31 ஆக., 2014

கிண்ணத்தை வென்றது இலங்கை 
இலங்கை மற்றும் சுற்றுலா பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி ஆரம்பமாகியுள்ளது.

மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் கிரிக்கட் தொடரின் மூன்றாவது போட்டி தம்புள்ளையில் ரங்கிரிய சர்வதேச மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று காலை 10.00 மணியளவில் ஆரம்பமாகியது.
 
நாணயசுழற்ச்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணித்தலைவர் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார், இதன்படி துடுப்பெடுத்தாட களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஆரம்ப வீரர்கள் பெரிதளவு சோபிக்காது வந்த வேகத்தில் அரங்கு திரும்பினர்.
 
இலங்கையணி வீரர்களின் வேகத்தை எதிர்கொள்ளமுடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் வெளியேற 81/ 8 விக்கெட்டுகள் இழந்து தடுமாறிய போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டு மீண்டும் 48 ஓவர்களாக  குறைக்கப்பட்டு மீண்டும் ஆட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
 
பாகிஸ்தான் அணி 32.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டினை இழந்து 102 ஓட்டங்களை பெற்றுள்ளது.  பாகிஸ்தான் அணி சார்பாக பாவத் அளம் அதிக பட்ச ஓட்டமாக 38 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுள்ளார்.
 
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டில்சன் , தரங்க ஜோடி  46 இணைப்பாட்டமாக பெற்றவேளை  இர்பானின்  பந்து வீச்சில் தரங்க 16 ஓட்டங்களுடன் அரங்கு திரும்ப மதிய போசனத்திற்காக ஆட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. 
 
மதிய போசனத்தை தொடர்ந்து ஆட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது களமிறங்கிய சங்கக்கர 2 ஓட்டங்களுடன் அவசர அவசரமாக அரங்கு திரும்ப ஜெயவர்த்தன களம் புகுந்தார் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ஜெயவர்த்தன டில்சான் ஜோடியினர் வெற்றியின் விளிம்பில்  இலங்கையணியை கொண்டுவந்த வேளை 1 ஓட்டங்கள் எடுத்தல் வெற்றி என்ற நிலையில்  ஜெயவர்த்தன ஆட்டமிழந்து செல்ல களம் புகுந்த மத்தியுஸ்ஓட்டங்கள்  எதுவும் பெறாது  டில்சானுக்கு வாய்பை வழங்க  46 ஓட்டங்களுடன் நின்ற டில்சான் 4 ஓட்டங்களை  பெற்று  அரைச்சதத்தை பெற இலங்கையணி தொடரைக் கைப்பற்றியது.