புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 டிச., 2013

மஹிந்தவின் அழைப்பு! நானும் பிள்ளையும் வேண்டாமா? அரசியலுக்கு போகலாம் என்கிறார் மனைவி! - குழப்பத்தில் முரளிதரன்!
இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதனை அரசியலுக்குள் இழுப்பதற்கு மகிந்த ராஜபக்‌ஷ, அண்மைக் காலமாக பலத்த பிரயத்தனம் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேல் மாகாண சபைத் தேர்தலில் முத்தையா முரளிதரனைக் களமறிக்கி, முதலமைச்சராக்குவதற்கு மகிந்த ராஜபக்‌ஷ திட்டமிட்டுள்ளதாக ஆளும் கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்மூலம் தமிழர்களுக்கு சமமான உரிமை வழங்கப்பட்டு வருவதையும், இன்னுமொரு தமிழ்ப் பிரதிநிதி முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதையும் சர்வதேச சமூகத்திற்கு காண்பிக்கவே மகிந்த ராஜபக்‌ஷ இந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

எனினும், முத்தையா முரளிதரனின் மனைவியும், குடும்பத்திலுள்ள சிலரும், அரசியலுக்குள் பிரவேசிப்பதற்கு கடுமையான எதிர்ப்புக்களை வெளியிட்டுள்ளார்கள். அரசியலுக்குச் செல்வதாயின் தன்னையும், இரண்டு குழந்தைகளையும் மறந்துவிட வேண்டும் எனவும் எனவும் அவர் கண்டிப்பதாகக் கூறியுள்ளதாக தெரியருகிறது.

இருந்தாலும், முத்தையா முரளிதரனின் சகோதரன் முத்தையா சசிதரன் சிறை செல்வதைத் தடுப்பதற்கும், எத்தனேல் மதுசார வர்த்தகத்தைக் காப்பாற்றுவதற்கும் மகிந்த ராஜபக்‌ஷ குடும்பத்துடன் இணங்கிச் செல்ல வேண்டிய இக்கட்டான நிலை முத்தையா முரளிதரனுக்கு ஏற்பட்டுள்ளது.

முத்தையா முரளிதரனின் சகோதரன் முத்தையா சசிதரன், எத்தனேல் மதுசாரத்தை இறக்குமதி செய்யும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார். அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவிற்குச் சொந்தமான ஐந்து முக்கியமான மதுபான உற்பத்திசாலைகளுக்கு முத்தையா சசிதரனே எதனோல் விநியோகம் செய்கிறார்.

இந்த நிலையில், முத்தையா சசிதரன் வரி ஏய்ப்பு செய்ததாக அவர் மீது பாரிய குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. இறுதியாக இறக்குமதி செய்யப்பட்ட பெருமளவிலான எத்தனேல் தொகையையும் வரி செலுத்தாது மோசடியான முறையில் விடுவித்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை செய்துவருகின்ற நிலையில், முத்தையா சசிதரன் மீது குற்றச்சாட்டுக்கள் பலமாக இருப்பதால் அவரைக் கைதுசெய்யக்கூடிய அதிகாரங்கள் காணப்படுகின்றன.

இதனைப் பயன்படுத்தியே, பொதுநலவாய மாநாட்டிற்கு இலங்கை சென்றிருந்த பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமரூனுக்கு எதிரான கருத்துக்களையும், மகிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்திற்கு வெள்ளையடிக்கும் கருத்துக்களையும் முத்தையா முரளிதரன் மூலம் மகிந்த அரசாங்கம் வெளியிடச் செய்திருந்தது.

முரளிதரனின் இந்தக் கருத்துக்கள், தமிழர் தரப்பிலும், தமிழகத்திலும் முத்தையா முரளிதரனுக்கு எதிர்ப்பலை ஏற்படுத்தியது. மனைவி மதிமலர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதால் முரளிதரனுக்கு தமிழகத்தில் இருந்துவந்த ஆதரவு, மகிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்துடனான நெருக்கத்தினால் தற்போது அந்த ஆதரவு எதிர்ப்பலையாக மாறியுள்ளது.

நிலைமை இவ்வாறிருக்க, ராஜபக்‌ஷ அரசாங்கத்துடன் இணைந்துகொள்வது தமிழகத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படும் என முரளிதரனின் மனைவி மதிமலர் அறிவுறுத்தியுள்ளார். எனவே, என்ன காரணத்திற்காகவும், அரசியலுக்கு பிரவேசிக்க வேண்டாம் எனவும், அவ்வாறு அரசியல் செய்வதாயின், தன்னையும், இரண்டு குழந்தைகளையும் மறந்துவிட வேண்டும் எனவும் கடுமையாக அறிவுறுத்தியுள்ளார்.

இக் குழப்பத்தில் விடுபடுவதற்காக முரளிதரன் கடந்த 10ம் திகதி செவ்வாய்க் கிழமை அவுஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றுள்ளார்.

எனினும், அரசியலுக்கு வருவது குறித்தும், மேல் மாகாண சபைத் தேர்தலில் களமிறங்குவது குறித்தும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் மகன் நாமல் ராஜபக்‌ஷ, முத்தையா முரளிதரனை தொடர்ச்சியாக தொடர்புகொண்டு நச்சரித்து வருவதாக முரளிதரனுக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

மனைவி, பிள்ளைகள் குடுபத்துடன் வாழ்வதா? அல்லது நாமல் ராஜபக்‌ஷவிற்கு ''சரி'' எனக் கூறி சகோதரனைக் காப்பற்றிக் கொள்வதா? என்ற பெரும் குழப்பத்தில் முரளிதரன் உள்ளதாக அவருக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன?

ad

ad