அவைத் தலைவர் காரியாலயத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் தகவல்களின் அடிப்படையில் நாடாளுமன்ற இணையத்தளத்தில் அமைச்சர் ஹர்ஷனவின் பெயருக்கு முன்னால் கலாநிதி பட்டம் போடப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. எனினும், அமைச்சர் தனிப்பட்ட ரீதியில் கலாநிதி பட்டம் தொடர்பில் கடிதம் வழங்கியிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, நாடாளுமன்ற இணையத்தளத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் சரியான முறையில் எழுதப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள பூரண ஆய்வு நடத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது |