புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூன், 2013




          ""ஹலோ தலைவரே...… ராஜ்யசபா தேர்தலில் ஜெ. முதலில் எடுத்த முடிவிலிருந்து பின்வாங்கினாலும், தமிழகத்தில் அ.தி.மு.க கூட்டணியைத் தக்கவைத்துக் கொண்டதோடு, தேசிய அளவிலும் கவனிக்கிற அளவுக்கு மூவ் நடந்திருக்குது.''

""ஆமாப்பா.. ராஜ்யசபாவுக்கான 6 இடங்களில் 4தான் அ.தி.மு.கவுக்கு நிச்சயமான வெற்றிங்கிற நிலையில், 5 வேட்பாளர்களை அ.தி.மு.க சார்பில் நிறுத்தினார் ஜெ. 6-வது இடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டி போடட்டும்னு சொன்னாரு. ஆனா, 5-வது இடத்துக்கே அ.தி.மு.க.வுக்கு கூட்டணிக் கட்சிகளின் தயவு தேவைப்படுற நேரத்தில், 6-வது இடத்தில் எப்படி அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட்டால் வேட்பாளரை நிறுத்தி ஜெயிக்க வைக்க முடியும்னு தோழர்கள் உள்பட எல்லோரும் குழம்பியிருந்த நேரத்தில், அ.தி.மு.க.வின் 5-வது வேட்பாளரான தங்கமுத்துவை வாபஸ் வாங்க வைத்து, கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜாவுக்கு அ.தி.மு.க ஆதரவளிக்கும்னு திங்கட்கிழமையன்னைக்கு ஜெ. திடீர்னு அறிவிச்சிட்டாரே…!''

""40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தனித்துப் போட்டின்னு டெல்லியில் போன வாரம் அறிவிச்ச ஜெ., இந்த வாரம் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவுன்னு சொன்னதன் மூலமா தன்னோட பழைய கூட்டணியை அவர் பலப்படுத்திக் கிட்டதாகத்தான் டெல்லி வட்டாரத்தில் பார்க்குறாங்க. அதே நேரத்தில், தி.மு.க. தலைவர் கலைஞர் தன் மகள் கனி மொழிக்காக மறுபடியும் காங்கிரசின் ஆதரவைத் தேடிச் செல்வாருங்கிற கணக்கைப் போட்டுத்தான் ஜெ. இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், காங்கிரஸ் பக்கம் தி.மு.க சென்றால் அது அ.தி.மு.க அணிக்குத்தான் பலம் சேர்க்கும்னும் ஜெ. கணக்குப்போடுவதாகவும் அரசியல் நோக்கர்கள் சொல்றாங்க. 

""வழக்கமா சத்தமில்லாமல் முடிகிற ராஜ்யசபா தேர்தல் இந்த முறை இத்தனைத் திடீர்த் திருப்பங்களை உருவாக்கிடிச்சே''


""ஆமாங்க தலைவரே.. .. 6-வது சீட்டுக்கு கனிமொழியை நிறுத்துவதுன்னு தி.மு.க. முடிவெடுத்ததிலிருந்தே கணக்குகளைப் போட்டு காய் நகர்த்திப் பார்த்தது. தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மாறி மாறி பேசுறாருங்கிறதாலேயும், காங்கிரஸ்கிட்டே மறுபடியும் போகவேண்டாம்ங்கிறதாலேயும் சி.பி.எம். மோட 10 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைக் கேட்டு வாங்குவோம்ங்கிறதுதான் தி.மு.க. வோட முதல் மூவ்வா இருந்தது. டெல்லியில் டி.ஆர்.பாலு மூணு முறை பிரகாஷ்காரத்தையும் மூணு முறை சீதாராம் யெச்சூரியையும் தனித்தனியா சந்தித்துப் பேசினார். இரண்டு பேரையும் சேர்த்தும் சந்தித் தார். காங்கிரஸ் பக்கம் தி.மு.க. போகவிரும்பலைங்கிறதைப் புரிஞ்சிக்கிட்ட சி.பி.எம். தலைவர்களும், எங்க கூட்டணியில் இப்ப ஜெ. இருக்காரா இல்லையான்னு தெரியலை. தி.மு.க.வோடு இப்ப கைகோர்த்தால், அது லோக்சபா தேர்தலிலும் நல்ல கூட் டணியா அமையும்.  சி.பி.ஐ. தலைவர்களோடு பேசிட்டு சொல்றோம்னு பதில் சொன்னதோடு, சி.பி.ஐ.யின் சீனியர் லீடரான ஏ.பி.பரதன்கிட்டேயும் பேசி, ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகி, தி.மு.க.வை ஆதரிப்பது பற்றி சொல்லியிருக்காங்க.''

