புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 டிச., 2013

பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கெதிராக யாழில் பிரசார ஊர்வலம் 
நவம்பர் 25 தொடக்கம் டிசம்பர் 10 வரை உலகெங்கும் அனுஸ்டிக்கப்பட்டு வரும் பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் 16 நாள் செயல்வாத நீதி கோரும் விழிப்புணர்வு பேரணி இன்று யாழில் பெண்கள் அமைப்புக்களால் நடத்தப்பட்டது.

இந்த பிரசாரம் இன்று காலை 8மணியளவில் நீதிமன்றிலிருந்து ஊர்வலமாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள யாழ்ப்பாண தொழில்நுட்ப கல்லூரியை சென்றடைந்தது.

மேலும் இந்த வருடம் பெண்கள்,சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகளவில் இடம்பெறுகின்றமையால் இது பெண்கள் மத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என பெண்கள் உரிமைக்காக பணியாற்றும் செயற்பாட்டாளர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் உட்பட இலங்கையில் பெண்கள் மீதான வன்முறைகள் மக்களின் வாழ்க்கையையும் சமூக அபிவிருத்தியையும் பாதிக்கும் ஒரு பாரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. சமாதானமாகவும் கௌரவமாகவும் வாழக்கூடிய சமூகங்களுக்கு அடித்தளமாக பெண்களுக்கெதிரான வன்முறைகளற்ற சமுகம் அமைய வேண்டும் என கோரி பெண்கள் அமைப்பு 8 கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

துரிதமாக விசாரணைகள் இடம்பெற்று சாட்சிகள் சேகரிக்கப்பட வேண்டும், சந்தேக நபர்களுக்கு 14 நாட்கள் தடுப்பு காவல் வழங்கப்பட்டு சாட்சிகள் போதவில்லையென தள்ளுபடி செய்வதை நிறுத்த வேண்டும்,சட்ட வைத்திய பகுப்பாய்வின் பின் உரிய காலத்திற்குள் முடிவுகள் அறிக்கைகள் வன்முறைக்குட்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கும் வைத்திய அதிகாரி அனுப்பி வைத்தல், நீதி விரைவாக வழங்கல்,பாலியல் குற்றம் புரிபவர்களுக்கு உச்ச பட்ச தண்டனை சட்ட கோவை அமுலாக்கல், நீதித்துறையிலுள்ளவர்கள் உண்மையான நீதிக்காகவும் மனித நேயத்திற்காகவும் பாடுபடல், தமிழ் பேசும் பெண் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தலை உறுதிப்படுத்தல் மற்றும் அனைவரும் இணைந்து இது பற்றிய விழிப்புணர்வை செயல்வாத பயணங்களாக தொடர வேண்டும் ஆகிய 8 கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் இந்த பிரசாரத்தில் பெண்கள்,சிறுவர்கள் என பலர் பங்கு பற்றி இருந்தனர்.

இந்த ஆண்டின் இது வரையான காலப்பகுதியில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பதியப்பட்ட பெண்கள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்களின் விபரம்.


ad

ad