புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூன், 2013

அரசின் உதவியால் உத்தர்கண்ட மாநிலத்திலிருந்து தமிழகம் திரும்பிய பயணிகள்
[
உத்தர்கண்ட் மாநிலத்தில் யாத்திரை சென்று வெள்ளத்தில் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த 103 பக்தர்கள், அரசின் முயற்சியால் பத்திரமாக சென்னை திரும்பியுள்ளனர்.
 உத்தரகண்ட் மாநிலத்தில் ருத்ர பிரயாக் மற்றும் சமோலி மாவட்டங்களில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய திருத்தலங்களுக்கு யாத்திரை சென்ற தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகள் அங்கு பெய்த பெருமழை மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றின் காரணமாக தமிழகம் திரும்ப முடியாமல் சிக்கித் தவித்தனர்.
யாத்திரிகர்களை உடனடியாக தமிழகத்திற்கு கொண்டு வரும் வகையில், டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு சிறப்புப் பிரதிநிதி ஜக்கையன் தலைமையில், டெல்லி தமிழ்நாடு இல்லத் தலைமை ஆணையர், தமிழ்நாடு வருவாய்த் துறை செயலாளர் மற்றும் மாநில நிவாரணம் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ஆகியோர் அடங்கிய ஓர் உயர்மட்டக் குழுவினர் அமைக்கப்பட்டது.
இந்த உயர்மட்டக் குழுவினர், உத்தரகாண்ட் மாநில அரசு மற்றும் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு, தமிழகத்தைச் சேர்ந்த யாத்திரிகர்களை உடனடியாக அரசு செலவில் ஹெலிகாப்டர் மூலம் டேராடூன் அழைத்து வந்து பின்னர் அங்கிருந்து அவர்களை டெல்லிக்கு அழைத்து வந்து, பின் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வருவார்கள் என தெரிவிக்கப்பட்டது.
57 பேர் மீட்பு இதன்படி முதலில்
57 பேரை மீட்டு அன்று டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். டெல்லி தமிழ் நாடு இல்லத்திற்கு அழைத்து வரப்பெற்ற 25 ஆண்கள் மற்றும் 32 பெண்கள் என 57 யத்ரிகர்களை, மீட்புப் பணிக்காக நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழுவினர் வரவேற்றனர். தமிழ் நாடு இல்லத்தில் தங்கவைக்கப்பட்ட இந்த யாத்ரிகர்கள் அனைவரும் பின்னர் விமானம் மூலம் சென்னை அனுப்பி வைக்கப்பட்டனர்.
கண்ணீர் விட்ட பயணிகள்
உணவு, தங்குமிடம் பயணச்செலவு ஆகிய அனைத்து செலவுகளையும் தமிழக அரசே ஏற்றுக் கொண்டுள்ளது. மீட்கப்படும் பயணிகள் தொடர்ந்து ஒவ்வொரு கட்டமாக விமானத்தில் அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 103 பேர் வரை சென்னை திரும்பியுள்ளதாக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை திரும்பிய பயணிகளை உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர். இது தங்களுக்கு கிடைத்த மறுபிறவி என்று மீண்டு வந்த பயணிகள் தெரிவித்தனர். திருவெற்றியூரில் இருந்து யாத்திரை சென்ற குழுவில் 7 பேரை காணவில்லை அவர்களை தேடும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.
அவசர உதவி எண்கள் யாத்திரிகர்களின் உறவினர்கள் சிக்கித் தவிக்கும் பயணிகள் குறித்த தகவல் அறிந்து கொள்ள டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் ஓர் உதவி மையத்தினை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு தொடர்புக்கொள்ள 011-24193455, 011-24193456 ஆகிய தொலைபேசி எண்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதே போன்று, சென்னையில் உள்ள நிவாரண ஆணையர் அலுவலகத்தில் கட்டணமில்லா தொலைபேசி எண் 1070 ஏற்படுத்தப்பட்டுள்ளது. யாத்திரிகர்களின் உறவினர்கள் மேற்காணும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
PrintSendFeedback
 

ad

ad