www.pungudutivuswiss.com www.madathuveli.com www.panavidaisivan.com www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com தொடர்புகளுக்கு pungudutivu1@gmail.com

சனி, ஜூன் 22, 2013


பல்லாயிரக் கணக்கான அடியவர்களின் அரோகரா கோசம் முழங்க அழகிய சிற்பத் தேரில் பவனி வந்து அடியோர்க்கு அருளளித்த நயினை நாகபூஷணி அம்மன்.........

நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 23 பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்த நபரொருவரை அவரால் பாதிக்கப்பட்ட சிலர் பிடித்து பத்தேகம பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.
இவர் பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்து  அதனூடாக குறித்த பெண்களை தொடர்புகொண்டுள்ளார்.

பிலிமதலாவ , இம்புல்கம பிரதேசத்தில் இரவு நேரத்தில்  தனது காதலியின் வீட்டினுள் புகுந்த நபரொருவர் அவரது தந்தையின் ஆணுறுப்பை வெட்டிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டவரெனக் கூறப்படும் சந்தேக நபர் தனது காதலியை சந்திக்கும் பொருட்டு இரவு நேரத்தில் அவரது வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.

கூட்டமைப்புக்கும் அரசுக்குமிடையில் பேச்சுவார்த்தை -மத்தியஸ்தம் வகிக்க தென்னாபிரிக்கா தயார் தென்னாபிரிக்க பிரதி வெளிவிவகார அமைச்சர் நாளை இலங்கை வருகிறார்! தமிழ் கூட்டமைப்புடன் பேச்சு
தென்னாபிரிக்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் இப்ராஹிம் இப்ராஹிம் நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கை வருகின்றார். இவர் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு தமிழ்
யாழ்ப்பாணத்தில் இரண்டு இறங்குதுறைகள் விரைவில் திறந்து வைப்பு
யாழ்ப்பாணத்தில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ள பாசையூர் மற்றும் சுழிபுரம் இறங்குதுறைகள் அமைச்சர் ராஜித சேனாரத்தினவினால் விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது.
லண்டனில் தமிழ்ப் பெண்ணை எட்டி உதைத்த சிங்களவரின் பேஸ்புக் கணக்கு முடக்கம்
லண்டனில் இலங்கை கிரிக்கெட் அணியை புறக்கணிக்குமாறு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது தமிழ்ப் பெண்ணொருவரை எட்டி உதைத்த சிங்கள இளைஞரின் பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படாது என இந்தியாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது!– கோத்தபாய ராஜபக்
பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது என்பது பற்றி இந்தியாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நவீனரக கணனிகள், கைத்தொலைபேசிகளை கடத்தி வந்தவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைது
டுபாய் நாட்டிலிருந்து இலங்கைக்குள் சட்ட விரோதமான முறையில் டெப்லட் கணனிகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளை கடத்தி வந்த நபர் ஒருவரை இன்றைய
டான் யாழ் ஒளியின் உரிமையாளர் எஸ் எஸ் குகநாதனின் வலது கை எனப்படுபவரும்  அதன் நிர்வாகியும் முன்னாள் புலிகளின் பிரமுகருமான  தயா மாஸ்டர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட  தீர்மானம்
வட மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தீர்மானித்துள்ளதாக
மாற்றுவலுவுடைய பள்ளிச் சிறார்கள் 60 பேருக்கு நிதியுதவியினை வழங்கிய கனடாவில் வசிக்கும் புலம்பெயர் உறவு
மாற்றுவலுவுடைய பள்ளிச் சிறார்கள் 60 பேருக்கு தலா ஐயாயிரம் ரூபா நிதி உதவி வழங்கிய நிகழ்வொன்று அறிவகத்தில் நடைபெற்றுள்ளது.
பாடசாலைகளில் கற்றுக் கொண்டிருக்கும் இவ் 60 மாணவருக்கான நிதியுதவியானது, கனடா மொன்றியலில் வசிக்கும் தமிழ் புலம் பெயர் உறவான மோகன் அவர்களால் தனியொருவராக வழங்கப்பட்டது.
மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தலைவர் தி.சிவமாறன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் தமது
நவீனரக கணனிகள், கைத்தொலைபேசிகளை கடத்தி வந்தவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைது!
டுபாய் நாட்டிலிருந்து இலங்கைக்குள் சட்ட விரோதமான முறையில் டெப்லட் கணனிகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளை கடத்தி வந்த நபர் ஒருவரை இன்றைய தினம்
விடுதலை சிறுத்தை நிர்வாகி குண்டர் சட்டத்தின் கீழ் கைது
விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி காமராஜ் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை முயற்சி, ஆள்கடத்தல், பணம் பறிப்பு உள்ளிட்ட 15 வழக்குகளில் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. நாகை மாவட்ட கலெக்டர் முனுசாமி உத்தரவின் பேரில் எஸ்.பி., சிபிசக்ரவர்த்தி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
சோனியாவை சந்தித்த திருநாவுக்கரசர்
முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியச் செயலருமான சு.திருநாவுக்கரசர், இன்று காலை 11 மணி அளவில் காங்கிரஸ் கட்சித்
பெப்சி உமா புகார்: நிகழ்ச்சி தயாரிப்பாளர் கைது
சென்னை கிண்டி அருகே தனியார் தொலைக்காட்சியில், நிகழ்ச்சி ஒன்றை தயாரித்து வருகிறார் பெப்சி உமா. இவருடைய நிகழ்ச்சிக்கு தயாரிப்பு மேலாளராக
தமிழகத்தைச் சேர்ந்த 157 யாத்திரிகர்கள் சென்னை திரும்பினார்கள்: தமிழக அரசு தகவல்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளின் காரணமாக, ருத்ர பிரயாக் மற்றும் சமோலி மாவட்டங்களில்          ""ஹலோ தலைவரே...… ராஜ்யசபா தேர்தலில் ஜெ. முதலில் எடுத்த முடிவிலிருந்து பின்வாங்கினாலும், தமிழகத்தில் அ.தி.மு.க கூட்டணியைத் தக்கவைத்துக் கொண்டதோடு, தேசிய அளவிலும் கவனிக்கிற அளவுக்கு மூவ் நடந்திருக்குது.''


               வெள்ளிக்கிழமை (ஜூன்-14) மாலை நேரம். நமது செல்ஃபோனுக்கு வந்த வெளிநாட்டு அழைப்பு அலறியது. குவைத் சிறையில் இருக்கும் முத்துப்பேட்டை சுரேஷ், மன்னார்குடி காளிதாஸ் இருவரையும் செவ்வாய்கிழமை தூக்கில் போடப்போறாங்க. அவர்களது தண்டனையை குறைக்கும் கருணை மனு மன்னரிடம் நிலுவையில் இருக்கும்போதே தண்டனையை நிறைவேற்றப்போறாங்க. எப்படியாவது தடுத்து நிறுத்துங்க...''

""இது சம்பந்தமான ஆவணங்களை எங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள், நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்வோம்'' என்று அவர்களுக்கு நம்பிக்கையூட்டினோம்.

அதைத் தொடர்ந்து அடுத்த 10-வது நிமிடம் குவைத்தில் இருந்தே தொடர்புகொண்ட சுரேஷின் அப்பா சண்முகசுந்தரம்... ""என் மகன் சுரேஷ், மன்னார்குடி காளிதாஸ், இலங்கை பெண் பிரேமலதா ஆகியோர் இணைந்து இலங்கைப் பெண்ணான பாத்திமாவை 2008-ம் ஆண்டு கொலை செய்ததாக சொல்லி கைது செய்யப்பட்டனர். குற்றம் செய்ததாக கருதி சுரேஷ், காளி தாஸ் இருவருக்கும் தூக்குத் தண்டனை என்று நீதிமன்றம் சொல்லிவிட்டது. இந்திய இலங்கை தூதரகம் மூலம் இறந்த இலங்கைப் பெண் பாத்திமா குடும்பத்திடம் பேசினோம். முடிவில் ரூ.12 லட்சம் பணம் கொடுத்துவிட்டால் தூக்குத் தண்டனையில் இருந்து விடுதலை, தண்டனை குறைப்பு செய்ய கடிதம் கொடுப்பதாக சொன்னார்கள். அதன்படி பணம் கொடுத்தோம். அதன்பிறகு, "இந்த இருவருக்கும் மரண தண்டனை கொடுப்பதால் எங்கள் மகள் பாத்திமா உயிருடன் வரப் போவதில்லை. அதனால் சுரேஷ், காளிதாஸ் ஆகியோர் மீது கருணை கூர்ந்து இருவருக் கும் தண்டனை குறைப்பு செய்ய சம்மதிக்கிறோம்' என்று பாத்திமா குடும்பத்தினர் குவைத் மன்னருக்கு கடிதம் கொடுத்தனர். 3 ஆண்டுகளாக அந்த கருணை மனு மன்னரிடம் கிடப்பில் உள்ளது. 