""பரதன் என்ன சொன்னாராம்?''


""சி.பி.எம். தலைவர்களின் முடிவுக்கு அவரும் ரெடி. ஆனா, கட்சியின் பொதுச்செயலாளரான சுதாகர் ரெட்டிகிட்டேயும், ராஜ்யசபாவுக்கு நிற்பதில் உறுதியா இருந்த டி.ராஜாகிட்டேயும் அவர் பேசுனப்ப, இருவருமே பரதனோட கருத்தை ஏத்துக்கலை. நிற்பது உறுதின்னு சொன்ன டி.ராஜா, அ.தி.மு.க. நம்மை ஆதரிக்கலைன்னாலும் தே.மு.தி.க.வோட ஆதரவை வாங்கி ஜெயிச்சிடுவேன்னு சொல்லியிருக்கிறார். இதை சி.பி.எம். தலைவர்களிடம் சொன்ன பரதன், நான் இப்ப பொதுச்செயலாளராகக்கூட இல்லை. அதனால என்னால மாற்று  முடிவை எடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாராம். அதனால சி.பி.எம். லீடர்களும் டி.ஆர்.பாலுகிட்டே, கூட்டணி விஷயத்தில் சி.பிஎம்.மும் சி.பி.ஐ.யும் சேர்ந்து செயல்படுவதுங்கிறதுதான் எங்க கொள்கை முடிவு. சி.பி.ஐ. விரும்பாத நிலையில் நாங்க தி.மு.க.வோடு சேர்ந்து செயல்பட முடியாது, ஸாரின்னு சொல்லி அனுப்பிட்டாங்க.''

""தி.மு.க.வின் முதல் மூவ் தோல்வியடைஞ்ச நிலையில், அடுத்த ஸ்டெப் என்னவாம்?''


""தே.மு.தி.க. சுதீஷின் மாமியார் இறந்துபோனப்ப அஞ்சலி செலுத்துறதுக்காக தி.மு.க. எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன் போனாரு. துக்க வீட்டிலேயே இரண்டு பேரும் பேச, நாளைக்குப் பால் தெளிப்பு முடிஞ்சதும் மாமாகிட்டே, அதாவது  விஜயகாந்த்கிட்டே இதுபற்றி பேசிட்டு சொல்றேன்னு சுதீஷ் சொல்லியிருக்காரு. மறுநாள், சனிக்கிழமையன்னைக்கு தி.மு.க. வேட்பாளரா கனிமொழி நாமினேஷனும் பண்ணிட்டாரு. அதேநேரத்தில், சி.பி.ஐ.கட்சி தரப்பிலிருந்தும் தே.மு.தி.க.கிட்டே ஆதரவு கேட்டிருக்காங்க. கட்சி நிர்வாகிகளோடு விஜயகாந்த் ஆலோசனை நடத்தியிருக்காரு. நாமும் நிற்கலாம்னு பலரும் சொன்னதோடு, நமக்கு ஆதரவு கேட்டு சி.பி.எம்.மிடம் பேசலாம்னும் சொல்லப்பட்டிருக்குது. அதன்படி, சி.பி.எம். கிட்டே தே.மு.தி.க. தரப்பு பேசுனப்ப, நீங்க சி.பி.ஐ.யையே ஆதரிக்கலாமேன்னு சி.பி.எம். நிர்வாகிகள் சொல்லியிருக்காங்க. அதற்கு விஜயகாந்த், அந்தக் கட்சிக்கு தா.பாண்டியன் தலைமையேற்றிருக்கும் வரை நான் ஆதரவு தரமாட்டேன்னு சொல்லிட்டாராம். சி.பி.ஐ. யோடு சேர்ந்தே பயணிக்கும் கொள்கை முடிவில் இருக்கும் சி.பி.எம்.மால் அதற்குமேல் தே.மு.தி.க.வோடு தொடர்பை நீடிக்க முடியலை.''


""தி.மு.க.- தே.மு.தி.க. உறவுக்கான  பேச்சு களும் அதற்கப்புறம் தொடரலையா?''


