவாதத்தை ஒரு சமூகமாக முடிவுக்கு கொண்டுவர பங்களித்துள்ளார்கள். இது மிக முக்கிய மானதும் பாராட்டப்பட வேண்டியதுமான ஒன்றாகும்.

அத்துடன் விவாதத்தின் போது அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் தற்போது வடக்கு மாகாணத்தில் நடைபெற்று வரும் தவறான நடவடிக்கைகள் பற்றி பேசினார்கள். அத்துடன் எதிர்வரும் காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பேசினார்கள்.

பண நெருக்கடியால் எதையும் செய்யமுடியாத நிலை காணப்படுவதாக கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும் இராணுவ பிரசன்னம் எமக்கு  அவலத்தையும் நட்டத்தையும் தந்துவிட்டார்கள் என பலர் அங்கலாய்த்தார்கள்.

காணிகள் பறிபோவதைக் கண்டித்தார்கள். வினைத்திறன் அற்ற உள்ளூராட்சி சபைகள் பற்றியும் தெரிவித்திருந்தனர். மலிந்து வரும் ஊழல் மோசடிகள் குறித்தும் கவலைப்பட்டுக் கொண்டனர்.

அத்துடன் நடந்து முடிந்த போரினால் ஏற்பட்டுள்ள பாரிய சமூக சீர்கேடுகள் பற்றியும் இன்றைய இளைஞர் யுவதிகள் மத்தியில் ஏற்பட்டு வருகின்ற கலாச்சார , ஒழுக்க,  சமூக சீரழிவு என்பன மலிந்து காணப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் காணாமல் போனவர்கள் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் நடவடிக்கை வேண்டும். என்றெல்லாம் விவாதத்தின் போது உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள்  முன்வைத்து உரையாற்றினர்.

எனினும் குறைந்துள்ள நிதியினைக் கொண்டு தயாரிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் எதிர்ப்புகள் எதுவும் .இன்று நிறைவேற்றப்பட்டது. ஒரு வரலாற்று சாதனையாகும்.

இதில் எதிர்க்கட்சியினருக்கு நன்றி கூறுவதுடன் அனைவரும் ஒரு குடும்பத்தினர் போல அடுத்த ஒரு வருடத்திற்கும் சேர்த்து கடமையாற்ற வேண்டும் .

இதேவேளை நான் தூர நோக்குடனேயே செயற்பட்டு வருகின்றேன். அந்தவகையில் 13ஆவது திருத்தச் சட்டம் எமக்கு போதுமானதாக இல்லை. அத்துடன்  அதில் பல குறைபாடுகள் உள்ளன. எனவே அவற்றின் மூலம் எமக்குரிய அதிகாரங்களை விரைவில் பெற என்ன செய்ய வேண்டும் என்றும் கேள்விகள் எம்முன்னே வந்து நிற்கிறது.

அத்துடன் சட்ட திட்டங்களைக் குறைகூறிக்கொண்டு பதவிகளைப் பாதுகாக்க நாங்கள் ஆட்சிப்பீடம் வரவில்லை வடமாகாண மக்கள் என்ற முறையில் எமது அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கவே வந்துள்ளோம். அதனையே ஒவ்வொருவரும் மனிதில் நிலைநிறுத்திக் கொள்கின்றனர். 

எனினும் 13ஆவது திருத்தச் சட்டத்தை இதுவரை காலமும் நடைமுறைப்படுத்த எண்ணிய அதிகார மையம் மத்திய அரசு தான். 

அதன்படி ஏனைய மாகாண சபைகள் குறித்த அதிகாரத்தை கேட்கவில்லை. ஆனாலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளே கேட்கின்றன. 

அரசியல் காரணங்களுக்காக தேவையற்ற அலுவலகர்களை கொண்டிருக்கின்றோம். எனவே ஆளனி தொடர்பில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.

மேலும் அடுத்த வருடம் பாதீட்டிற்கு முன்னர் நாம் மத்திய அரசுடன் இணக்கப்பாடு காண வேண்டும். அத்துடன் எமது சட்டத்தில் முன்னேற்றம் காணப்பட வேண்டும். எனவே தான் மக்கள் நலனை உணர்ந்த , மனித உரிமை குறித்து அறிந்த, சமூக சமுதாய செயற்பாடுகள்  தொடர்பில் நன்கு உணர்ந்த படித்த பண்புள்ள ஒரு ஆளுநர் வேண்டும் என கருதுகின்றேன்.

தற்போதைய ஆளுநர் முன்னாள்  இராணுவ தளபதியாக இருந்து கொண்டு சிவில் பதவி வகித்தால் பார்வை சரியாக இருக்காது. பனையின்  கீழ் இருந்து பால் குடித்தாலும் அதனைக் கள்ளென்றே கொள்ளப்படும் என்றார்.

ad

ad