இந்த நிலையில்தான் வெள்ளிக்கிழமை சிறைக்கு வந்த சிறை அதிகாரிகள் வேறு வழக்கில் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டிய மூவருடன் சுரேஷ், காளிதாஸ் இருவரையும் சேர்த்தே அழைத்துச் சென்றுள்ளனர். இது சம்பந்த மாக இந்திய எம்பசி அதி காரிகளிடம் நேரில் போய் கேட்டால் சரி யான பதில் இல் லை. எங்கள் பிள்ளை களை செவ்வாய்க் கிழமை மதியம் (இந்திய நேரப் படி) 2.30-க்கு தூக்கு போடப்போகிறார்கள், அவர்கள் உயிர்களை காப் பாற்றுங்கள்'' என்று கதறினார்.

வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணிக்கு வழக்கு சம்பந்தமான ஆவணங்கள் நமது மெயிலுக்கு வந்து சேர்ந்தன. இந்த ஆவணங்களை வைத்துக்கொண்டு நாகை தி.மு.க. எம்.பி. விஜயனை உடனே தொடர்புகொண்டோம். "உங்கள் தொகுதி முத்துப்பேட்டைக்காரரை தூக்கு கயிற்றிலிருந்து காப்பாற்றுங்கள். தமிழர் களின் உயிர்களை காப்பாற்றுங்கள். காலம் இல்லை. உடனடியாக நடவடிக்கையில் இறங்குங்கள்' என்று அனைத்து விபரங்களையும் போனில் சொன்னோம். அப்போதே ஆவணங்களை எம்.பி.விஜயனுக்கு ஃபார்வர்டு செய்தோம்.

இந்த ஆவணங்களுடன் ஒரு கடிதம் வைத்து பிரதமர் அலுவலகத்திற்கும், மத்தியஅமைச்சர் வயலார் ரவிக்கும் அனுப்பியதுடன் போனிலும் பேசி தமிழர்களை காப்பாற்ற கோரிக்கை வைத்தார் விஜயன் எம்.பி. அடுத்த 10-வது நிமிடத்தில் மீண்டும் நம்மை தொடர்பு கொண்ட விஜயன் எம்.பி., ""பிரதமர் அலுவலகம் என் கடிதத்தை பெற்றுக் கொண்டதாக பதில் அனுப்பிவிட்டார்கள். விரைந்து நடவடிக்கை இருக்கும். சனிக்கிழமை குவைத்தில் அரைநாள்தான் வேலை நாள். அதற்குள் நடவடிக்கை எடுக்க துரிதப்படுத்தியுள்ளோம்'' என்றார் நம்பிக்கையோடு.

சனிக்கிழமை (ஜூன்-15). நம்மை தொடர்பு கொண்ட விஜயன் எம்.பி. ""மீண்டும் அமைச்சரிடம் பேசியிருக்கிறேன். நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் குடும்பத்தினரை நம்பிக்கையுடன் இருக்கச் சொல்லுங்கள்'' என்றார் உறுதியாக.

ஞாயிறு (ஜூன்-16). காலை நம்மை தொடர்பு கொண்ட சுரேஷின் அப்பா சண்முக சுந்தரம்... ""தண்டனையை நிறைவேற்ற அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைமுறைகள் எல்லாம் முடித்துவிட்டு தனியறையில் அடைத்து வைத்துள்ளனர். பயமா இருக்கு'' என்றார். ""நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் எம்.பி. விஜயன் மூலம் நடவடிக்கை கள் நடந்து கொண்டிருக்கிறது. இந்திய அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது'' என்று நம்பிக்கை யூட்டினோம்.

ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு நம்மை தொடர்புகொண்ட சண்முகசுந்தரம்... ""தம்பி ரொம்ப நன்றி. எங்கள் பிள் ளைகளை தண்ட னை நிறைவேற்றும் அறையில் இருந்து அழைத்து வந்து பழைய செல்லில் அடைத்துவிட்டார் கள். சிறையிலும் எம்பசி அம்பாசிடரிட மும் போய் கேட்டேன். "உங்கள் பிள்ளை களுக்குத் தூக்குத் தண்டனை இல்லை' என்று சொல்லி இருக்கிறார்கள். நம்பிக்கை பிறந்துவிட்டது. எங்கள் பிள்ளைகளின் உயிர்களை காப்பாற்றிய நக்கீரனுக்கும் முழு முயற்சி எடுத்துக்கொண்ட தி.மு.க. எம்.பி. விஜயன் மற்றும் இந் திய அரசுக்கும் மற்ற வர்களுக்கும் நன்றி...'' என்று தழுதழுத்தார்.

அதன்பிறகு நாம் எம்.பி. விஜயனிடம் தொடர்புகொண்டு நன்றி சொன்னோம். "எனக்கும் அம்பாசிட ரிடம் இருந்து மெயில் வந்துள்ளது. இந்த முயற்சியை எடுக்கத் தூண்டிய நக்கீரனுக் குத்தான் நன்றி சொல் லணும்' என்றார்.

இந்த நிலையில் சுரேஷின் அம்மா மல்லிகா நம்மிடம்... ""என் பிள்ளையை காப்பாற்றுங்கள் என்று நான்கு வருடமாக இந்தியாவில் உள்ள அத்தனை தலைவர் களிடமும் போராடி ஓய்ந்து போனேன். இப்போது திடீரென தூக்கு என்று சொன் னார்கள். இப்ப உங்க முயற்சியால எங்க பிள்ளை உயிர் காப்பாற்றப்பட்டிருக்கு. ரொம்ப நன்றி...'' என்று தழுதழுத்தார். 

துரித நடவடிக்கை எடுத்து இரண்டு தமிழர்களின் உயிர்களை காப்பாற்றிய நாகை எம்.பி. விஜயனுக்கு நக்கீரன் சார்பிலும், தண்டனையில் இருந்து மீண்டவர்களின் குடும்பத்தினர் சார்பிலும் நன்றி கூறிக்கொள்வோம்.           


            ரசியல்வாதி, இயக்குநர், நடிகர், எழுத் தாளர் என பன்முகத் தன்மை கொண்ட மணி வண்ணன் பல்வேறு உடல் உபாதைகளுடன் இருந்த நிலையில் கடந்த 15-ந்தேதி தனது 58-வது வயதில் மாரடைப்பால் காலமானார்.
காரல்மார்க்ஸ் கைது : புழல் சிறையில் அடைப்பு ( படங்கள் )
திமுக மாநில மகளிர் அணி பொறுப்பாளர் காரல் மார்க்ஸ்,  முதல்வர் ஜெயலலிதா திமுகவினரை பழி வாங்கி வருகிறார். திமுக தலைவரை தேவையில்லாமல்

னநாயகம், சட்டம் ஒழுங்கு, மனித உரிமை, நீதி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இலங்கை கூடுதல் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர்களான வீரவன்ச, சம்பிக்கவின் முயற்சிகள் எதுவும் பயனளிக்காது -வாசு

ரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் எவ்விதமான அதிகாரக்குறைப்பும் இடம்பெறாமலேயே வடமாகாண சபை

பத்து மாத ஆண் குழந்தையொன்றை இனந்தெரியாத நபர் ஒருவர் கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவமென்று இன்று மதியம் மட்டக்களப்பு மயிலம்பாவெளிப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
பத்து மாதமுடைய ஆனந்தன் அனுஷன் என்ற பச்சிளங் குழந்தையே இவ்வாறு பரிதாபகரமாக கொல்லப்பட்டுள்ளதாக ஏறாவூர்

6 மாதகாலத்திற்குள் 11 சிறுமிகள் யாழில் பாலியல் துஸ்பிரயோகம்

யாழ். குடாநாட்டில் கடந்த 6 ஆறுமாத காலத்திற்குள் 16 வயதுக்குட்பட்ட 11 சிறுமிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை

அரசின் உதவியால் உத்தர்கண்ட மாநிலத்திலிருந்து தமிழகம் திரும்பிய பயணிகள்
[
உத்தர்கண்ட் மாநிலத்தில் யாத்திரை சென்று வெள்ளத்தில் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த 103 பக்தர்கள், அரசின் முயற்சியால் பத்திரமாக சென்னை திரும்பியுள்ளனர்.