புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 செப்., 2014

கூட்டுப் பிரார்த்தனை கொட்டகையும் அச்சுறுத்தலால் அகற்றப்பட்டது 
மீள்குடியேற்றத்தை வலிறுத்தி வலி.வடக்கு மக்கள் சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாமில் ஏற்பாடு செய்திருந்த கூட்டுப் பிரார்த்தனை இரண்டாவது தடவையாக இன்றும் புலனாய்வாளர்களது அச்சுறுத்தலால் நிறுத்தப்பட்டுள்ளது. 
முத்திரை வரி 75 லட்சம் 
 வலி. மேற்கு பிரதேச சபைக்குரிய 2010 ஆம் ஆண்டுக்கான முத்திரை வரி 75 லட்சம் ரூபா கிடைக்கப் பெற்றுள்ளதாக தவிசாளர் நாகரஞ்சினி ஐங்கரன் தெரிவித்துள்ளார்.
படகு நேற்று - சடலம் இன்று 
யாழ்.மண்டைதீவு கடற்ப்பரப்பில் மீன்பிடிக்கச்சென்று காணாமல் போன மீனவரின் சடலம் இன்று கரையொதுங்கியுள்ளது.
 
நேற்று முன்தினம் மாலை 2.00 மணியளவில் மீன்பிடிப்பதற்காக கடலிற்கு சென்ற மண்டைதீவை சேர்ந்த 7 பிள்ளைகளின் தந்தையான 47 வயதுடைய ராசு எனப்படும் தேவசகாயம்பிள்ளை சாள்ஸ் ஞானதீபன் என்பவரே காணாமற் போயிருந்தார்.
 
இவருடைய மீன்பிடிப்படகு மற்றும் கடற்றொழில்  உபகரணங்கள் அணைத்தும் நேற்றுக்காலை அல்லைப்பிட்டிகடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் இன்று இவருடைய உடல் மண்டைதீவு கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது
சர்வதேச விசாரணையே வேண்டும்; தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் 
இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களுக்கு உள்ளூர் விசாரணைகளில் எமக்கு நம்பிக்கை இல்லை எனவே சர்வதேச விசாரணை ஒன்றினையே நாங்கள் வலியுறுத்துகின்றோம் என தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு கிழக்கு இணைப்பாளர் ஜேசுதாஸ் தெரிவித்தார். 
குற்றவாளிகள் நிரபராதி ஆவது எப்படி- வழி சொல்கிறார் லக்ஸ்மன் கிரியல்ல 
ஆளும் கட்சியில் இணைந்து கொண்டால் எந்தவொரு குற்றச் செயலிலிருந்தும் தப்பித்துக்கொள்ள முடியும் என  ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
எபோலாவை அடக்க 600 மில்லியன் அமெரிக்க டொலர் 
 எபோலா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டுமானால் 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுமென ஐ.நா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எவர் சொன்னாலும் படைமுகாம்கள் அகற்றப்படாது 
எவர் தலையிட்டு அழுத்தங்களை கொடுத்தாலும் வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்ற முடியாது என அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
பட்ஜெட் பற்றி படிப்பிக்க வடக்கிற்கு அதிகாரிகள் வருகை 
வடக்கு மாகாணசபையின் 2015 - 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தயாரிக்கும் முறைமை தொடர்பான கலந்துரையாடல் யாழ். பொது நூலக கேட்ப்போர் கூடத்தில் இடம்பெற்று வருகின்றது.
 
newsயாழ்நகரில் மர்ம விபத்து. காயம் பட்டவர்கள் மாயம்.
யாழ்.இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் இன்று அதிகாலை மர்ம விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

31 ஆக., 2014

கிண்ணத்தை வென்றது இலங்கை 
இலங்கை மற்றும் சுற்றுலா பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி ஆரம்பமாகியுள்ளது.
இங்கிலாந்தை சுருட்டியது இந்தியா 
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 
மகஜர் வழங்க சென்றவர்களை தடுத்து நிறுத்தியது பொலிஸ்; வீதியில் அமர்ந்து போராடினர் உறவுகள் 
காணாமல் ஆக்கப்படுத்தலுக்கு எதிரான சர்வதேச தினமான இன்றைய தினம் ஜனாதிபதிக்கு மனு ஒன்றினை அனுப்பி வைக்க வவுனியா
தீர்வைப் பெறும் வழி எங்களுக்குத் தெரியும்; பேச்சுக்கு அரசு முறையாக அழைத்தால் பரிசீலிப்போம்! - பாடம் புகட்டத் தேவையில்லை.கூட்டமைப்பு சாட்டை 

"ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு தமிழருக்குத் தீர்வு வழங்காமல் காலத்தை இழுத் தடித்து அவர்களை அடக்கி – ஒடுக்கி சர்வாதிகார ஆட்சியை


தமிழரசுக் கட்சியின் தலைவராக மாவை! - 7 ஆம் திகதி பதவியேற்கிறார் 
ஜனநாயகப் போராட்டங்களைத் தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கும் கோ­த்துடன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவராக மாவை. சேனாதிராஜா எதிர்வரும் 7 ஆம் திகதி பதவியேற்கவுள்ளார்.

சர்வதேச காணாமல்போனோர் தினம்: வவுனியாவில் இன்று அணிதிரளுமாறு தமிழ்க் கட்சிகள், அமைப்புகள் அழைப்பு 
"சர்வதேச காணாமல்போனோர் தினமான இன்று வவுனியாவில் நடைபெறவுள்ள காணாமல்போன உறவுகளைக் கண்டுபிடித்துத் தருமாறு வலியுறுத்தும்

30 ஆக., 2014

ஐரோப்பிய கால்பந்து சீசனுக்கான சிறந்த வீரராக ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தேர்வு செய்யப்பட்டார். மொனாக்கோவின் மான்டி கார்லோ நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த வண்ணமயமான விழாவில், ரொனால்டோ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். விருதுடன் உற்சாகமாக போஸ் கொடுக்கிறார் ரொனால்டோ.

2016 இல் முதல்வர் வேட்பாளராவாரா ரஜpனி?: தமிழக அரசியல் களத்தை கைப்பற்ற பாஜக திட்டம்


எதிர்வரும் 2016ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் நடிகர் ரஜpனிகாந்தை முதல்வர் வேட் பாளராக முன்னிறுத்தி தமிழக அரசி யல் களத்தை கைப்பற்ற பாஜக

உலகிலேயே முதல் முறையாக ஒரே நாளில் ஒன்றரை கோடி பேருக்கு புதிய வங்கிக் கணக்கு

~~மக்கள் செல்வ திட்டம்" வெற்றிகரமாக முன்னெடுப்பு

உலகிலேயே முதல் முறையாக ஒரே நாளில் 1.5 கோடி பேருக்கு புதிய
கனரக வாகனங்கள் சிறு வீதிகளை பயன்படுத்த யாழில் தடை ; பொலிஸ் 
யாழ்.குடாநாட்டின் சிறு வீதிகளின் ஊடாக கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபட விரைவில் தடை விதிக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டவுள்ளது.
கொலைகார டிப்பருக்கு வழித்தட அனுமதி உண்டா ? 
 நேற்றுமுன்தினம் புத்தூரில் கர்ப்பிணிப் பெண் ஒருவரை மோதி உயிரிழப்பை ஏற்படுத்திய டிப்பர் வாகனத்துக்கு மணல் ஏற்றிச் செல்வதற்கான

ad

ad