புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஆக., 2014


உலகிலேயே முதல் முறையாக ஒரே நாளில் ஒன்றரை கோடி பேருக்கு புதிய வங்கிக் கணக்கு

~~மக்கள் செல்வ திட்டம்" வெற்றிகரமாக முன்னெடுப்பு

உலகிலேயே முதல் முறையாக ஒரே நாளில் 1.5 கோடி பேருக்கு புதிய
வங்கிக் கணக்கு துவக்கும் சாதனை திட்டமான, மக்கள் செல்வ திட்டம் என பொருள்படும் 'ஜன் தன் யோஜனா" நேற்று முன்தினம் வெற்றி கரமாக துவக்கப்பட்டது.
இதை டில்லியில் நடைபெற்ற விழா வில் பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தார். நாடு முழுவதும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களுக்கு வங்கிக் கணக்கு களை துவக்கினர்.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த மே 26ல் பொறுப்பேற்றது. ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களில் 'மெகா" திட்ட மான 7.5 கோடி பேருக்கு வங்கிக் கணக்கை துவக்கும் திட்டத்தை மத்திய அரசு நேற்று முன்தினம் செயல்படுத்தியுள்ளது.
டில்லி விஞ்ஞான் பவனில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் திட்டத்தை துவக்கி பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: ஏழைகளுக்கு எட்டாக்கனியாக உள்ள வங்கி சேவையை ஏழை களுக்கு வழங்கி உள்ளோம். நாட் டில் உள்ள ஒவ்வொருவரையும் வங்கிகளுடன் இணைத்து உள ;ளோம்.
இது அவர்களை பொருளா தார மேம்பாட்டிற்கு அழைத்துச் செல்லும் முதற்படி. 1969இல் வங்கி கள் தேசியமயமாக்கப்பட்டன. ஆனால் துரதிருஷ்டவசமாக 68 ஆண்டு களான பிறகும், மக்கள் தொகையில் 68 சதவீதம் பேருக்கு கூட வங்கி சேவைகள் கிடைக்கவில்லை.
இன்று புதிய வரலாறு படைக் கப்பட்டுள்ளது. ஒரே நாளில் 1.5 கோடி புதிய வங்கிக் கணக்குகள் துவக்கப்பட்டு உள்ளன. அது போல் 1.5 கோடி பேருக்கு 1 இலட்சம் ரூபாய்க்கு விபத்து காப்பீடு கிடை த்துள்ளது. இந்த நாளை நாம் அனைவரும் கொண் ;டாட வேண்டும். வி' சக்கரத்தில் சிக்கியிருந்த ஏழைகளுக்கு விடுதலை கிடைத்துள்ளது.
நிர்ணயிக்கப்பட்டு ள்ள, 7.5 கோடி பேருக்கு அடுத்த ஆண்டு ஜனவரி க்குள் வங்கிக் கண க்கு துவக்கும் திட்டத்தை செய்து முடிப்போம் என வங்கிகள் எனக்கு உறுதியளித்துள்ளன. ஏழைகளுக்கு மிகவும் பயனுள்ள திட்டம் இது. இந்த திட்டத்தின் அடுத்த கட்டமாக வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்க ளுக்கு குறைந்த அளவில் பென்'ன் வழங்கவும் திட்டம் உள்ளது.

ad

ad