""கலைஞரோ ஸ்டாலினோ பேசினால் பார்ப்போம்ங்கிறதுதான் விஜயகாந்த்தோட நிலைங்கிறதை நாம ஆரம்பத்திலிருந்தே சொல்லிக்கிட்டிருக்கோம். இந்த விஷயத்தில் ஸ்டாலின் கொஞ்சம் தயக்கம் காட்டினாலும், கலைஞரின் மனநிலையையும் அவர் தூங்கமுடி யாமல் தவிப்பதையும் புரிஞ்சிக்கிட்டு ஞாயிற் றுக்கிழமையன்னைக்கு விஜயகாந்த்தைத் தொடர்பு கொள்ள ஸ்டாலின் முயற்சித்தப்ப அவர் லைனில் வரலை. சுதீஷ்தான்  பேசியிருக் காரு. தி.மு.க. தரப்பு ஓரளவு நம்பிக்கையாவும் இருந்திருக்கு. ஆனா, அதேநாளில் நடந்த தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் வேறு மாதிரியான குரல்கள் ஒலிக்க ஆரம்பிச்சிடிச்சி.

""தேர்தலில் தே.மு.தி.க.வும் போட்டி யிடணும்ங்கிற குரல்கள்தானே?''


""ஆமாங்க தலைவரே.. எம்.எல்.ஏ.க்கள் பலரும் அப்படிப் பேசுனதுக்கு பின்னணியில் இருந்ததே விஜயகாந்த்தானாம். நாம்தான் நிற்கணும்ங்கிற தொனியில பேசுங்கன்னு அவர் சொல்லியிருந் தாராம். நம்மை காங்கிரஸ் ஆதரிக்கும்ங் கிற பேச்சும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் வெளிப்பட்டிருக்குது. அது கேப்டன் நியூஸ் சேனலிலும் ஃப்ளாஷ்நியூஸாக ஓட, தி.மு.க. தரப்பு படு அப்செட்.''


""ம்...''

""அதே ஞாயிற்றுக்கிழமை சி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழுவும் கூடி ஆலோசித்தது. டி.ராஜா, சுதாகர் ரெட்டி இருவரும் கலந்துக்கிட்டாங்க. அப்ப தா.பா.வோட ஆதரவாளர்கள், நீங்க டி.ராஜாதான் வேட்பாளர்னு அறிவிச்சிட்டீங்க. அதனாலதான் இவ்வளவு சிக்கல்னு சொல்ல, அகில இந்திய செயற்குழுவில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதுன்னு சுதாகர் ரெட்டி சொல்லியிருக்காரு. அதற்கு தா.பா ஆதரவாளர்கள், இங்கே மாநிலக்குழுக்கூடி ஆலோசித்திருக்குது. அதுகிட்டே நீங்க வேட்பாளர் பட்டியல் கேட்டிருக்கணும். அதிலிருந்து ஆலோசித்து முடிவெடுத்திருக்கணும். நீங்களா எப்படி முடிவெடுக்கலாம்னு கேட்க, கூட்டத்தில் காரசாரமான விவாதம் ஓட ஆரம்பிச்சிடிச்சி. நிலைமை விபரீதமாவதைப் பார்த்து தா.பா.வே குறுக்கிட்டிருக்காரு.''

""அவர் என்ன சொன்னாராம்?''


""நான் சி.எம்.கிட்டே பேசி, அ.தி.மு.க. ஆதரவை நம்ம கட்சிக்கு வாங்கித் தர்றேன். கட்சித்தலைமையின் விருப்பம் போலவே வேட்பாளர் தேர்வு இருக்கட்டும்னு சொல்லியிருக் காரு. அதோடு, சி.பி.ஐ. செயற்குழுவில் இன்னும் பல உள்விவகாரங்களும் அலசப்பட்டிருக்குது. கூட்டம் முடிந்ததும் ஓ.பி.எஸ். உள்ளிட்ட அமைச்சர்கள்கிட்டே தா.பா. பேசியிருக் காரு. சி.பி.ஐ. சார்பில் என்னைத்தான் வேட்பாளரா நிறுத்தணும்னு விரும்பிய அம்மாவுக்கு நன்றி சொல்லிடுங்க. இப்ப கட்சிக்குள்ளே பலத்த நெருக்கடி. இந்த நிலையில், சி.பி.ஐ. வேட்பாளருக்கு அ.தி.மு.க.வோட ஆதரவு அவசியத் தேவைன்னு சொன்னதோடு, பேராதரவை உகந்த வழியில் தந்து உதவிட கேட்டுக்கொள்கிறேன்னு ஜெ.வுக்கு லெட்டரும் எழுதிக் கொடுத்திருக்காரு. சி.பி.ஐ. கேட்கும் ஆதரவு, தி.மு.க.வுக்கு போதிய பலமில்லாத நிலை, தே.மு.தி.க. சார்பில் வேட்பாளரை நிறுத்த நினைக்கும் விஜயகாந்த்தின் திட்டம் எல்லாவற்றையும் அறிந்த ஜெ., லோக்சபா தேர்தலுக்கான கூட்டணியை உறுதி செய்துகொள்ளும் கணக்கோடும், காங்கிரஸ் தயவை தி.மு.க. நாட வேண்டிய நெருக்கடியை உருவாக்கும் திட்டத்தோடும் சி.பி.ஐ வேட்பாளருக்கு அ.தி.மு.க. ஆதரவுங்கிற முடிவுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்துட்டாராம்.''

