இது தொடர்பாக அமைச்சர் விஜய் தணிகாசலம் கருத்துத் தெரிவிக்கையில், “எங்கள் அரசாங்கம் $75.5 மில்லியான் டொலர்களை முதலீடு செய்து வீடற்றவர்களின் நிலைமையைத் தடுப்பதற்கும், முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நியாயமான மாற்றுத் தங்குமிடத்திற்கான அணுகலை வழங்குவதற்கும் மேலும் முதலீடு செய்கிறது” என்றார். இது ஒவ்வொரு ஆண்டும் வீடற்றோர் தடுப்பு திட்டங்களில் மாகாணத்தின் தற்போதைய $700 மில்லியன் முதலீட்டிற்கும், அத்துடன் 19 வீடின்மை மற்றும் போதைக்கு அடிமையானோர் மீள்வாழ்வு மேம்பாட்டு இணைப்பு மையங்களுக்கான (HART) மாகாணம் முதலீடு செய்யும் $378 மில்லியனுக்கும் கூடுதலாகும் என்பது குறிப்பிடத்தக்கது. |