புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூன், 2013

னநாயகம், சட்டம் ஒழுங்கு, மனித உரிமை, நீதி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இலங்கை கூடுதல் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளின் போது கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதனை இலங்கை அரசாங்கம் நிரூபிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பிரித்தானிய பிரதமர் டேவின் கமரூன் பங்கேற்பார் என தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் மீது பிரித்தானியா கொண்டுள்ள மரியாதையின் காரணமாக அமர்வுகளில் பங்கேற்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமர்வுகளை ஏற்பாடு செய்யும் நாடு என்ற ரீதியில் இலங்கை பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகள் கோட்பாடுகளை மதித்து செயற்பட வேண்டுமென ஏற்கனவே வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டர் பர்ட் அறிவித்துள்ளார் என ஜோன் ரான்கீன் தெரிவித்துள்ளார்.

ad

ad