""அதனாலதான் திங்கட்கிழமை யன்னைக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த டி.ராஜாவும் தோழர்களும் ஜெ.வை சந்திப்பதற்காக தலைமைச் செயலகத்தில் காத்திருந்தாங்களா?''


""ஆதரவை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகத்தான் இந்தக் காத்திருப்பு. அதே நாளில்தான் தி.மு.க.வின் நிர்வாகக் குழு கூடியது. தே.மு.தி.க. தரப்பிலும் ஆலோசனை நடந்தது. ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவதுன்னு அவங்க முடிவெடுக்க, நான் நிற்கமாட்டேன்னு ஒதுங்கிக்கொண்ட சுதீஷ், வேற இரண்டு பேரை சிபாரிசு செய்திருக்காரு. ஆனா விஜயகாந்த்தோ, கட்சியின் பொருளாளர் இளங்கோவனை நிறுத்துவதா அறிவித் தார். தலைமைச் செயலகத்தில் காத்திருந்த கம்யூனிஸ்ட் தலைவர்களை சந்தித்த ஜெ., உங்க வேட்பாளருக்காக நாங்க வாபஸ் வாங்கிக்கிறோம்னு சொல்ல, எல்லோரும் நன்றி சொன்னாங்க. டி.ராஜா எழுந்து நின்று நன்றி சொல்ல, பேச்சு அப்படியே தேசிய அரசியல் பக்கம் பற்றி வந்திருக்குது. பா.ஜ.க.வுக்குள்ளேயே பிரச்சினை, காங்கிரசும் நமக்கு எதிரின்னு சொன்ன கம்யூனிஸ்ட் பிரமுகர்கள், ஒவ்வொரு மாநிலத்திலும் வெற்றி பெறும் கட்சிகளை ஒருங்கிணைத்து மூன்றாவது அணி அமைக்க இடதுசாரிகளால்தான் முடி யும்னு சொல்லியிருக்காங்க. நல்ல மூவ்னு அதை ஜெ.வும் ஆமோதிச்சதோடு, ஏப்ரலில் நடக்கும் ராஜ்யசபா தேர்தலில் சி.பி.எம்மின் எம்.பி. பதவி காலியாவதால அதை அவங்களுக்கு ஒதுக்கணும்னு சி.பி.ஐ. தலைவர்கள் சொன்னதற்கும் சம்மதம் சொன்னாராம். சி.பி.ஐ. தோழர்களுக்கு அளவுகடந்த சந்தோஷம். நின்றே தீருவேன்னு டி.ராஜா உறுதிகாட்டியதற்கு கிடைச்ச வெற்றிதான் இதுன்னு அவங்க பேசிக்கிட்டாங்க. இந்தத் தகவல்களெல் லாம் தி.மு.க. நிர்வாகக்குழு நடந்துகொண்டி ருந்த  அறிவாலயத்திற்குப் போனது. ஆனா, ராஜ்யசபா தேர்தல் பற்றி எதுவும் பேசாமல் சேதுசமுத்திரத் திட்டத்துக்காக மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்துப் போராட்டம்னு ஆலோசனை நடந்துக்கிட்டிருந்தது.''


""ராஜ்யசபா தேர்தலில் கனிமொழியை நிறுத்தியிருக்கும் தி.மு.க. எந்தக் கணக்கில் ஜெயிக்கப் போகுதாம்?''


""காங்கிரஸ் ஆதரவைக் கேட்பதைத் தவிர வேறு வழியில்லைன்னு கணக்குப் போட்டுத்தான் ஜெ. காய் நகர்த்தியிருக் கிறார். ஆனா, பிறந்த நாள் வாழ்த்து சொல் வதற்காக கோபால புரத்துக்கு ஜெயந்தி நடராஜன் வந்தப்ப கூட காங்கிரஸ் உறவு பற்றி கலைஞர் எது வும் பேசலையாம். உங்களுக்கு ஆதரவு  தேவைன்னா  நாங்க அளிக்கத் தயாரா இருக்கோம்னு ஜெயந்தி முன்வந்து சொன்னப்பவும் கலைஞர் எதுவும் கமிட் பண்ணிக்கலை யாம். திரும்பவும் காங்கிரஸ் ஆத ரவுன்னு போனால் சரியாக இருக்குமான்னு அவர் யோசிக்கிறாரு. காங்கிரஸ் ஆதரவு எங்களுக்குத்தான்னு தே.மு.தி.க. தரப்பு வேறு கிலியைக் கிளப்பியிருக்கு.''

