புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஆக., 2013

வடமாகாண சபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோதராதலிங்கம் தலைமையில் இடம்பெறவுள்ளது. இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளருமான சி.வி.விக்கேஸ்வரன், இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிகாந்தா, வீ.ஆனந்தசங்கரி, ரி.சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளனர். இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுகின்ற 8 வேட்பாளர்களின் அறிமுகமும் இடம்பெறவுள்ளது.

பிரச்சாரப்பிரிவு
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு


சிவகார்த்திகேயன் குடும்பத்தில் குழப்பம் : காரணம் பிந்துமாதவி?

சப்ரகமுவையில் இணைந்து செயற்பட்டமைக்கு இதொகா தந்த பரிசுதான் என்மீது கொட்டகலையில் நடத்தப்பட்ட தாக்குதல் - மனோ

குறைந்த தொகை தமிழர்கள் வாழும் மாவட்டங்களில் தமிழ் பிரதிநிதித்துவம் பெற்றுகொடுக்க அரசியல் பேதங்களை மறந்து இணைந்து செயல்பட வேண்டும். இத்தகைய தமிழின உணர்வுடன் இரத்தினபுரி,

வைத்தியர் என்ற போர்வையில் சட்டவிரோதமான முறையில் பெருந்தொகையான கருக்கலைப்பு மற்றும் கருத்தடை மாத்திரைகளை இலங்கைக்கு கொண்டுவந்த நபரொருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கருக்கலைப்பு மாத்திரைகள் 17,740 , கருத்தடை மாத்திரைகள் 3,200, வயகரா மாத்திரைகள் 1000 ஆகியவற்றை கொண்டுவந்துள்ளார்.

இலங்கைக்கும் பெலாரசுக்குமிடையில் ஏழு உடன்படிக்கைகள் மற்றும் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் நேற்று கைசாத்திடப்பட்டுள்ளன.

தற்பொழுது பெலாரஸ் நாட்டில் மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள 

ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட நகை, உட்பட அசையும் சொத்தை ஒப்படைக்கக் கோரி திமுக புதிய மனு
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் புதிய மனு ஒன்றை பெங்களூரு சிறப்பு
நரிக்குறவர் / குருவிக்காரர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

நரிக்குறவர் அல்லது குருவிக்காரர் என்றழைக்கப்படும் இனத்தவரை பழங்குடியினருக்கான பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

ஆற்காடு வீராசாமி ஆஸ்பத்திரியில் அனுமதி
திமுக முதன்மை செயலாளர் ஆற்காடு வீராசாமி சென்னை அண்ணாநகரில் உள்ள வீட்டில் தினமும் காலையில் நடைபயிற்சி செல்வார். நடைபயிற்சி செல்லும் போது உதவியாளர் ஒருவர் துணைக்கு செல்வார். நேற்று முன்தினம்
கிளிநொச்சியில் நவி. பிள்ளையைச் சந்திக்க காத்திருந்தவர்களை ஓடஓட விரட்டி பஸ்களில் ஏற்றிய பொலிஸார்
கிளிநொச்சியில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையைச் சந்நிக்கவிடாது காணாமல்போனவர்களது உறவுகளை பொலிஸாரும், புலனாய்வாளர்களும் இணைந்து  விரட்டியடித்துள்ளனர்.
காணாமல் போனவர்களின் உறவினர்களை நவநீதம்பிள்ளை சந்திக்கவிடாது தடுத்தனர் இலங்கை அரச பிரதிநிதிகள்!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை யாழ்ப்பாணம் வருகை தரவுள்ள நிலையில் யாழ்.நூலகத்திற்கு முன்னால் காணாமல் போனவர்களின் உறவினர்கள் அவரைச் சந்திப்பதற்காக காத்து நின்ற வேளை அரச பிரதி நிதிகளினால் நவநீதம்பிள்ளை தடுக்கப்பட்டுள்ளார்.
யாழ்.நுலகத்தைப் பார்வையிடுவதற்கு நவநீதம்பிள்ளை வந்த போது காணாமல் பேனவர்களின்
போரின் போது காணாமல் போனவர்கள் தொடர்பில் ஐ.நா விசேட கவனம் செலுத்தும்!- யாழில் நவநீதம்பிள்ளை
இறுதிக் கட்டப் போரின் போது காணாமல் போனவர்கள் தொடர்பில் ஐ.நா விசேட கவனம் செலுத்தியுள்ளதாக நவநீதம்பிள்ளை தன்னைச் சந்தித்த போது தெரிவித்ததாக யாழில் எழிலனின் மனைவி ஆனந்தி தெரிவித்துள்ளார்.
யாழில் நவநீதம்பிள்ளைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை வேட்பாளர் எழிலனின் மனைவி ஆந்தியைச் சந்தித்து பேச்சுவார்தை நடத்தியதாகவும், இதில் காணாமல் போனவர்கள் தொடர்பில் ஜ.நா விசேட கவனம் மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அனந்தி நவநீதம்பிள்ளையை சந்தித்தார்! காணாமல்போனோர் தொடர்பில் ஐ.நா விசேட கவனம் செலுத்தும் என உறுதி
யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி எழிலனின்
அலை அலையாகத்திரண்ட மக்கள் வெள்ளம் வவுனியா கலைமகள் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மாபெரும் வேட்பாளர் அறிமுக நிகழ்வில்.....
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்டத்திற்கான மாபெரும் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் இன்று வவுனியா குருமண்காடு கலைமகள் விளையாட்டரங்கில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது
அம்பாறை தங்கவேலாயுதபுரத்தில் பௌத்த விகாரை அமைக்கும் திட்டத்தை நிறுத்துக: யோகேஸ்வரன் எம்.பி. அரசாங்க அதிபருக்கு மகஜர்
அம்பாறை மாவட்டத்தில் பௌத்த அடையாளங்களோ பௌத்த குடும்பங்களோ இல்லாத தங்கவேலாயுதபுர பிரதேசத்தில் பௌத்த பிக்குகள் மற்றும் இனவாதிகள் இணைந்து பௌத்த விகாரையொன்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதை ஒதுபோதும் அனுமதிக்க முடியாது என பாராளுமன்ற

யாழில் கடந்த இரண்டு வாரங்களுள் 17 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு

யாழ். மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரத்துக்குள் மட்டும் 17 தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அம் முறைப்பாடுகள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கைகளை

சுவிட்சர்லாந்தில் தந்தை ஒருவர் தனது இரண்டு குழந்தைகளை கடத்தி கொண்டு சென்று எரித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் சிம்மன்போடிலி(Simmenbödli-SG) என்ற இடத்தில் உள்ள இரண்டு மற்றும் ஐந்து வயது குழந்தைகள் இறந்து கிடந்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் தந்தை ஒருவர் தனது இரண்டு குழந்தைகளை கடத்தி கொண்டு சென்று எரித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் சிம்மன்போடிலி(Simmenbödli-SG) என்ற இடத்தில் உள்ள இரண்டு மற்றும் ஐந்து வயது குழந்தைகள் இறந்து கிடந்துள்ளனர்.
நைஜீரியாவில் 44 கிராமத்தினர் கழுத்தறுத்து படுகொலை: தீவிரவாதிகள் அட்டகாசம்