""தி.மு.க. என்னதான் செய்யப்போகுது?''


""இத்தனை காலமும் தி.மு.க.வின் 18 எம்.பி.க்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 1 எம்.பி.யின் தயவு காங்கிரசுக்குத் தேவைப் பட்டு வந்தது. நாளைக்கு உணவு பாதுகாப்பு மசோதா போன்றவற்றை நிறைவேற்றணும் னாலும் இந்த ஆதரவு தேவைப்படும், அதனால காங்கிரஸ் கட்சி தானாக வந்து ஆதரிக்கும்ங்கிற ஒரு கணக்கு இருக்குது. இதற்காக டெல்லியில் கனிமொழி தரப்பு ஒரு லாபி பண்ணிக்கிட்டிருக்குது. அதேநேரத்தில், விஜயகாந்த்தை கையிலெடுத்துக் கொண்டு தி.மு.க.வை கூட்டணிக்குக் கொண்டு வர காங்கிரஸும் சோனியாவும் டபுள் கேம் ஆடுவதாகவும் தகவல்கள் கசியுது.''

""இந்த ஆட்டத்தை தி.மு.க. தலைமை எப்படி சமாளிக்கப் போகுதாம்?''


""விஜயகாந்த் தரப்புடன் மூவ் தொடர்ந்துகிட்டுத் தான் இருக்குதாம். ஜனநாயகத்துக்கு குழிவெட்டும் அ.தி.மு.கவுக்கு எதிராக நாம் ஓரணியில் திரண்டாக வேண்டிய அவசியம் இருக்குதுன்னு பேசப்பட்டிருக்கு தாம். அதனால, இந்த முறை தி.மு.க. வேட்பாளரை ஆதரிங்க. 2ஜி கேஸ் போன்றவற்றை சமாளிக்க வேண்டியிருப்பதால் எங்களுக்கு எம்.பி. பதவி தேவைப் படுதுன்னும், ஏப்ரலில் காலியா கும் ராஜ்யசபா இடத்தை தே.மு. தி.க. பெறுவதற்கு தி.மு.க. ஆதர வளிக்கும்னும் சொல்லப்பட்டிருக் காம். லோக்சபா தேர்தல்  பற்றி யெல்லாம் அப்புறம் பேசிக்க லாம்ங்கிறதுதான் இப்ப உள்ள டீல். இந்த முறை தி.மு.க.வுக்கு ஏப்ரலில் தே.மு.தி.க. வுக்குங்கிற மூவ்வுக்கு விஜயகாந்த் ஒப்புக் கொண்டால், ஸ்டாலினே நேரில் போய் அவரை சந்திப்பாராம். இதே நேரத்தில் பா.ம.க.வின் 3 ஓட்டுகளை வாங்க துரைமுருகன் பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பிச் சிட்டாரு. ம.ம.க., புதிய தமிழகம் கட்சிகளையும் சாதகமாக கொண்டுவர தீவிர முயற்சி நடக்குது. ராஜ்யசபா தேர்தல் பர பரப்பாகத் தெரிந்தாலும் முடிவு சுபமாக இருக்கும்னு தி.மு.க. நினைக்குது.''

""தி.மு.க.-தே.மு.தி.க. ஆதரவு முயற்சிகள் பலிக்காமல்போய், போட்டி உறுதியாயிடிச்சின்னா, யாரு ஜெயிப்பாங்கன்னு அ.தி.மு.க தலைமை உன்னிப்பா கவனிக்குமே?''

""அதைப் பற்றி நான் சொல்றேன். கோட்டையில் கம்யூனிஸ்ட் தலைவர்கள்- ஜெ. பேசும்போது இது சம்பந்தமா பேச்சு வந்திருக்குது. போட்டின்னு  வந்தால் கனிமொழிக்குத்தான் வெற்றி.. தே.மு.தி.க. ஜெயிக்காதுன்னு ஜெ. சொல்லியிருக்கிறார். தே.மு. தி.க.விலிருந்து விலகிய 7 எம்.எல்.ஏ.க்கள் சைடிலிருந்து தி.மு.க. பக்கம் ஓட்டு விழலாம்னு எதிர்பார்ப்பு இருக்குது.''

ad

ad