வடகிழக்கு நைஜீரியாவின் கிராமத்துக்குள் புகுந்த போகோ ஹரம் தீவிரவாதிகள் கிராமத்தினர் 44 பேரின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதல் விவகாரம்: இத்தாலியில் இலங்கை சிறுமி தற்கொலை
இத்தாலியின் மெஸ்சினா நகரில் வசித்து வந்த இலங்கையை சேர்ந்த 15 வயதான சிறுமி கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இத்தாலி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுமி தனது ஆசிரியரான 19 வயதான இளைஞருடன் ஏற்படுத்தி கொண்ட காதல் தொடர்பை பெற்றோர் எதிர்த்தன் காரணமாகவே சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பொதுக்கூட்டம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பொதுக்கூட்டம் வவுனியா குருமண்காடு கலைமகள் திறந்தவெளி விளையாட்டரங்கில் இன்றுமாலை 5மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.
கூட்டமைப்பின் ஐந்து
பிரபாகரன் நடாத்திய வீரம்செறிந்த போராட்டமே தமிழினத்தை தலைநிமிர வைத்தது: வீரபுரத்தில் ரதன் முழக்கம்
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீரம் செறிந்த விடுதலைப் போராட்டமே தமிழினத்தை தலைநிமிர வைத்துள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணித்தலைவரும் வடமாகாணசபை வேட்பாளருமாகிய எம்.எம். ரதன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான தேர்தல் அலுவலகத்தை வீரபுரத்தில் திறந்து வைத்து உரையாற்றுகையில் தெரிவித்தார்.
இந்நிகழ்விற்கு செட்டிகுளம் பிரதேசசபையின் உப தலைவர் எஸ். சந்திரன் தலைமை தாங்கினார்.  இந்நிகழ்வில் அலுவலகத்தினை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நாடாவை வெட்டி திறந்து வைத்தார்.



தர்சனானத் பரமலிங்கம் அவர்கள் கூட்டமைப்பு பிரசாரத்துக்கு சென்ற போது அவதானித்தது. எமது மக்களின் தேசிய உறுதி நிலைப்பாட்டை.

இடம்: வடமராட்சி, பருத்தித்துறை தொகுதி, புலோலி காந்தியூர்

இறுதிப் போரில், அமெரிக்கா மரைன் படைகளை அனுப்பி புலித் தலைவர்களை காப்பாற்ற எத்தனித்தது. அந்த திட்டத்திற்கு ராஜபக்ச அரசு எதிர்ப்பு தெரிவித்தது, இந்திய அரசு ஆதரிக்கவில்லை. இந்தியாவின் அரசியல் செல்வாக்குக்கு உட்பட்ட நாடொன்றில், அமெரிக்க தலையீடு ஏற்படுவதை இந்தியா விரும்பவில்லை. அமெரிக்காவின் திட்டம் நிறைவேறி இருந்தால், இந்தியாவால் எந்தக் காலத்திலும் ஈழத் தமிழர்களுக்கு உதவ முடியாமல் போயிருக்கும்." என்கிறார் முன்னாள் இந்திய உளவுத்துறை அதிகாரி கேர்ணல்ஹரிஹரன் தந்தி டிவி நேர்காணலில் கேர்னல் ஹரிஹரன்.

ஆளும் தரப்பின் எடுபிடிகளாக பொலிஸ்! கூட்டமைப்பு வேட்பாளரை கொலை செய்ய முற்பட்ட பொலிஸ் அதிகாரி!

யாழ்.பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி சமன்சிகாரா தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை வேட்பாளர் தம்பிராசா.
குற்றஞ்சாட்டியுள்ளார்.யாழ்.நகரப்பகுதியினில் தன் மீது நடத்தப்பட்ட சுதந்திரக்கட்சி ஆதரவாளர்களது தாக்குதல் பற்றி நியாயம் கேட்கச்சென்றிருந்த வேளையினிலேயே தன்னை கொலை செய்ய அவர் முயற்சித்ததாக தம்பிராசா மேலும்

ஆனந்திக்காக அதிர்ந்த வீரசிங்கம் மண்டபம்!!

யாழ்ப்பாணத்தினில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பெறப்போகும் ஆசனங்களே அறுதிப்பெரும்பான்மையின்மையினை பெற்று ஆட்சி அமைக்க முடியுமா? இல்லையா? என்பதை தீர்மானிக்கும்.ஆனாலும் இதை செய்ய

ad

ad